Header Ads



அமைச்சர்களின் செயற்பாடுகளை, கண்காணிப்பதற்கு விசேட குழு - இரகசியம் பேண தீர்மானம்

அமைச்சர்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு விசேட குழு ஒன்றை நிறுவுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

அனைத்து அமைச்சர்களின் செயற்பாடுகள் மற்றும் வினைத்திறன் தொடர்பில் கண்காணிப்பதற்காக இந்த விசேட குழு நியமிக்கப்படவுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தக் குழுவில் யார் அங்கம் வகிப்பார்கள் என்பது பற்றிய விபரங்களை இரகசியமாக பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட குழு அமைச்சர்களின் வினைத்திறன் மற்றும் செயற்பாடுகள் குறித்து ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒரு தடவையும் அறிக்கை ஒன்றை பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, 2017ம் ஆண்டை ஜனாதிபதி வறுமை ஒழிப்பு ஆண்டாக பிரகடனம் செய்துள்ளார்.

இதன் அடிப்படையில் வறுமை ஒழிப்பு குறித்து கூடுதல் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அனைத்து அமைச்சர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அமைச்சர்கள் மூன்று மாதத்திற்கு ஒரு தடவை அனைத்து மாவட்டங்களுக்கும் விஜயம் செய்து நிலைமைகளை அவதானித்து அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.