Header Ads



புதிய அரசியலமைப்பில் சந்தேகம், முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறையும் ஆபத்து - எச்சரிக்கும் ஹக்கீம்

உத்தேச புதிய தேர்தல் முறையில் நிறைய சந்தேகங்கள் உள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சனிக்கிழமை (08) கொழும்பு, தபால் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடாத்திய அரசியல் யாப்பு மற்றும் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான மூன்றாவது கருத்தரங்கிற்கு தலைமை வகித்து ஆற்றிய உரையிலேயே அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார். அங்கு அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது, 

தற்பொழுது மேற்கொள்ளப்படுகின்ற தேர்தல் தொடர்பான முன்னெடுப்புகளில் இதுவரை எட்டப்பட்டிருக்கின்ற முன்னேற்றங்கள் தொடர்பாகவும், முன்வைக்கப்பட்டுள்ள ஆலோசனைகளில் நாங்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ள விடயங்கள் தொடர்பாகவும் முக்கியமான கலந்துரையாடலொன்றை நடாத்துவதால் இன்றைய செயலமர்வின் பிரதான நோக்கமாகும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போன்றவை அந்த தேர்தலை பகிஷ்கரித்த நிலையில், ஏராளமான முஸ்லிம்கள் எமது கட்சிக்கு வாக்களித்ததனால் நாங்கள் வடகிழக்கிற்கு வெளியே 12 ஆசனங்களைப் பெற்றிருந்தோம். அத்துடன் தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடகிழக்கு மாகாண சபையில் 17 ஆசனங்களைப் பெற்று உத்தியோகபூர்வமான எதிரணியாக செயல்பட்டோம். 

தேர்தல் முறையோடு இணைந்ததாக முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சிப் போக்கைப் பற்றி பார்க்கின்ற போது, குறிப்பாக 12சதவீத வெட்டுப் புள்ளியை குறைத்த விவகாரம் என்பதுதான், பாராளுமன்ற மட்டத்தில் முதலாவது சந்தித் தேர்தலில் எங்களது கட்சிக்கு நான்கு ஆசனங்களை வென்றெடுக்கின்ற வாய்ப்பைத் தந்தது. ஒருசில வாக்கு வித்தியாசத்தில் அம்பாறை மாவட்டத்தில் மூன்று ஆசனங்களைப் பெறுகின்ற வாய்ப்பை நாங்கள் இழந்தோம். 

எமது மறைந்த தலைவரின் முயற்சியினால் 15 சதவீதமாக இருந்த வெட்டுப்புள்ளியை 5 சதவீதமாகக் குறைத்தது இன்னமும் இமாலய சாதனையாகப் பேசப்படுகின்றது. அதனோடு சேர்த்து வேறு விடயங்களையும் நாங்கள் வென்றெடுத்தாலும் அதனையே பெரிதாகப் பேசப்படுகின்றது. இந்தப் பின்னணியிலேயே, நாங்கள் இன்றைய பாராளுமன்றத்தில் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 21 உறுப்பினர்கள் இருக்கின்றோம்.

இந்த புதிய தேர்தல் முறையும் நிறைய சந்தேகங்கள் உள்ளன. உள்ளுராட்சி தேர்தல் சம்பந்தமாக சில தினங்களுக்கு முன்னர் உள்ளுராட்சி அமைச்சர் அதனுடைய விகிதாசாரக் கலப்பை சற்று மாற்றுகின்ற அதாவது 70க்க 30 வீதம் என்றிருக்கின்ற வட்டார ரீதியான, தொகுதி ரீதியான தேர்தல் நடவடிக்கையில் 30 வீதம் தான் விகிதாசார முறையில் தெரிவு செய்யப்படலாம் என்ற விஷயமும், குறிப்பாக சிறுபான்மைச் சமூகம் அதுவும் வடகிழக்கிற்கு வெளியே சிதறி வாழ்கின்ற சிறுபான்மைச் சமூகங்ளுக்கு பெரிய பிரச்சினையாக இருக்கலாம்.

இந்தப் பின்னணியில் இன்றிருக்கின்ற புதிய தேர்தல் நடைமுறையில் ஏறத்தாழ 240 அளவிலான உறுப்பினர்களை க் கொண்ட பாராளுமன்றத்தை அமைப்பது அதில் 140 தேர்தல் தொகுதிகளை அடையாளப்படுத்துவது, விகிதாசார முறையில் தெரிவு செய்யப்பட்ட 93 உறுப்பினர்களையும். அத்துடன் அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக  வெல்லுகின்ற கட்சிக்கு மேலதிகமாக ஆறு அல்லது ஏழு ஆசனங்களை கொடுக்கின்ற விவகாரமும் பேசப்படுகின்றது. எங்களைப் பொறுத்தவரை ஸ்திரத் தன்மையைப் பேணுவதற்காக ஆசனங்களை ஒதுக்குவதில் நாங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளோம். 

160 தொகுதிகளாக இருந்து பல அங்கத்தவர்கள் தொகதிகளாகவும் 168ஆக என்ற தொகுகளை 140ஆக குறைக்கின்ற பொழுது ஒரு லட்சத்திற்கு அதிகமான வாக்குகள் ஒவ்வொரு தொகுதிக்கும் இருந்தாக வேண்டுமென்று அண்ணளவாக இருந்தாலும்கூட, அந்த பின்னணியில் குறிப்பாக முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற விடயத்தில் முஸ்லிம்களின் செறிவு கூடுதலாக இருக்கின்ற கிழக்கு மாகாணத்தில் எவ்வளவுதான் முயற்சித்தாலும் நான்கிற்கு மேல் தொகுதிகளை உருவாக்குவதில் சிக்கலாக விஷயமாக இருக்குமென அனுமானிக்க முடிகின்றின்றது. வடகிழக்கிற்கு வெளியில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தொகதிகளை அடையாளப்படுத்த வேண்டுமென்றால், புத்தளத்தை; தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் சிக்கல் நிலை உருவாகும். அதுகூட சோல்பரி ஆணைக்குழுவின் ஓர் ஏற்பாட்டின் பிரகாரம்தான் சாத்தியமாகலாம் என்றார்.

11 comments:

  1. எல்லா ஆட்சியிலும் முஸ்லிம்களுக்கு மறைமுகமாக சதிகள் நடந்துகொண்டுதான் இருக்கிறது.அவர்களின் இலாபத்துக்காக முஸ்லிம்களை காலத்துக்கு காலம் பாவிக்கின்றார்கள்.

    ReplyDelete
  2. வடகிழக்கு எதிர்ப்பில் கவனம் செலுத்தி பிரதிநிதித்துவத்தை இழக்கப் போகிறது முஸ்லீம்சமூகம்.தமிழரின் உணவுதட்டை பார்த்து எச்சில் வடித்து தமது உணவை கோட்டை விட்டனர் மமுஸ்லீம்கள்.ஹி.ஹி

    ReplyDelete
    Replies
    1. Tamils won't get anything - hi hi

      Delete
    2. இன்னொருன் சாப்பாட்டுத்தட்டை பார்த்து எச்சில் வடிக்கும் சமுதாயம் முஸ்லிம்கள் இல்லை என்பது உலகறிந்த உண்மை முஸ்லிம் என்றாலே பிரியாணிதான் எந்த மேடயில் எந்த மதத்தவன் பேசினாலும், முஸ்லீம்களின் பிரியாணியை மறக்கமாட்டான் பிரிசாப்பிட்டு விட்டு உல்லாச விடுதியில் படுப்பவன்தான் சோனி காக்கா மாறாக தோசக்கடையில் தோசயும் சாம்பாரும் சாப்பிட்டுவிட்டு பாதசாரியில் உறங்கமாட்டான் சோனி. விளங்கி இருக்கும் என்று நினைகிறேன்

      Delete
  3. பிராமணக் கூட்டம் தின்ற வாழையிலை எச்சியில் புரளும் கீழ்சாதிதான், தமிழ் இனம்.

    ReplyDelete
  4. I can see 21 similar Muslim names at current parliament........
    But I don't know how many Muslims are there according to the condition for a Muslim.
    If anyone know can you please covey to me by list outing their names alone.

    ReplyDelete
  5. தம்பி குமரன், நல்லா சொன்னிங்க வாப்பா.....
    எங்கட பாராளமன்ற பிரதிநிதித்துவம் எவ்வளவு குறைஞ்சாலும் பரவாயில்ல,
    ஆனால் வடகிழக்கை இணைக்கும் ஆபத்தான விஷயத்தை செய்ய விடவே மாட்டோம் .
    நீங்க ஆணியே புடுங்க வேணாம் எங்கட விஷயத்துல.

    ReplyDelete
    Replies
    1. பிரதிநிதியும்கிடைகாது வடகிழக்கும்இணையும்.

      Delete
  6. சில விடயங்களை குறிப்பிட விரும்புகிறேன்,
    ஓரிரு தமிழ்பெயரை வைத்திருப்பவர்கள்
    இடும் கீழ்த்தரமான பதிவுகள் தமிழர் சமுதாயத்தின் ஒட்டுமொத்த கருத்தல்ல!
    மனநொயாளர்கள் பிதற்றும்போது கண்டுகொள்ளாதோருமுண்டு கல்விட்டெரிஙோருமுண்டு!

    மேற்படி கட்டுரை தபாலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற வைபவம் இதில் தமிழர்தலைமைகளும் புகுறிப்பாக மனோவ போன்றோரும் களந்துகொண்டமையும், அதில் பேசப்பட்டஙை சிறுபாண்மையோர. சம்மந்தமானதே தவிர தனியே முஸ்லிம் தொடர்பானதல்ல என்பதை அரவேற்காடுகள் புரிந்து கொள்ளவேண்டும்!
    தவிர இதுவரை ஹக்கீம் நபந்தனையுடனான வடகிழக்கு இணைப்பை எதிர்க்கவில்லை! என்பதை நாற்றமடிக்கும் வார்த்தைகளைப்பாவிப்போர் புரிந்தால் நல்லது

    ReplyDelete
  7. இந்த பதிவுகளை வாசிக்கும் நாடுநிலையாளர்களுக்கு தெரியும் யாரின் பதிவு நாற்றமடிக்குறது என்று

    ReplyDelete

Powered by Blogger.