Header Ads



பிரபாகரனின் சுவரொட்டி ஒட்டிய ஜேர்மன், பெண்ணை உடனடியாக நாடுகடத்த உத்தரவு

புலிகளின் தலைவர் பிரபாகரனின் சுவரொட்டிகளை ஒட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஜேர்மன் பெண்ணை உடனடியாக நாடு கடத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் அருனி ஆர்டிகல உத்தரவிட்டுள்ளார்.

குறித்த பெண்னை இன்று -13-நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குறித்த ஜேர்மனிய பெண்ணை சுன்னாகம் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளதுடன் அவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த நிலையிலேயே இவரை உடனடியாக நாடு கடத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் அவசர அறிவிப்பு விடுத்துள்ளார்
.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம் மற்றும் தமிழ் தேசிய அடையாளங்கள் பொறிக்கப்பட்ட 33 சுவரொட்டிகள் கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள மருதனார் மடத்தில் சில இடங்களில் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. இந்தப் பெண்ணை யாரோ ஓட்ட வைத்திருக்கின்றனர்.

    இந்தக் கொலைகாரனின் படத்தை ஒட்டி, யாருக்கு என்ன இலாபம்?

    ReplyDelete

Powered by Blogger.