Header Ads



இராக்கில் மதுபானத்துக்குத் தடை

இராக்கில் மதுபானத்துக்குத் தடை விதிக்கும் மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

இராக்கில் அனைத்து வகையான மதுபானத் தயாரிப்பு, விற்பனை மற்றும் அவற்றின் இறக்குமதிக்குத் தடைவிதிக்க வகை செய்யும் மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதாவுக்கு சிறுபான்மையினர் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். இருப்பினும், பெரும்பாலான எம்.பி.க்கள் ஆதரவுடன் மதுபானத் தடை மசோதா இராக் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

இதுகுறித்து கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த மூத்த எம்.பி. யோநதம் கன்னா கூறியதாவது:

இராக்கில் மதுபானப் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசியல் சாசனப் பிரிவு 14-ன் கீழ் அனைத்து வகையான மதுபானங்களை உள்நாட்டில் தயாரிப்பது, விற்பனை செய்வது மற்றும் அவற்றை இறக்குமதி செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை மீறுவோருக்கு ரூ.5.28 லட்சம் முதல் ரூ.13.20 லட்சம் வரையில் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மதுபானத்துக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள இந்தப் புதிய சட்டப்பிரிவு, இராக் அரசியலமைப்பு சிறுபான்மையினருக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையை முற்றிலும் மீறுவதாக அமைந்துள்ளது.

இந்தப் புதிய சட்டத்தால் இராக்கில் பலருக்கு வேலை இழப்பு உண்டாகும். மேலும், போதைப் பொருள்கள் பயன்பாடு வெகுவாக அதிகரிப்பதுடன் இராக் பொருளாதாரம் பாதிப்படையும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
எனவே, இந்த மதுபானத் தடை சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளோம் என்றார்.
மதுபானத் தடை சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அம்மர் தோமா எம்.பி, கூறுகையில், மதுவுக்கு இஸ்லாமில் இடமில்லை. இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரான சட்டத்துக்கு ஒப்புதல் வழங்க முடியாது. புதிய சட்ட மசோதா முற்றிலும் இராக் அரசியல் சாசனத்துக்கு உள்பட்டுத்தான் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.
ஐ.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்து மொசூல் நகரைக் கைப்பற்ற இராக் ராணுவத்தினர் கடுமையாகப் போராடி வரும் நிலையில், இராக் நாடாளுமன்றத்தில் மதுபான தடைச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

4 comments:

  1. Shia will not admit that they are doing shirk so it is long way for them to turn to right path otherwise how it is possible for Iranian Shia leader to ask to bring holy kaaba to Iraq. Their chanting and beating the chest themselves is terribly evel act.

    ReplyDelete
  2. To pass a law (haraam or halaal) what is the crieteria should be consider in islam. Is it depending on majority dicision

    ReplyDelete
  3. To pass a law (haraam or halaal) what is the crieteria should be consider in islam. Is it depending on majority dicision

    ReplyDelete

Powered by Blogger.