October 27, 2016

முஸ்லிம் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படுவது, சவாலாக மாறியுள்ளது - ஹரீஸ்

புதிய அரசியல் அமைப்பு மாற்றத்தில் பேருவளை பிரதேசத்தில் முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றெடுக்க முஸ்லிம் காங்கிரஸ் போராடும் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

பேருவளை சீனங்கோட்டை அல் - ஹூமைசறா தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசழிப்பு விழா 2016 பாடசாலையின் எஸ்.எம். ஜாபீர் ஹாஜியார் ஞாபகார்த்த மண்டபத்தில்நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

முஸ்லிம்கள் செறிந்து வாழும் பேருவளையில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் இல்லாமல் இருப்பது இந்த பிராந்திய முஸ்லிம் சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு களத்திலிருந்து உடனடித் தீர்வை பெற்றெடுப்பதில் சிக்கல்கள் நிலவுகின்றது. கடந்த காலத்தில் அழுத்கம பிரதேசத்தில் அரங்கேற்றிய இன வெறியாட்டத்தில் எமது சமூகம் மிகவும் பாதிக்கப்பட்டது.
இந்த சந்தர்ப்பத்தில் இந்த பிரதேசத்தில் அரசியல் அதிகாரம் முஸ்லிம்களிடத்தில் இருந்திருந்தால் இதன் பாதிப்பினை கணிசமான அளவு குறைத்திருக்கவோ அல்லது தடுத்திருக்கவோ முடியும். இந்நிகழ்வுகள் கற்றுத் தந்த பாடமாக அமைவது முஸ்லிம் பிரதிநிதித்துத்தின் முக்கியத்துவமாகும்.
இலங்கை முஸ்லிம் சமூகம் வர்த்தகர்கள் என்ற நாமம் காணப்படுகின்றது. வர்த்தக துறையில் ஜாம்பவான்களாக திகழ்வதோடு எம் சமூகத்தை அறிவியல் ரீதியாகவும் முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டிய கட்டாயம் உணரப்பட்டுள்ளது.
எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுத்து சமூகம் சார்ந்த சாதனைகளை ஏற்படுத்துவதற்கு கல்வியலாளர்களையும் திறமைசாலிகளையும் உருவாக்க வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் இருக்கின்றது. அதேவேளை இதனை வழி நடத்த வேண்டிய பாரிய பொறுப்பு சமூக தலைவர்கள் சார்ந்ததாக உள்ளது.
ஜனாதிபதி மைத்திபால சிறிசேன வழிகாட்டுதலிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சிந்தனையிலும் இந்த நல்லாட்சியில் புதிய பொருளாதார கொள்கைகள் மற்றும் புதிய கல்விக் கொள்கைகள் உருவாக்கப்படவுள்ளன. அத்தோடு புதிய கைத்தொழில் பேட்டைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
எனவே மாணவச் செல்வங்களை எதிர்கால தொழிற் சந்தைக்கு ஏற்றவர்களாக பட்டை தீட்டி அவர்களை வளம் மிக்கவர்களாக மாற்ற வேண்டும். அத்தோடு பல்துறை சார்ந்த விற்பனர்களை உருவாக்குவதன் மூலம் முஸ்லிம் சமூகத்தை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்செல்ல வேண்டும்.
முஸ்லிம் சமூகத்தின் தேவைகளை, அரசியல் அபிலாஷைகளை போராடிப் பெறுகின்றவர்களாக எமது கட்சி காணப்படுகின்றது. நாம் மறைந்த பெரும் தலைவர் அஸ்ரபின் பாசறையில் வளர்ந்தவர்கள். ஆந்தவகையில் நாம் சாவல்களை கண்டு ஒழிந்து போகின்றவர்கள் அல்ல.

அளுத்கம நகரில் அரங்கேற்றப்பட்ட இன அடக்கு முறையின் போது எமது சமூகம் உடமைகளையும், உயிர்களையும் இழந்தது. அன்று அதற்கு வித்திட்ட அரசை தோற்கடிக்க வேண்டும் என்று நாம் எடுத்த முயற்சியினால் இறைவனின் துணை கொண்டு இந்த நாட்டில் நல்லாட்சியை உருவாக்கிய பங்காழிகளாக நாம் காணப்படுகின்றோம்.
இப்பிரதேசத்தில் இரட்டைத் தொகுதி முறை காணப்பட்ட காலப்பகுதியில் முஸ்லிம் சமூகம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றிருந்தது. பின்னரான விகிதாசார முறை தேர்வில் இரட்டைத் தெகுதி முறை நீக்கப்பட்டமையினால் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற முடியாமல் போனது.
இதே போன்ற நிலை கொழும்பு, கண்டி, அக்குரணை, மன்னார் போன்ற பல பிரதேசங்களில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படுவது சவாலன விடயமாக மாறியுள்ளது. இதனால் எமது தலைவர் றவூப் ஹக்கீம் அவர்களுடைய தலைமையில் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை பாதுகாப்பதற்காக போரடி வருகின்றோம்.
அந்தவகையில் ஏற்கனவே இரட்டைத் தொகுதிகள் உட்பட 168 தொகுதிகள் இருந்து கொண்டிருக்கிற நிலையில் புதிய தேர்தல் முறையில் 198 தொகுதிகளை உருவாக்க முயற்சிகளை செய்துவருகின்றோம். முஸ்லிம் சமூகம் அடர்தியாக வழும் பிரதேசங்களில் இருந்து பாராளுமன்ற பிரதிநிதித்துவங்கள் உருவாக வேண்டும் என்பதற்காக முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் போராடும் எனவும் தெரிவித்துள்ளார்.

2 கருத்துரைகள்:

Yes, there is a challenge to safeguard the Muslim representation in the parliament with the proposed New Constitution by the "Yahapalana government". Muslims in Sri Lanka do NOT have a voice - a POLITICAL VOICE for that purpose. We have lost that "VOICE" since our vote-bank had been traded by our politicians. The SLMC is dead. The ACMC is busy making money, the Muslim politicians stooging the UNP are ONLY interested in their personal benefits. The ungrateful Muslim politicians who benefited the most from Mahinda Rajapaksa, Basil Rajapaksa and Gotabaya Rajapaksa are now stooging the Yahapalana government and enjoying their best with their kith and kin and henchaiyas, by selling the VOTE BANK of the Muslims who have been deceived lock-stock-and-barrel. The Muslim Civil Society and Muslim Media organizations in Sri Lanka land their leaders will stage dramas by releasing "press statements" because all of them have been well taken care by the Yahapalana government and the foreign interests who are giving them large amounts of funding to keep their mouth shut. Like what happened in Aluthgama and Beruwela, Maharagama and Dambulla, they all have been COVERED. The TRUTH has been hidden and the Muslims have been told a "LONG STORY. It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah. THIS IS THE ONLY WAY THE MUSLIMS CAN SAFEGUARD THE MUSLIM POLITICAL REPRESENTATION IN PARLIAMENT, Insha Allah.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

Mr. Harees what has the SLMC achieved for Muslims after the death of Ashraff?

The only thing done by Hakeem is that the vote bank of Muslims used by him to bargain posts and to merge north and east.

Post a Comment