Header Ads



கோத்தபாயவை நீதிமன்றத்திற்கு, கொண்டுவந்தது தில்ருக்ஷியே

கடந்த சில தினங்களாக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் செயற்பாடு மற்றும் அதன் பணிப்பாளர் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன.

குறித்து ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ், ராஜபக்ச ரெஜிமென்டுடன் நெருக்கமாக செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டன.

சமகால ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுடன் தனிப்பட்ட ரீதியில் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகள் அந்த சந்தர்ப்பத்திலேயே மஹிந்த ராஜபக்சவின் காதுகளுக்குள் செல்வதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தகவல் வெளியிட்டிருந்தார். எனினும் இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானதென தகவல் வெளியாகியுள்ளது.

ராஜபக்சர்களின் வெளிநாட்டு கணக்கு தொடர்பில் ஆராயும் போது அந்த தகவல்கள் ராஜபக்சர்களின் காதுகளுக்கு முன்னாள் பணிப்பாளர் நாயகத்தினால் செல்லவில்லை.

டுபாயிலுள்ள இலங்கை தூதரகத்தில் சேவை செய்யும் மொழிபெயர்ப்பாளரினால் அந்த தகவல்கள் ராஜபக்சர்களின் காதுகளுக்குள் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

முன்னாள் பணிப்பாளர் நாயகத்திற்கு எவ்வித குறைப்பாடுகள் இல்லாத போதிலும் அவருக்கு ராஜபக்சர்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுவது முற்றிலும் போலியான குற்றச்சாட்டாகும்.

ராஜித சேனாரத்னவுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இரண்டு விசாரணைகள் இருந்த சந்தர்ப்பத்தில் அவரால் அங்கு சேவையாற்றிய பணிப்பாளர் நாயகத்தின் மீது குற்றம் சுமத்துவது ஒழுக்கம் அல்ல.

முன்னாள் பணிப்பாளர் நாயகம் நல்லாட்சி அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஒரு அதிகாரி என்பதனையும், அவர் கோத்தபாய ராஜபக்சவை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தார் என்பதையும் மறந்துவிட கூடாது என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.