Header Ads



நல்லாட்சி அரசு, பாரிய இழப்புக்களை சந்திக்க நேரிடும் - விக்டர் ஐவன்

 -தமிழில் ARM INAS-

ஜனவரி 8 புரட்சியை அண்மித்த நிகழ்வுகளையும் அதன் பின்னரான நிகழ்வுகளையும் ஆழமாக அவதானித்ததில் நாட்டின் எதிர்காலம் தொடர்பில் நமது கண்முன்னே புலப்படும் விடயம் இதுவே.

நாட்டில் இருந்த மிகவும் மோசமான ஊழல்கள் நிரம்பிய ஆட்சி ஜனவரி 8 மக்கள் புரட்சி மூலம் ஆட்சியிலிருந்து விரட்டப்பட்டது. இதனால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஓரளவு நிம்மதி பெரு மூச்சு விடுவதற்கான சந்தர்ப்பம் கிட்டியது.

இந்த ஆட்சி மாற்றத்தின் காரணமான சர்வதேச பொருளாதாரத் தடைகளையும் சர்வதேச விசாரணைகளையும் சந்திக்க இருந்த நாடு அந்த சவால்களிலிருந்து ஒருவாராக மீண்டது. இதன் மூலம் பாரியளவு வீழ்ச்சியடையவிருந்த எமது நாட்டுப் பொருளாதாரம் காப்பாற்றப்பட்டது.

சிறுபான்மையினர் தொடர்பிலான விடயங்களையும் புதிய அரசு மிக சிறந்த முறையில் அணுகியது. இதன் விளைவாக சிறுபான்மையினர் கடந்த காலங்களை போன்றல்லாது பீதி பய உணர்வு இல்லாமல் இலங்கைக்குள் வாழ்ந்து வருகின்றனர்.

ஆனாலும் நாடு சந்தித்திருக்கும் பாரிய சவால்களை பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் பாரிய சீர்திருத்தங்களை கொண்டு வரும் எண்ணமோ தேவையோ அதற்கான இயலுமையயோ இந்த நல்லாட்சி அரசுக்கு இருப்பதாக தெரியவில்லை.

இதன் இறுதி விளைவாக இலங்கை சந்தித்துக் கொண்டிருக்கும் பாரிய சவால்கள் பிரச்சினைகள் பூதகரமாகி நாடு இருப்பதனை விட பாரிய சவால்களையும் பிரச்சினைகளையும் சந்திக்கும் பெரும் அபாய நிலைக்கு தள்ளப்படும்.

பிரபாகரனை தோற்கடித்த மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்த இடம் இது தான். கிட்டத்தட்ட 30 வருடங்களாக இரத்தம் சிந்தும் சூழலிலிருந்து குப்பையாகிப் போன சமூக அமைப்பை மற்றும் அரசை இந்த நிலையிலிருந்து மீட்டெடுக்க அவசியமான சீர்திருத்தங்களை முன்கொண்டு செல்வதில் மகிந்த தோல்வியடைந்தார்.

மகிந்த அரசை தோற்கடித்த நல்லாட்சி அரசு செய்துகொண்டிருப்பதும் மகிந்த செய்த அதே தவறைத்தான்.

பிராபகரனை தோற்கடிப்பதன் மூலம் மட்டும் இலங்கை முகம்கொடுத்துக்திருக்கும் சவால்களையும் பிரச்சினைகளையும் வெற்றிகொள்வது சாத்தியமில்லை என்பதனை மகிந்த அரசு புரிந்து கொள்ள தவறிவிட்டது போன்றே

மகிந்தவை தோற்கடித்த இன்றைய இரு தலைவர்களும் மகிந்தவை தோற்கடித்ததன் மூலம் மட்டும் இலங்கை முகம் கொடுத்துக்திருக்கும் சவால்களையும் பிரச்சினைகளையும் வெற்றிகொள்வது சாத்தியமில்லை என்பதனை புரிந்துகொள்ள தவறிவிட்டனர்.

மகிந்த செய்த இத்தவறுக்கு மகிந்த பாரிய இழப்புக்களை சந்திக்க நேரிட்டது. நல்லாட்சியும் இதற்காக மிக விரைவில் பாரிய இழப்புக்களை சந்திக்க நேரிடும்.

-சிங்களத்தில் விக்டர் ஐவன்-

5 comments:

  1. எல்லோரும் இக் கருத்துக்களை கவனத்தில் கொள்ள வேண்டிய கட்டாய காலமாகும்

    ReplyDelete
  2. Number one disaster is lying to the people about a
    fast economic development at a time the whole
    world is crashing before our eyes . Even Saudi is
    announcing cuts in spending in many areas including
    wages while we in Srilanka who depend on countries
    like Saudi for employment , keep promising to people
    that we have plans for a better world . When the
    world's largest oil producer cut spending , we
    increase spending without increasing earnings and
    call it GOOD GOVERNANCE . Our fellows , whoever
    they are , only think about short term political
    gains through talking only sweet things while the
    steps need to be BITTER for managing the economy.
    Central bank bond issue of Mahendran is a tacit
    example of how this Govt choose officials to run
    the economy.

    ReplyDelete

Powered by Blogger.