Header Ads



இலங்கையில் சிவசேனை என்ற, இந்துப் பயங்கரவாத அமைப்பு - சுமந்திரன் + தினேஷ் கடும் எதிர்ப்பு

மும்பையில் உள்ள சிவ்சேனா, சிவசேனை என்று அழைக்கப்படும் ஸ்ரீலங்காவின் புதிய தமிழ் அமைப்புக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளது, தீவில் உள்ள பிரதான நீரோட்டத்தை சேர்ந்த அரசியல்வாதிகளிடம்;, இந்த பிரிவினைவாத அsivasena-3மைப்பு 20 வருடங்களாக நீடித்து 2009ல் மட்டுமே முடிவடைந்த உள்நாட்டு யுத்த வடுக்களை மீண்டும் கிளறிவிடுமோ என்கிற கவலையை தூண்டிவிட்டுள்ளது. ஸ்ரீலங்காவின் வடபகுதியில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வவுனியாவை தளமாக கொண்டிருக்கும் சிவசேனை அமைப்பு மறவன்புலவு சச்சிதானந்தன் தலைமையில் இயங்குகிறது. சிவபெருமானின் பெயரைக் கொண்டுள்ள இந்த கட்சி, இந்து சமயத்தில் இருந்து சிங்கள மேலாதிக்கமான பௌத்த சமயத்துக்கு கட்டாய மதமாற்றம் செய்வதற்கு எதிராகப் போராடுவதற்கு திட்டமிட்டுள்ளது.

சிவ்சேனா தலைவர் சஞ்சய் ராவத் நியுஸ் 18 இடம் கூறும்போது, தனது கட்சி ஸ்ரீலங்காவின் புதிய அமைப்புக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளது என்றார். “எங்கள் கட்சி ஒரு இந்துக் கட்சி. உலகெங்கிலுமுள்ள இந்துக்களின் பிரச்சினைகளுக்கு ஆதரவு வழங்குகிறோம். அதனால் நாங்கள் சிவசேனையை ஆதரிக்கிறோம்” என்றார் அவர். சிங்களத் தலைவர்கள் போர்க்குணத் தன்மையைக் கொண்ட புதிய சிவசேனை வட இலங்கையில் இதுவரை நிலவிவரும் நிலமையை உடைத்துவிடுமோ எனக் கவலைப்படும் அதேவேளை தமிழ் தலைவர்கள் இந்த அமைப்பு தமிழர்களின் ஐக்கியத்தை பிரித்துவிடுமோ எனக் கவலைப்படுகிறார்கள்.

ஸ்ரீலங்கா அரசியலில் மூன்று முக்கிய வீரர்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்காவின் ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பன இந்த சேனையின் பிறப்புக்கும் மற்றும் அது இந்தியாவிலுள்ள வலதுசாரி இந்துக் கட்சிகள் மற்றும் அமைப்புகளிடமிருந்து ஆதரவைப் பெறுவதற்கும் தீவிர கவலையை வெளியிட்டுள்ளன. சமீபத்தில் ஸ்ரீலங்காவிலுள்ள இந்துக்களின் ஒரு குழுவினர் வட மாகாணத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள நகரமான வவுனியாவில் சிவசேனையை ஆரம்பித்துள்ளார்கள்.

சிவசேனையின் பிரதான அமைப்பாளரான மறவன்புலவு சச்சிதானந்தன் கூறுகையில், அவர்களுக்கு சிவ்சேனா, பிஜேபி, விஎச்பி மற்றும் ஆர்எஸ்எஸ் என்பனவற்றின் ஆதரவு உள்ளதாகத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இந்துக்களை கட்டாயமாக வேறு மதங்களுக்கு மதமாற்றம் செய்யவதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதுடன் மற்றும் ஸ்ரீலங்காவில் மதமாற்றத்துக்கு எதிராக ஒரு சட்டம் கொண்டுவரும்படி கோரப்போவதாகவும் தெரிவித்தார். ஸ்ரீலங்காவின் முதலாவது வலதுசாரி இந்து அமைப்பான இந்த புதிய அமைப்பு, ஸ்ரீலங்கா அரசாங்கம் சிங்கள பௌத்த குடியேற்றத்துக்கு ஆதரவளித்து இந்துக்களின் முக்கியத்தவத்தை குறைத்து வருவதாகவும் குற்றம் சாட்டுகிறது. கிறீஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் தங்கள் மதங்களைப் பரப்புவதற்காக வெளிநாடுகளில் இருந்து பெருந்தொகையான நிதிகளைப் பெறுவதாகவும் அது மேலும் குற்றம் சாட்டுகிறது.

சேனையின் தலைவர் சத்சிதானந்தன் நியுஸ் 18 க்கு சொன்னது, தனது அமைப்பு இந்தியாவிலுள்ள தங்களது அமைப்பை போன்ற எண்ணம் கொண்ட அமைப்புகளிடமிருந்து உதவிகளை கோரும் என்று. மதமாற்றம்தான் எங்களுக்கள்ள பாரிய பிரச்சினை. இந்துக்களுக்கு மாத்திரம் ஸ்ரீலங்காவில் ஆதரவு கிடைப்பதில்லை. இந்தியாவிலுள்ள தங்கள் அமைப்பை போன்ற நோக்கம் கொண்ட நிறுவனங்களின் ஆதரவுடன் சிவசேனை இந்துக்களுக்காகப் போராடும் என்று அவர் மேலும் சொன்னார்.

கூட்டு எதிர்க்கட்சி தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனா, சேனை மற்றும் அதேபோன்ற எண்ணம் கொண்ட நண்பர்கள் சமாதானத்துக்கு ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறார்கள் என்று சொன்னார். “எங்கள் தீவு ஒரு மோசமான போரில் இருந்து இப்போதுதான் வெளியே வந்துள்ளது. சிவசேனையை போன்று மதத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு அரசியல் அமைப்பு எங்களுக்குத் தேவையில்லை. இந்தியாவில் சிவ்சேனா என்ன செய்கிறது என்பதை நாங்கள் அறிவோம். அப்டியான ஒன்று இங்கு எங்களுக்கு தேவைப்படும் என்று நான் எண்ணவில்லை” என அவர் நியுஸ் 18 க்கு தெரிவித்தார். “இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக பௌத்தம் ஸ்ரீலங்காவில் ஒரு அடித்தளத்தை கொண்டுள்ளது என்பது உண்மை. ஆனால் மதத்தின் அடிப்படையில் எவருக்கும் எதிராக நாங்கள் ஒருபோதும் பாரபட்சம் காட்டுவதில்லை. சிவசேனையின் அச்சம் ஆதாரமற்றது. இந்துக்கள் இங்கே பாதுகாப்பாக உள்ளார்கள்” என்று தெரிவித்த குணவர்தனா, சிங்கள குடியேற்றம் பற்றிய சேனையின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.

தமிழர்கள் ஆதிக்கம் நிறைந்த வடமாகாணத்தின் தலைநகரை ஆளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிவசேனையை பற்றி சிங்களக் கட்சிகளைக் காட்டிலும் அதிகம் கவலைப்படுவது போலத் தெரிகிறது. சிவசேனை சிறிதளவு மக்களின் ஆதரவுடன் கூடிய அமைப்பாக இருந்தபோதிலும் மதத்தை அடிப்படையாகக் கொண்ட பிளவுகளின் முன்னேற்றங்களைக் குறித்த கவலைகள் தமிழ் கட்சிகளிடம் உள்ளன.

“ஒரு மத அடையாளத்தை வலியுறுத்துதல் ஒரு தவறான விடயம் அல்ல. ஆனால் இந்தக் கட்டத்தில் எங்களுக்கு அது தேவையில்லை. எங்கள் அடையாளம் தமிழர் என்கிற அடையாளம். நாங்கள் முற்றாக மதச்சார்பற்றவர்கள். தமிழர்களிடையே இந்துக்கள், கிறீஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் உள்ளார்கள். எல்லோரும் சமமானவர்கள். மதத்தின் அடிப்படையில் எங்களால் அவர்களைப் பிரிக்க முடியாது” ரிஎன்ஏ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்ஏ.சுமந்திரன் நியுஸ் 18 இடம் தெரிவித்தார். சிவ்சேனாவுடன் இந்த சிவசேனை வைத்துள்ள கூட்டு, 30 வருட உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள தீவு தேசத்தில் மதப் பிரிவினைகளுக்கு வழி வகுக்கலாம் என்கிற அச்சம் வெளிப்பட்டுள்ளது, என்று அவர் சொன்னார். ”அத்தகைய அமைப்புகள் தீவிரவாத நிலைப்பாடுகளை எடுக்க முடியும் என அவர் தெரிவித்தார். நாங்கள் ஏற்கனவே பௌத்த தீவிரவாத அமைப்பான பொது பல சேனாவை கொண்டுள்ளோம். இந்த பொது பல சேனா சித்தாந்தங்களுக்கு எதிரான மற்றொரு தீவிரவாத அமைப்பின் தோற்றம் மிகவும் ஆபத்தான ஒரு விடயம். அது வெவ்;வேறு மதங்களிடையே பகைமையை உருவாக்கலாம். இரண்டுமே சேனா என அழைக்கப் படுகிறது, அதன் அர்த்தம் இராணுவம். அவர்களுடைய நல்ல நோக்கம் எதுவாகவும் இருக்கலாம் ஆனால் அதன் கருத்து எதிர்மறையானது. சேனா என்கிற பெயரைக்கொண்ட அமைப்புகளை நாங்கள் வைத்திருக்க முடியாது”.

இதற்கு எதிராக பிரதிபலித்த சேனையின் நிறுவனர் சச்சிதானந்தன், அவருடைய அமைப்பு ஒரு தீவிரவாதமான அமைப்பு அல்ல மற்றும் அதை மற்றைய தீவிரவாத அமைப்புகளுடன் ஒப்பிடுவது நியாயமற்ற செயல் எனச் சொன்னார். “ஸ்ரீலங்கா இந்தியாவைப் போல ஒரு மதச்சார்பற்ற நாடு அல்ல. அது ஒரு பௌத்த மதச் சார்பான நாடாக உள்ளது. எங்கள் அரசியலமைப்பு பௌத்தம் ஒரு முன்னுரிமையான மதம் எனச் சொல்கிறது. அவர்கள் அரசாங்கத்திடம் இருந்து பணம் பெறுகிறார்கள். கிறீஸ்தவர்கள் கிறீஸ்தவ நாடுகளிடம் இருந்து பணம் பெறுகிறார்கள். முஸ்லிம்கள் அரபு நாடுகளிடம் இருந்து பணம் பெறுகிறார்கள். இந்துக்களுக்கு எதுவுமே கிடைப்பதில்லை” என சச்சிதானந்தன் நியுஸ் 18 இடம் தெரிவித்தார்.

“இரண்டாவதாக தமிழ் அடையாளம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்பது போலியான ஒரு கூற்று. தமிழ் முஸ்லிம்கள் 1987ல் பிரிந்து சென்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்தார்கள். கிறீஸ்தவர்கள் பெருமளவிலான மத மாற்றங்களை ஊக்குவிக்கிறார்கள். இதில் ஐக்கியம் எங்கே உள்ளது? பௌத்தர்கள் கூட இந்துக் கிராமங்களுக்குள் சுதந்திரமாகப் பிரவேசித்து புத்த சிலைகளை நிறுவுகிறார்கள். 2009 யுத்த முடிவுக்கு முன்பு அவர்கள் அப்படிச் செய்ய ஒருபோதும் துணிந்தது கிடையாது” என அவர் மேலும் தெரிவித்தார். சிவ்சேனாவின் ஆதரவு பற்றி கருத்து தெரிவிக்கையில் அவர் சொன்னது, “அவர்கள் ஆதரவு தந்தால் அதை நாங்கள் வரவேற்போம். ஆனால் இப்போது எங்களது அமைப்பு 100 சதவிகிதம் உள்நாட்டில் வளர்ந்துள்ள அமைப்பு. நாங்கள் சமாதானத்தில் நம்பிக்கை வைத்துள்ளோம். சிவ்சேனாவைப் போல இருக்க நாங்கள் விரும்பவில்லை” என்று.

பௌத்தர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஸ்ரீலங்கா 13 விகிதம் இந்துக்களின் சனத்தொகையை கொண்டது. சமீபத்தில் ஸ்ரீலங்காவுக்கு குடிபெயர்ந்த சில ஆயிரக்கணக்கானவர்களைத் தவிர அநேகமாக எல்லா இந்துக்களும் தமிழர்களே.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

2 comments:

  1. எழுக இந்துக் காவிப் பயங்கரவாதம்.

    ஹி ஹி

    ReplyDelete
  2. Again they r going put the tamil community in to trouble.

    ReplyDelete

Powered by Blogger.