Header Ads



ஆனமடுவ - மதவாக்குளம் முஸ்லிம்களின் சிறந்த முன்மாதிரி


-Ash-Sheikh TM Mufaris Rashadi-

அண்மையில் இலங்கையிலுள்ள ஆனமடுவ, மதவாக்குளம் என்ற ஊருக்கு குத்பா மற்றும் இளைஞர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தோம் அல் ஹம்துலில்லாஹ்.

அல்லாஹ்வின் உதவியால் இலங்கையின் பல பாகங்களுக்கும் அவனது மேலான மார்க்கத்தை எத்திவைப்பதற்காக செல்லக்கூடிய வாய்ப்பை அல்லாஹ் தந்து கொண்டே இருக்கிறான், எல்லாப் புகழ்களும் அந்த ரஹ்மானுக்கே உரித்தாகட்டும்.

எந்த ஊருக்குச் சென்றாலும் அங்குள்ள சிறப்பம்சங்கள் என்ன என்பதை தேடிப்பார்ப்பதில் அலாதியானதொரு இன்பம் நமக்கு, அந்த வகையில் குத்பா நிகழ்த்திய மதவாக்குளம் ஜுமுஆ பள்ளிவாசலுக்கு சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் சமூகம் தந்திருந்தனர் அதில் ஆச்சரியம் என்னவெனில் தொழுகை முடிந்து திக்ர்கள் துஆக்கள் எல்லாம் முடிந்து பள்ளித் தலைவர் பத்துக்கும் மேற்பட்ட அறிவித்தல்களை அறிவித்தார் ஆனால் அங்கு வந்திருந்தவர்களில் ஒருவர் கூட சிறுவர்கள் உற்பட யாருமே எழுந்து செல்லவில்லை தொழுத அதே இடத்தில் அமர்ந்து அறிவித்தல்கள் அனைத்தும் முடியும் வரை செவிமடுத்தனர்.

இந்த காட்சியை பார்த்ததும் எவ்வளவு ஒரு கட்டுப்பாடான சமூகம் என்பதை புரிந்து கொண்டேன், அதனை பார்த்த மாத்திரத்திலே எமது நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணம் எனக்குள் உதயமானது பகிர்ந்து கொள்கிறேன்.

ஜுமுஆ உரை நடாத்தப்படும் போதே வெளியில் நின்று அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களைக் கொண்டிருக்கும் அதிகமான ஊர்களுக்கிடையே இந்த ஊர் மக்களின் சிறந்த முன்மாதிரி மெச்சத்தக்கதே.

7 comments:

  1. சில ஜமாத் காரங்களுக்கு கண்ணில குத்த போகுதே!

    ReplyDelete
  2. ஜமாத்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

    ReplyDelete
  3. Etthana jamathukal etthana oorhala pirichchi wetchi irukku enru parkallaya voice sri lanka kongam thihari pakkam poy wanga nilama puriyum

    ReplyDelete
    Replies
    1. Don't follow Jamaths. Jamath kalai follow pannuvathal thaan pirachchinaiye

      Delete
  4. இக்கிராமத்துக்கு அல்லாஹ் மென்மேலும் புகழ்ச்சியை தருவானாக...

    ReplyDelete
  5. ஆஆ.....அப்ப அந்த ஊர்ள இயக்ககம் இயக்கச்சார்ந்த கொள்கைகள் இல்ல போல... இஸ்லாமும் இஸ்லாம் சார்ந்த (அஹ்லாக்கான) கொள்கைகள் மாத்திரம் தான் உள்ளது போல.

    ReplyDelete
  6. இன்னும் இயக்கங்கள் இந்த ஊர்ப்பக்கம் போகவில்லை போலும். போனால் தொழுகை முடிந்து ஸலாம் கொடுத்தவுடன் ஓரு சலசலப்பு கேட்கும். குளவி குத்தியவர்களைப் போல ஓட்டம்பிடிக்கும் மக்களை உருவாக்கிவிடுவார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.