Header Ads



றீட்டா ஐசக்கிடம் புத்தளம் பிரதேசம் தொடர்பில், முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள்

(முஹ்ஸி)

"புத்தளம் வாழ் யாழ்- கிளிநொச்சி மாவட்ட வெளியேற்றப்பட்ட சிவில் சமூகம்" ஐ.நா. சிறுபான்மை மக்களின் குறைகேள் விஷேட பிரதிநிதி ரீட்டா ஐசெக்கிடம் மகஜரொன்றை சமர்ப்பித்திருந்தனர். அதில் புத்தளம் பிரதேசம் தொடர்பில் முன்வைக்கப்பட்டிருந்த சில முக்கிய கோரிக்கைகளாவன.

1. புத்தளம் நகர சபை மாநகர சபையாக தரமுயர்த்தப்படல்.

2. கற்பிட்டி பிரதேச சபை நகர சபையாகவும், எஞ்சிய பகுதிகளை இன்னுமொரு பிரதேச சபையாக மாற்றியமைத்தல்.

3. புத்தளம் ஆதார வைத்தியசாலை தரமுயர்த்தப்படல். சகல வசதிகளும் கொண்ட வைத்தியசாலையாக மாற்றியமைத்தல்.

4. புத்தளம் கல்வி வலயம் இரு கல்வி வலயங்களாக மாற்றியமைக்கப்படல்.

5. வாழ்வாதரத்தில் மோசமாக பாதிக்கப்பட்ட, வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்களுக்கான விஷேட வேலைத் திட்டங்கள்.

6. உள்ளூர் மக்கள் தமது வளங்களை சகல துறைகளிலும் பாரியளவில் பகிர்ந்து கொண்டனர். எனவே அவற்றுக்கான இழப்பீடுகள், ஒதுக்கீடுகள் நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் இரட்டிப்பாக வழங்கப்பட வேண்டும்.

7. துரித அபிவிருத்தித் திட்டங்கள்.          
             
இதேவேளை இலங்கையில் சிறுபான்மை மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கண்டறிய விஜயம் செய்த U.N. விஷேட பிரதிநிதி ரீடா ஐசெக் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் முஸ்லிம்கள் விடயத்தில் கருத்துக்களை தெரிவித்ததோடு உள்ளூர் மற்றும் இடம் பெயர்ந்தோர் சமூகங்கள் மத்தியில் நிலவும் சாத்தியமான முரண்பாடுகளை தீர்ப்பதன் முக்கியத்துவம் தொடர்பிலும் கருத்து தெரிவித்தார். அவரது கருத்து சர்வதேச சமூகம் இது விடயத்தில் முன்னேற்றமான நிலைப்பாட்டினை எடுத்துள்ளதை சுட்டிக் காட்டுகிறது. மேலும் இதை  ஆரோக்கியமாக நகர்த்திச் செல்வது சகலருக்கும் பயன் தரவல்லது.

No comments

Powered by Blogger.