Header Ads



பொலிஸ் ஜீப்புக்குள் முதுகில் காலால் உதைத்து, நான் கீழே விழுந்தவுடன் பொது­ப­ல­சேனா குரு­மார்­ என்னைத் தாக்­கி­னர்

/ARA.Fareel/

கொழும்பு, வாழைத்­தோட்ட பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் சிலர் பொலிஸ் ஜீப் வண்­டியில் என்னைக் கடத்திச் சென்று, தாக்­குதல் நடத்தி விட்டு, நடு வீதியில் போட்டுச் சென்­றார்கள். இதனால் எனது முதுகுப் பகுதி பாதிக்­கப்­பட்டு நோயுற்­றி­ருக்­கிறேன்.

இது தொடர்பில் விசா­ர­ணை­யொன்­றினை நடாத்தி நியாயம் வழங்­குங்கள் என ஜாதிக பல­சேனா அமைப்பின் செய­லாளர் வட்­ட­ரக்க விஜித தேரர் பொலிஸ் மா ஆணைக்­கு­ழு­விடம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார். வட்­ட­ரக்க விஜத தேரர் பொலிஸ் ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ருக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்­தி­லேயே இவ்­வாறு வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டுள்­ளது. வட்­ட­ரக்க விஜித தேரர் பொலிஸ் ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ருக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;

2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்­தலில் கொழும்பு மாவட்­டத்தில் நவ­ச­ம­ச­மாஜக் கட்­சியில் விக்­கி­ர­ம­பாகு கரு­ணா­ரத்­ன­வின் கட்சியில்வுடன் போட்­டி­யிட்டேன். இதன் அடிப்­ப­டையில் 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் திகதி புறக்­கோட்டை வாழைத்­தோட்டம் அக்பார் பகு­தியில் நண்­பர்கள் சில­ருடன் பேச்­சு­வார்த்தை நடாத்திக் கொண்­டி­ருந்தேன்.
அன்று பேச்­சு­வார்த்தை மாலை 7 மணிக்கு ஆரம்­ப­மா­கிய சிறிது நேரத்தில் பொது­ப­ல­சேனா அமைப்பைச் சேர்ந்­த­வர்கள் சுமார் எட்டு பேர் வந்து எனது காவி­யு­டையை இழுத்­தெ­டுத்து தாக்கி அரு­கி­லி­ருந்த பன்­ச­லை­யொன்­றுக்கு கொண்டு சென்­றார்கள். அங்கு வைத்து என்னைத் தாக்கி எனது வாக்­கு­மூலம் ஒன்­றி­னையும் பதிவு செய்து கொண்­டார்கள்.
பின்பு பொலிஸார் பொது­ப­ல­சேனா தேரர்­க­ளுடன் என்னை ஜீப் வண்­டியில் ஏற்றிக் கொண்டு அங்­கி­ருந்து வெளி­யே­றி­னார்கள். ஜீப் வண்­டியில் கொழும்பின் பல இடங்­க­ளுக்கு கொண்டு சென்­றார்கள்.
ஜீப் வண்­டியில் வாழைத்தோட்ட பொலிஸ் குற்றப் பிரிவு பொறுப்­ப­தி­கா­ரியும் இருந்தார். பொலிஸ் அதி­காரி ஜீப் வண்­டிக்குள் இருந்து என் மீது தவ­றான வார்த்­தைகள் பிர­யோ­கித்தார். எனது பிர­யாணப் பையில் இருந்த பொருட்கள் அனைத்­தையும் எடுத்துக் கொண்­டார்கள். 
இவரை களனிப் பகு­திக்கு கொண்டு சென்று பாழ­டைந்த இடத்தில் வெடி வைத்து விடுவோம் என பொலிஸ் அதி­காரி கூறினார். பின்பு ஓரி­டத்­துக்கு கொண்டு சென்று இங்கு இறங்கு என்று கூறி எனது முதுகில் காலால் உதைத்­தார்கள். நான் கீழே விழுந்த பின்பு பொது­ப­ல­சேனா குரு­மார்­களும் என்னைத் தாக்­கி­னார்கள்.
பொலிஸ் காவ­ல­ரணில் இருந்த பொலிஸ்­காரர் ஒருவர் முச்­சக்­கர வண்­டி­யொன்­றினை நிறுத்தி கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலை­யத்­துக்கு அழைத்துச் சென்று நடந்த சம்­ப­வத்தை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரி­யிடம் கூறினார். பின்பு எனது வாக்­கு­மூ­லத்தைப் பதிவு செய்து பொலிஸ் ஜீப் வண்­டியில் கொழும்பு வைத்­தி­ய­சா­லக்கு நான் கொண்டு செல்­லப்­பட்டேன். 72 ஆம் இலக்க வார்ட்டில் அனு­ம­திக்­கப்­பட்டேன்.
அடுத்த தினம் புறக்­கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி வைத்­தி­ய­சா­லைக்கு வந்து எனது வாக்­கு­மூ­லத்தைப் பதிவு செய்தார்.
வாழைத்­தோட்ட பொலிஸ் நிலைய அதி­கா­ரி­க­ளினால் தாக்கப்பட்டமையினால் எனது முதுகுப்பகுதி பாதிக்கப்பட்டு நான் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறேன்.
இது தொடர்பில் விசாரணையொன்றினை நடாத்தி நியாயம் வழங்குமாறு வேண்டிக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. முஸ்லிம்களுக்கு சார்பாக குரல் கொடுக்கும் ஒரு அந்நிய மத குரு ஒருவர்ஏ ன் அவர் சார்பாக எங்கள் முஸ்லிம்அமைப்புகள் இவருக்காக குரல் கொடுக்க ( உதவ ) முன் வருவது இல்லை.

    ReplyDelete
  2. உங்களுக்கு நீதி கிடைக்குமென்று எதிர்பார்க்க முடியாது ஏனெனில்,இங்கு நீதி
    எப்போதோ செத்துவிட்டது,

    ReplyDelete

Powered by Blogger.