Header Ads



தமிழ் இயக்கங்கள் செய்யாத கொடுமைகளையா, மஹிந்த அரசு செய்துவிட்டது..?

குற்றப்புலனாய்வு நிதிக்குற்றப்பலனாய்வப்பிரிவு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பற்றிய ஜனாதிபதி மைத்திரிபாலவின் கருத்தை கண்டிக்கும் தார்மீக உரிமை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இல்லை என முஸ்லிம் உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக அப்துல் மஜீத் தெரிவித்தார்.

கட்சித்தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் மேலும் தெரிவித்தாவது,

இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் அரசாங்கத்தின் பொதுமக்கள் மீதான அத்துமீறல்களுக்கெதிராக குரல் கொடுக்காமல் ஒரு சமூகம் பற்றி மட்டுமே பேசும் எதிர்க்கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே இருந்து கொண்டிருப்பது மிகப்பெரிய அவமானமாகும். எதிர் கட்சி என்பது அரசின் நல்ல விடயங்களுக்கு ஆதரவு கொடுப்பதுடன் தீய விடயங்களை கண்டிக்க வேண்டும். ஆனால் தமிழ் கூட்டமைப்பு அரசின் தீய விடயங்களுக்கு துணை போவதாகவும் தமது சமூகம் சார்ந்த விடயங்களுக்கான தீமைகளில் மட்டுமே எதிர் தரப்பாக செயற்படுகிறது.

குற்றப்புலனாய்வுப்பிரிவு போன்றவை அரசியல் பின்னணியில் இயங்குகின்றன என்ற ஜனாதிபதியின் கூற்று வெறும் எழுந்தமானமான கூற்றாக தெரியவில்லை. நாட்டின் தலைவர் என்ற முறையில் அவற்றை சரியாக கணித்தே அவர் சொல்கிறார். உண்மையில் ஊழல் இலஞ்சம் நிதி மோசடி குற்றம் என்பதெல்லாம் கடந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்கு மட்டுமே சொந்தமானதாக தமிழ் கூட்டமைப்பும் இன்னும் பலரும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய தமிழ் கூட்டமைப்பில் இணைந்திருக்கும் டெலோ, ஈ பி ஆர் எல் எப் போன்ற அமைப்புக்கள் செய்யாத கொடுமைகளையா மஹிந்த அரசு செய்தது என கேட்கின்றோம். ஏன் அவர்களுக்கெதிராக மேற்படி பிரிவுகள் இன்னமும் செயற்படவில்லை?  அதே போல் 1983ம் ஆண்டு தமிழர்களை பச்சையாக கொன்று குவித்தவர்களே இன்றைய ஆட்சியாளர்களாக இருக்கின்றனர். ஏன் இவர்களுக்கெதிராக இந்தப்பிரிவுகள் செயற்படவில்லை? அதே போல் வாழைச்சேனையில் இரண்டு முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரித்ததை பார்ததுக்கொண்டிருந்தது இந்த அரசாங்கம். 90ம் ஆண்டு கல்முனையிலும் காத்தான்குடியிலும் முஸ்லிம் வாலிபர்களை புலிகள் அள்ளிச்சென்று கொல்ல அனுமதியளித்தது இன்றைய ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம். அவைகளெல்லாம் குற்றங்கள் இல்லையா?

புலிகளுக்கெதிரான யுத்தத்தில் எந்தவொரு அரசாங்கமும் நாட்டுக்கு விசுவாசமாக செயற்படாத போது மஹிந்த அரசம் கோத்தாபையுமே இலஞ்சம் மோசடி என்பவற்றுக்கு இடம் கொடுக்காமல் சரியான முறையில் யுத்தத்தை வழி நடத்தியதன் காரணமாகவே யுத்தத்தை சரியாக வழி நடாத்தி வெல்ல முடிந்தது. அவர்கள் நினைத்திருந்தால் கோடிக்கணக்காக பணத்தை வெளிநாடுகளிடம் பெற்;றுக்கொண்டு பிரபாகரனை தப்பிக்க விட்டு நாட்டுக்கு துரோகமிழைத்திருக்கலாம்.

இவ்வாறு நாட்டுக்கு பாரிய சேவை செய்த கோத்தாபையையும் அதற்கு அரசியல் தலைமை தாங்கிய மஹிந்த ராஜபக்சவையும் பாரிய தியாகத்துடன் சேவை செய்த இராணுவத்தையும் மட்டுமே இன்று குற்றவாளிகளாக பார்ப்பது முறையா என்ற அடிப்படையிலேயே ஜனாதிபதி தனது கருத்தை சொல்லியுள்ளார். அவரின் இக்கருத்து பாராட்டுக்குரிய ஒன்றே தவிர அதனை கடந்த காலங்களில் இந்த நாட்டில் முஸ்லிம்கள் மீதான அடந்தேறுகளுக்கு துணைபோன கட்சிகளைக்கொண்ட தமிழ் கூட்டமைப்புக்கு கண்டிக்கும் தார்மீக உரிமை இல்லை என்பதை உலமா கட்சி சொல்லிக்கொள்கிறது.

7 comments:

  1. இந்த சிவப்பு தொப்பிக்கு என்ன எப்படி புரிய வைக்கின்றது என்று தெரியவில்ல இதில் வேறு ஒரு சிவப்புத்தொப்பி. எதாவது ஒன்றை ஓலம்பிக்கிட்டே இருப்பார் சிலநேரம் நல்ல விடயங்களுக்கும் குரல் கொடுப்பார், இவரே ஒப்புக்கொள்கின்றார் மகிந்த செய்தது என்று. இப்படி தெரிந்த பின்னுமா இன்னும் மகிந்த பின்னல் தொங்கிக்கொண்டு இருபது.

    ReplyDelete
  2. மௌலவி முபாரக் அவர்களே,

    முஸ்லிம்களுக்கு அட்டூழியம் செய்தவர்களில், யார் அதிகம்/குறைவு என்று, மதிப்பீடு செய்கிறீர்கள். இது தவறல்ல.

    இவைகளை ஒப்பிடுவதனால், எமது சமூகம் இழந்த ஷஹீதுகளின் ரூஹுகள் திரும்பி வருவதில்லை.

    ஓர் இறை விசுவாசி இருமுறை கொத்தப்படமாட்டான், என்ற நபிமொழிக்கிணங்க நாம் விழிப்புணர்வுடன் வாழ்வதுதான் ஒரு மூமினுக்கு நல்லது.

    ReplyDelete
  3. ஒரு மூஃமீன் பொய் சொல்ல கூடாது அவ்வாறு ஒரு முஸ்லிம் பொய் சொல்ல கூடாது முனாபீக்களின் முதல் அடையாளம் பொய்தான் ,அந்தவகையில் நீங்கள் பொய் சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறோம் ,உண்மையை சொல்லுங்கள் மௌலவி நீங்கள் மஹிந்தவிடம் எவ்வளவு பணம் வாங்கி இருக்கின்றீர்கள்? என்ன ஒப்பந்தம் ?

    ReplyDelete
  4. What this colour changing crazy man talking.he is the stooge of Mahinda does forget the barbaric situation created by Rajapaksha regime.How they looted the national wealth,It look like this man want to make another circus(bulty) hunching that Rajapaksha group going to take over the power.

    ReplyDelete
  5. பொறுப்பற்ற பயங்கரவாத இயக்கங்களுக்கும் பொறுப்புள்ள ஓர் அரசுக்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் அறிந்துகொள்ள வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.