Header Ads



நள்ளிரவில் ஜனாதிபதியை சந்தித்த யானைகள் - அமைச்சரவையிலும் மாற்றம் வருகிறது..!


நள்ளிரவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.


இந்த அவசர சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆற்றிய சர்ச்சைக்குரிய உரை தொடர்பில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் மலிக் சமரவிக்ரம, கபீர் ஹாசிம் உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

நீண்ட நேரம் இந்த சந்திப்பு நடத்தப்பட்டதாகவும், இரு தரப்பிற்கும் இடையில் மிகவும் சுமூகமான அடிப்படையில் சந்திப்பு நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முரண்பாடுகள் தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் கொழும்பு வார இறுதி ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

2

அமைச்சரவையில் மாற்றம் செய்வது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் நாட்களில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிவில் அமைப்புக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

இது பற்றி, நீதியான சமூகத்திற்கான அமைப்பின் அழைப்பாளர் பேராசிரியர் சரத் வீஜேசூரிய கொழும்பு ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

சில முக்கிய அமைச்சர்களுக்கு எதிராக பாரிய மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் சில அமைச்சுக்கள் உரிய முறையில் செயற்படுவதில்லை எனவும் இதனால் அமைச்சரவையில் மாற்றம் செய்யுமாறு கோரி மகஜர் ஒன்று ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் அண்மையில் ஜனாதிபதியை சந்தித்த போது இந்த மகஜர் வழங்கப்பட்டுள்ளது.

சில முக்கிய அமைச்சர்கள் பாரிய மோசடிகளில் ஈடுபட்டதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவற்றை நிரூபிக்கக்கூடிய காரணிகளும் காணப்படுவதாக பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேசி சில அமைச்சர்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.