Header Ads



ஆசிரியர் சேவையில், மௌலவிகளும் இணைய அரசு கவனம் செலுத்துமா..?

தற்போது எமது தாயகத்தின் பல பாடசாலைகளிலும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக அன்மைக்கால செய்திகள் எமக்கு எடுத்துக்காட்டுகிறது. எனவே இவ்வாறான ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக பலரும் தத்தமது கருத்துக்களை நாளாந்த செய்தி இதழ்கள் மூலம் முன்வைத்து வருவதனை  எம்மால் அவதானிக்க முடிகின்றது. அந்த வகையில் நானும் எனது மனமாந்த கருத்தை இத்தளத்தின் ஊடாக முன்வைக்கலாம் என இதனைப் பதிவிடுகின்றேன்.

அதாவது இன்று எத்தனையோ மாணவர்கள் படிக்கிறார்கள் ஆனால் அவர்கள் எல்லோருக்கும் பல்கலைக்கழகம் செல்ல வாய்ப்புக் கிடைப்பதில்லை அதற்கு காரணம் அவர்களுக்கு அறிவுத்திறன் இல்லாமையல்ல ண புள்ளி எனும் பல்கலைக்கழக மானியத்தின் நியம மதிப்பீட்டளவின் வரையறையாகும். 

இன்னும் அதே போல் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிலும் குறிப்பிட்ட மாணவ மாணவிகள் தான் இணைக்கப்படுகின்றனர் இன்னும் சில ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பல பாடத்திற்கான துறையும் அரிதாகத்தான் உள்ளது என்பதுதான் எதார்த்தமாகும்.

என்றாலும் மாணவர்கள் தங்களது முயற்சிகளை தளரவிடாது தனியார் தொழிநுற்பக்கல்லூரிகளில் தங்களுக்கு இயலுமான கலைகளில் கற்கை நெறியை பூரத்;தி செய்கிறார்கள்.எதற்காக எப்படியாவது அரசிடம் ஓர் தொழிலைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையிலாகும்.

மேலும் அவ்வாறே சில மாணவகள் பல வருடங்கள் பல கஷ்டத்தின் மத்தியில் அரசினால் அங்கிகரிக்கப்பட்ட அரபுக் கல்லூரிகளில் கல்வி கற்று சிறந்த மௌலவி உலமாக்களாக வருடா வருடம் பட்டம் பெற்று வெளியேறுகின்றார்கள் எனவே அவர்களும் கல்வித் துறையில் பூரண ஈடுபாடு காட்ட போட்டிப் பரீட்சைகள் மூலம் மௌலவி ஆசிரியர்களையும் தெரிவு செய்துகொள்ள சந்தர்ப்பம் வழங்க அரசு முன் வரவேண்டும் என  வேண்டிக்கொள்கின்றேன்.

உண்மையில் சிறந்த அறிவும,; ஆளுமைத் திறன்களும் கொண்ட அதிகமான  மௌலவிமார்கள் வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் தங்களது அறிவு, திறமைகளை பல துறைகளில் செலவு செய்து பலன் அடைகின்றனர். எனவே இப்படிப்பட்ட உலமாக்களின் அறிவுகளை எமது மாணவர்களின் அறிவுத் தாகத்தை தீர்க்கவும் சந்தர்ப்பம் வழங்க அரசிடம் எதிர் பார்கின்றோம்.

இங்கு கவனிக்கப்படவேண்டிய ஒரு முக்கியமான அம்சம் என்னவெனில் அன்று கல்வியமைச்சராக இருந்த பதியுதீன் மஹ்மூத் அவர்களின் அயராத முயற்சியினால் அதிகமான உலமாக்கள் மௌலவி ஆசிரியர்களாக அன்று சேர்த்துக் கொள்ளப்பட்டனர். மேலும் அதன் பின்னர் மிக நீண்ட இடைவெளிக்கப்பால் முன்னால் ஜனாதிபதி கௌரவ மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியிலும் (2010) மௌலவி ஆசிரியர்களுக்கான போட்டிப் பரீட்சை நடாத்தப்பட்டு சில மௌலவி ஆசிரியர்கள் கல்விச் சேவையில் சேர்க்கப்பட்டனர் என்பதும் இங்கு குறிப்பிடதக்கதாகும்.

எனவே நல்லாட்சி என சொல்லப்படும் இன்றைய ஆட்சியிலும் மௌலவி ஆசிரியர்களுக்கான போட்டிப் பரீட்சை இதுவரை நடைபெறவில்லை என்பதுதான் எமக்கு கவலையைத் தருகின்றது எனவே  மௌலவி ஆசிரியர்களுக்கான போட்டிப் பரீட்சை ஒன்றை நடாத்த கல்வி அமைச்சும் மற்றும் மாகாண கல்விப் பணியகமும் இணைந்து அரசிடம் கோரிக்கை வைக்குமாறு அன்பாய் வேண்டிக்கொள்கின்றேன்.

ஏ.எல்.எம்.அஸ்ஹர் (ஹாமி)

1 comment:

Powered by Blogger.