October 09, 2016

"கல்வியற்கூட முஸ்லிம் மாணவ, மாணவிகளின் கலாசாரப்போக்கு"

-றிப்ஸாத் ரிஸ்வி-

கல்வி கற்பதன் அவசியம் சம்மந்தமாக உலகத்தில் இற்றை வரை தோற்றம் பெற்ற எல்லா வேதாந்தங்களும் சித்தாந்தங்களும் கூறத்தவறியதில்லை. அதிலும் குறிப்பாக மனிதனின் முழு வாழ்க்கைக்குமே  நல்வழிகாட்ட முனையும் மதங்களில் தனது வேதவாக்கின் தொடக்கத்தையே அறிதலிலும் அதனூடான புரிதலிலும் மையப்படுத்தியுள்ள மதம் என்றால் அது இஸ்லாமிய நெறிக்கோட்பாடு ஒன்றே ஆகும். ஆக இஸ்லாம் மார்க்கத்திலும் அதனையே வாழ்வியல் நெறியாக ஏற்று பின்பற்றும் முஸ்லிம் சமூகத்திலும் பால் வேறுபாடு இன்றி கற்றலின்பால் நாட்டம் கொள்ளவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இதனை அறிவைத் தேடிப் படிப்பது முஸ்லிமான ஆண்,பெண் இருபாலார் மீதும் கட்டாய கடமையாகும் எனும் நபி வாக்கில் இருந்து விளங்கிக் கொள்ளமுடிகிறது. 

எமது நாட்டில் உள்ள 16 அரச பல்கலைக்கழகங்களிலும் எமது மாணவர்கள் கல்வி கற்றுவருகின்றனர்.இவற்றுள் முஸ்லிம் சமூகத்தினுடைய சொத்து என்று எம்மவர்களால் மார்பு தட்டி இறுமாப்புடன் பேசப்படும் பல்கலைக்கழகமும்; உள்ளடங்குகிறது. ஆனால் இன்று உண்மையிலேNயு இந்த பல்கலைக்கழகத்தினுள் அரங்கேற்றப்டும் அநாச்சாரங்களை; சகித்துக் கொள்ள முடியாமல் உள்ளது. எமது முஸ்லிம் மாணவ,மாணவிகளது நெறிதவறிய நடவடிக்கைகளை பார்க்கின்ற போது இத்தருணத்திலும் எமது சமூகம் விழிப்படையவில்லை எனின் அதள பாதாளம் அடைவது திண்ணம் என்பது புலனாகின்றது. இப்பல்கலைக்கழகத்தில் கடந்த ஒரு சில வருடங்களுக்கு முன்னதாகவே சகோதர மொழி மாணவர்களது பிரவேசம் ஆரம்பமானது. ஆனால் இன்று அவர்களது போக்கின் நிலைமையோ ஏனைய நீண்ட காலமாக  பெரும்பான்மை சமூகத்தவர் அதிகம் காணப்படும் பல்கலைக்கழகங்களையே விஞ்சுமளவிற்கு வந்துவிட்டது.இங்கு மிகுந்த கவனத்தில் எடுக்கப்படவேண்டிய விடயம்  யாதெனில் அம்மாணவர்களோடு சேர்ந்து எமது முஸ்லிம் மாணவிகளது காமக்களியாட்டங்கள் கண்மூடித்தனமாக அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எமது சகோதரி ஒருவர் சிங்கள மாணவர் ஒருவருடன் உல்லாசமாக இருந்த போது வளாகத்தினுள் வைத்து பிடிக்கப்பட்டது இங்கு கல்வி கற்கும் எந்தவொரு மாணவரும் அறியாத விடயம் அல்ல. மேலும் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட பொறியியற் பீட சிங்கள மாணவர்களுடனான எமது ஒரு சில முஸ்லிம் மாணவிகளது அத்துமீறிய அநாகரிக உறவுகளும் அறியக்கிடைத்துள்ளது. 

மேலும் குறிப்பாக எமது மாணவிகள் விடுமுறை தினங்களில் சிங்கள மாணவர்களுடன் முஸ்லிம்களின் செறிவு குறைந்த இடங்களில் உள்ள விடுதிகளில் உல்லாசம் அனுபவிப்பதும்,வீட்டிற்கு சென்று வரும் வழிகளில் தனியாக சிங்கள மாணவர்களுடன் மோட்டார் சைக்கிளிலும், பஸ்ஸிலும் பயணிப்பதும் காணக்கூடியதாக உள்ளது. எவ்வாறாயினும் குறிப்பிட்ட இப்பல்கலைக்கழக மாணவ,மாணவிகளது கற்பொழுக்கம் வழிதவறிச் செல்வதென்பது இம்மியளவேனும் அனுமதிக்க முடியாதது. ஏனெனில் குறிப்பிட்ட சில மாணவிகளது செயற்பாடுகளால் ஒட்டு மொத்த முஸ்லிம் மாணவ சமூகமும் இலக்கு வைக்கப்பட்டு சாடப்படுவது என்பது அவ்வளவு ஆரோக்கியமானதொன்றல்ல. மேலும் தற்போது கூட முஸ்லிம் மாணவிகள் பலர் சிங்கள ஆண் மாணவர்களுடன் காதல் வயப்பட்டு மார்க்கம் அனுமதிக்காத அந்நியோன்யமான தகாதஉறவுகளை கொண்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. 

மேலும் குறிப்பிட்ட இந்த பல்கலைக்கழகம் மாத்திரம் அன்றி ஏனைய பல்கலைகழகங்களில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவ மாணவிகளது நடவடிக்கைகளும் கவனத்திற்கொள்ளப்பட வேண்டும். முஸ்லிம் மாணவ மாணவிகள் பொதுப்போக்குவரத்து மார்க்கங்களை பயன்படுத்தும் போது நடந்து கொள்ளும் முறையானது அந்நிய சமூகத்தவர்களே முகம் சுளிக்கும் அளவுக்கு படு கேவலமானதாகவுள்ளது. அதுபோக முஸ்லிம் பெண் மாணவிகள் தனியாகவோ அல்லது குழுமமாகவோ எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை சமூக வலையத்தளங்களில் பதிவேற்றி எமது முஸ்லிம் சமுகத்தின் கலாசார வரம்புகளை தகர்த்தெறிந்து விடக்கூடியதொரு நிலைமையும் காணப்படுகின்றது. இவ்வாறான சீரழிவுகள் நாளுக்குநாள் ஒன்று இரண்டாகி,இரண்டு நான்காகிக் கூடிக்கொண்டு செல்கிறதே தவிர குறிப்பிடத்தக்க அளவு மாற்றமேதும் அவதானிக்கப்படவில்லை.

எது எவ்வாறாக இருப்பினும் இவ்வாறான பாலியல் ஷேட்டைகளும், காமக்களியாட்டங்களும் பகிரங்கமாக பஸ்களிலும், பல்கலைகழக சாலையோரங்களிலும் எமது மாணவிகளினால் அரங்கேற்றப்படுகின்ற போதிலும் எமது முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள் கண்டும் காணாமல் அசமந்தத்தனமாக நடந்து கொள்வது மனவேதனைக்குரிய விடயமாகும். இதுபோன்ற மாரக்;கம் அனுமதிக்காத முஸ்லிம் சமூகத்தின் மானத்தை விலை பேசும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெறுமானால் எமது சமூகம் ஊழிக்காலத்தின் விளிம்புப்பகுதிக்கே செல்லும் என்பதில் இரண்டாம் வாதமேதும் இருக்காது.

இவற்றை முற்றிலுமாக இல்லாதொழிக்க நாட்டில்  உள்ள அனைத்து பல்கலைகழகங்களிலும் உள்ள முஸ்லிம் மஜ்லிஸ்கள் துணிவதோடு, மார்க்கத்தையும், ஷரீஆ சார்ந்த விடயங்களையும் நடைமுறைப்படுத்தும் விடயத்தில் யாருக்கும் அஞ்சத்தேவையில்லை என்பதையும் உணர தலைப்படவேண்டும்.மேலும் முஸ்லிம் மஜ்லிஸ்கள் மாணவர்களின் பெற்றோர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுதல்,தேவைப்படும் பட்சத்தில் முறைகேடாக நடக்கும் மாணவ,மாணவிகள் சம்மந்தமாக அவர்களது பள்ளிவாசல் மஹல்லாக்களுக்கும் எத்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கடந்த காலத்தைப் போல் அல்லாது புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியம் (யுருஆளுயு) இவ்வாறான நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முனைப்புடன் செயற்பட வேண்டும். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கல்விப்பிரிவு இந்த சமூக சீர்கேட்டை தடுத்து நிறுத்த தம்மாலான எல்லா நடவடிக்கைகளையும் காலம் தாழ்த்தாமல் எடுக்க வேண்டும்.மேலும் பெற்றோர்கள் தமது பிள்ளைகள் விடயத்தில் தனிப்பட்ட ரீதியில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். சமூக மாற்றத்தை எதிர்பார்க்கும் ஏனைய இஸ்லாமிய சமூக மேம்பாட்டு நிறுவனங்களும்  இந்த விடயத்தில்  கரிசனை கொண்டு பல்கலைக்கழக மாணவ,மாணவிகளுக்கு மார்க்க வழிகாட்டற் கருத்தருங்குகளை அடிக்கடி ஏற்பாடு செய்து அவர்களை தவறான வழியிலிருந்து மீட்டெடுக்க வேண்டும். இதற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் நீங்கள் அனைவரும் மேய்ப்பாளர்கள் உங்கள் மேய்ப்புக்கள் பற்றி மறுமையில் விசாரிக்கப்படுவீரகள் எனும் நபிவாக்கை நெஞ்சில் நிறுத்தி,அல்லாஹ்வைப் பயந்து தங்களால் முடியுமான காத்திரமான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என நம்புகின்றோம்.

3 கருத்துரைகள்:

திட்டமிட்டு முஸ்லிம் பெண்களை காதலித்து கல்யாணம் செய்வதற்கு ஒரு கூட்டம் திட்டம் தீட்டிக்கொண்டு இருக்கிறது.தடுக்க போனாலும் பெரும்பான்மையோடு சேர்ந்து சம்மந்தப்பட்ட பெண் நம்மவரகளாய் தண்டிக்கவும் சந்தர்ப்பம் இருக்கிறது ஆகவே கவனமாக கையாள வேண்டியுள்ளது

நெருப்பையும், பஞ்சையும் பக்கத்தில் வைத்து விட்டு அடிக்கடி மார்க்க வழிகாட்டல் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்வதில் என்ன பயன். ..?
இஸ்லாம் குட்டு பட்டு விட்டு குனிந்து செல்லும் மார்க்கமல்ல.....
மாஷா அல்லாஹ் அனைத்து வித ஆண், பெண் , அஜ்னபி, மஹ்ரமி உறவுமுறைகள் , அவர்களிடைய நடந்து கொள்ள வேண்டிய வரையறைகள் என்பவற்றை 1400 வருடங்களுக்கு முன்பே போதித்த மார்க்கம். ..
என்ன செய்வது....எமது அதிகமான பெற்றோர்களுக்கு எப்படியாவது எனது பிள்ளை பட்டம் பெற்றால் சரி. ...என்பது தான் இலட்சியம்....

இன்னும் அதுக்கென்றே சில உஸ்தாத் மார்களும் சிறுபான்மை நாட்டில் ஆடைக்குறைப்பு செய்யலாம் என்பதற்கு பத்வாக்கள் தேடி அலைகிறார்கள். ...
எப்படி உருப்படப்பபோகிறது இந்த பல்கலைக்கழக சீரழிவுகள்.....
இன்னும் அதிகரிக்குமா, இல்லை குறையுமா...?

ஒரு சம்பவத்தை இங்கு நினைவு கூறவேண்டும் .... எனக்கு மிக நெருக்கமான ஒரு குடும்பத்தில் தந்தை மகளை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பும் போது சொன்னார் "நீ உனக்கான கணவனையும் அங்கேயே பெற்றுக்கொள்"....
சுப்ஹானல்லா.....
நீங்கள் ஒவ்வருவரும் மேய்ப்பாளர்களே, உங்கள் மேய்ப்புகள் பற்றி விசாரிக்கப்படுவீர்கள்
-புகாரி, முஸ்லிம்-
இத்தகைய பெற்றோர்களை பாதுகாக்க அல்லாஹ் போதுமானவன்.

if you have proper evidence on this please share or submit to their parents they are the one who can make decisions over them, further same way male students who do / make this type of relationship with Muslim or non-Muslim female students first they have to stop that sort activities and lets pray ALLAH to guide them to a right path.

Post a Comment