Header Ads



வடக்கில் ஹர்த்தால்


-பாறுக் ஷிஹான்-

யாழ் பல்கலைகழக மாணவர்கள் இருவர் பொலிஸரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்று (25) வடக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்நிலையில்  யாழ்ப்பாணம் உட்பட பல  பொலிஸ் நிலையங்களிற்கும் அதனை  சூழவுள்ள பகுதிகளிலும்  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இக் ஹர்த்தாலுக்கு தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ள நிலையிலேயே வடபகுதியெங்கும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இதனால் அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. 


அத்துடன் சாவகச்சேரி பருத்தித்துறை சுன்னாகம் வேலணை நகரப் பகுதிகளில் உள்ள பாடசாலைகள் வங்கிகள் எரிபொருள் நிரப்புநிலையங்கள் என்பன மூடப்பட்டுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் இப்பகுதிகளில்  பாதிப்படைந்துள்ளது.

மயானம்போல் காட்சியளிக்கும் இப்பகுதிகளில் விசேட அதிரடிப்படை பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். சில நகரப்பகுதிகளில்  மக்கள் நடமாட்டம் இல்லாது வெறிச்சோடிக்காணப்படுகின்றது.


2 comments:

  1. கிழக்கில் ஹர்த்தால் தமிழ் ஊர்களில் மேற்கொள்ளவில்லையாமே, வடக்கான் பிரச்சினை எமக்கு தேவையற்றதென்று இன்று பலர் உணர்ந்துவிட்டனர் போலும். இந்த லட்சணத்தில் வடகிழக்கை இணைக்க வேண்டுமாம்

    ReplyDelete
    Replies
    1. @IR MS கிழக்கு பல்கலை யின் திருகோணமலை,மட்டகளப்பு வளாகங்களும் தென்கிழக்கு பல்கலையும் எந்த மாகாணத்தில் உள்ளது.?
      எல்லா செய்திகளையும் படீக்க வேண்டும் ஜப்னா முஸ்லீமை மட்டும் மேய்ந்தால் அறிவு இப்படி தான் இருக்கும்,ஹீ,..ஹீ

      Delete

Powered by Blogger.