Header Ads



துருக்கியில் அவசர நிலையை நீடிக்க, எர்துகான் ஒப்புதல்

துருக்கியில் மேலும் மூன்று மாதங்களுக்கு அவசர நிலையை நீட்டிக்கலாம் என்ற அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு சபையின் பரிந்துரைக்கு ஜனாதிபதி எர்துவான் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் தோல்வியில் முடிந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியை தொடர்ந்து, அவர் குறிப்பிடும் பயங்கரவாதக் குழுக்களை முழுவதுமாக ஒழித்து கட்ட கூடுதல் நேரம் தேவைப்படுவதாக எர்துவான் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த கால நீட்டிப்புக்கு துருக்கியர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய தேசம் என அழைத்துக் கொள்ளும் அமைப்பினர் மற்றும் அதன் எதிராளியுமான குர்து தீவிரவாதிகளையும் குறிப்பிட்டு பேசிய எர்துவான், சிரியாவுடனான துருக்கி எல்லையில் உள்ள பயங்கரவாதத்தை முற்றிலுமாக அழிக்க தான் தீர்மானித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

துருக்கியில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிக எண்ணிக்கையிலானோர் அதிகாரிகளிடம் பிடிபட்டனர். ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்குக் காரணம் எனச் சந்தேகிக்கப்படும் சுமார் 32,000 பேர் கைதாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. 

No comments

Powered by Blogger.