October 18, 2016

எமது கருத்துக்களை றீட்டா, கவனமாக செவிமடுத்தார் - ஹக்கீம்


இந்நாட்டின் சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகள் குறித்த நிரந்தரமான தீர்வைக் காண்பதற்கான முயற்சியை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும்; அதற்கான சுயாதீனமான தேசிய ஆணைக் குழுவொன்றை அமைக்கவேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என ஐ.நா சிறுபான்மைச் சமூகங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கான விஷேட அறிக்கையாளர் ரீட்டா ஐஷாக் நாடேயிடம் விஷேட கோரிக்கையாக முன்வைத்தாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்,அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

முனித உரிமைகளுக்கான ஐக்கியநாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் சிறுபான்மைச் சமூகங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கான விஷேட அறிக்கையாளர் ரீட்டா ஐஷாக் நாடேயி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமை கட்சியின் 'தாருஸ்ஸலாம்' தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை (18) மாலை சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.

பிரஸ்தாப சந்திப்பைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் பொழுது அமைச்சர் ஹக்கீம் மேலும் கூறியதாவது,

நாங்கள் எவற்றையெல்லாம் எங்களது அறிக்கையில் உள்ளடக்க முயற்சிக்கின்றோமோ அவற்றையெல்லாம் நீங்கள் இப்பொழுது எங்களின் கவனத்திற்கு கொண்டு வந்தது மிகுந்த ஆச்சரியமளிக்கின்றது என்று ரீட்டா ஐஷாக் நாடேயி சொன்னார். முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நீங்கள் சரிவர அடையாளம் கண்டிருக்கின்றீர்கள் என்றும், நீங்கள் இவ்வாறன விடயங்களில் தெளிவான நிலைப்பாட்டில் இருக்கின்றீர்கள் என்றும் அவர் கூறினார். 

என்னுடைய பணியை நீங்கள் இலகுபடுத்தியிருக்கிறீர்கள் என்றார். நாங்கள் எழுத்து மூலமாகவும் எங்களது கோரிக்கைகளையும், கவனயீர்ப்புகளையும் அவரிடத்தில் அறிக்கையாக இன்றுகையளித்திருக்கின்றோம்.

இடம்பெயர்ந்தமக்கள் சார்பாகவும்,அதேவேளைமக்கள் பறிகொடுத்த காணிகளை மீளப்பெறுவதிலுள்ள சிரமங்களையும் அவரது கவனத்திற்கு கொண்டுவந்தோம்.

வடக்கில் தமிழ் மக்களது காணிகளை இராணுவம் கையகப்படுத்தியிருப்பதுபோல, கிழக்கில் முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளை இராணுவமும், முன்னர் விடுதலைப் புலிகளும் கையகப்படுத்தியிருப்பது பற்றியும் முறையிட்டோம்.

இனரீதியாக மட்டுமன்றி, சமயரீதியாகவும் இந்நாட்டு முஸ்லிம்களுக்கும், வணக்கஸ் தலங்களுக்கும் எதிராக தீயசக்திகள் மேற்கொண்டதாக்குதல் நடவடிக்கைகள் பற்றியும் அவரிடம் விபரித்தோம். ஆத்திரமூட்டும் வகையிலான பேச்சுகள் உண்டு பண்ணிய பாரதூரமானதும், விபரீதமானதுமான செயல்களையும், விளைவுகளையும்  சுட்டிக்காட்டினோம்.

இந்நாட்டின் சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகள் குறித்த நிரந்தரமான தீர்வினைக் காண்பதற்கு ஒரு முயற்சினை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்; அதற்கான சுயாதீனமான தேசிய ஆணைக்குழுவொன்றை அமைக்க வேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என்பதை எங்களது விஷேட கோரிக்கையாக அவரிடம் முன்வைத்தோம்.

எமது கருத்துக்களை கவனமாக செவிமடுத்த ரீட்டா ஐஷாக் நாடேயி அவர்கள் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் இல்லாமல் செய்வதற்கான சூழலை நிரந்தரமாக உருவாக்குவதற்கான சட்ட ஏற்பாடுகள் குறித்து அவரது இறுதி அறிக்கையில் குறிப்பிடவிருப்பதாகச் சொன்னார்.

இந்தக் கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளரும், உயர்பீட உறுப்பினருமான சட்டத்தரணி ஏ.எம். பாயிஸ், கிழக்குமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன் ஆகியோரும் பங்குபற்றினர்.

5 கருத்துரைகள்:

ராசா, அவவு உங்களுக்கு தள்ள அரப்பு வைத்ததை நீங்கள் பெருமையாக சொல்கிறீர்களே. நீங்கள் ஒன்றும் புதிதாக சொல்லவில்லை எங்களுக்கு தெரிந்த விடயங்களையே சொல்லுகிண்றீர்கள் என்று சொல்லாமல் சொல்லியுள்ளார். உங்களிடம் ஒரு புண்ணாக்கும் இல்லை என்பதை கூறாமல் கூறியுள்ளார்.

கல்வி, வேலை வாய்ப்பு, கலாசாரம் பாதுகாக்கப்படல், நிதிப் பங்கீடு, போலீஸ், முப்படை, நீதி, அபிவிருத்தி பணிகள், புதிய அரசியல் யாப்பு, வியாபாரம் ( முஸ்லிம்களின் வியாபாரங்கள் திட்டமிட்டு நசுக்கப்பட்டமை), போன்ற இன்னோரன்ன விடயங்களில் இந்த நாட்டில் சிறுபாண்மை மக்களாகிய முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். சிலவிடயங்கள் அரசுகள் திட்டமிட்டே செய்கினறன. இதட்கான ஆதாரத்துடனான தரவுகளும், ஆவணங்களும் உண்டோ. கிடையவே கிடையாது.

சகோதரர் ஹக்கீம் அவர்களே, நீர் செய்த கழுத்தறுப்புக்களும், துரோகங்களும், வாக்கு மீறல்களும், உனது சுயநலத்துக்காக, பதவிக்காக, பணத்துக்காக இந்த முஸ்லிம்களின் உரிமைப்போராட்டத்தையே விற்று விட்டாயே. அவற்றில் சில இதோ..

- 18 அரசியல் திருத்தம், தெவிநுகம சட்டமூலம், கசினோ சட்டமூலம், நீர் நீதி அமைச்சராக இருக்கும் போதே, பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன, முஸ்லிம்களின் ஹலால் பிரச்சசினை, பர்தா அணியும் பிரச்சினை, அழுத்தகம பிரச்சினை போன்ற ராஜபக்ச ஆடசியில் நடந்த அநியாயங்களும், அவமானங்களும்.

- தலைவர் அஷ்ரப் அவர்கள் கடைசிக்காலத்தில் ( தேர்தல் காலம்) கட்சியினால் எடுக்கப்படும் முடிவுகளை ரணிலுடன் நீங்கள் பகிர்ந்த விடயங்கள். தேர்தல் முடிந்தவுடன் தலைவர் அவர்கள் உங்களுக்கு ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்க இருந்த விடயம்.

- ஹசன் அலி அவர்களின் செயலாளர் ( அவர் எம்பி பதவியை எதிர் பாத்து மெளனம் காத்தது என்றும் கூறுகிறார்கள் அது வேறு விடயம்) பதவியை மிகவும் கேவலமான ஒரு கபடத்தனமான முறையில் எடுத்துக்கொண்ட விதம். சுத்து மாத்து.

- இன்னும் இந்த தேசியப்பட்டியல் எம்பி பதவியை வாக்குறுதி அளித்தபடி நியமிக்காமல் கபடத்தனமாக இன்னும் தனது நண்பருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆக முஸ்லிம்கள் பேரினவாதத்தால் எதிர்கொள்ளும் இழப்பை விட உம்மால் ஏட்படும் இழப்புக்கள் மிக மோசமானது. எனவே உம்மிடம் இருந்து இந்த கட்சியையும் முஸ்லீம் சமூகத்தையும் காப்பாற்ற வேண்டும்.

முடிந்தால் யாரவது சகோதரர் ஹக்கீம் அவர்களிடம் இருந்து இந்த முஸ்லீம் சமூகத்தை காப்பாற்றும் படி ரீட்டா அவர்களிடம் கேளுங்கள்.

மாற்றம் தேவை புத்தி ஜீவிகளும், சமூக ஆர்வலர்களும், இளைஞர்களும், ஊடகவியலாளர்களும், உண்மையான முஸ்லீம் காங்கிரஸ் போராளிகளும் முன்வருவார்களா???

நாங்கள் நம்பி விட்டோம்????

Hakeem is grinding the old flour. He was not concerned about the resettlement of Muslims in Jaffna and other difficulties of Tamils faced by Muslims.

He totally ignored north east separation. Perhaps insisted upon merger?

கக்கீம் அவர்கள் அனைத்து இனங்களுடனும் அனுசரணை கொண்டவர்.நிதானமானவர்.ரிசாத் போல இன தூவேசம் அற்ற நல்ல தலைமை.அடிபடை வாத கொள்கை கொண்ட முஸ்லீம்களே அவரை எதிர்கின்றனர்.

தமிழர்கள் முஸ்லீம்களூக்கு எந்த இடைஞ்சலும் இல்லை. முஸ்லீம் அரசியல் வாதிகளே இனவாத அரசியல்லுக்காக. பிரச்சினைகளை உருவாக்குகின்றனர்.

Post a Comment