Header Ads



பிரபாகரனின் சடலத்தை பார்க்கும் மனோநிலையில், நான் இருக்கவில்லை - மஹிந்த


விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் உடலை தான் கனவிலும் காணவில்லை என முன்னாள் ஜனாதிபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையின் அமைந்துள்ள ஒன்றிணைந்த எதிர்கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பிரபாகரன் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது, அவரது சடலத்தை நீங்கள் பார்த்தீர்களா என கேள்வியெழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ச பிரபாகரனின் சடலத்தை பார்க்கும் மனோநிலையில் அப்போது தாம் இருக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.

அத்துடன், தாம் தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தம் செய்யவில்லையென்றும், தீவிரவாதத்திற்கு எதிராகவே யுத்தம் செய்ததாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, எழுக தமிழ் பேரணியின் போது வட மாகாண முதலமைச்சர் வெளியிட்ட கருத்தானது பாரதூரமானது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், மக்களின் வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயத்தை முடி மறைத்து, மக்களின் எண்ணங்களை திசை திருப்புவதற்காகவே முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறான கருத்தொன்றை முன்வைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.