October 25, 2016

புலிக்கொடியை ஏற்ற மறுத்த விக்னேஸ்வரன்

லண்டனில் புலிக்கொடி ஏற்றுவதற்கு, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மறுத்து விட்டார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவின் கிங்ஸ்டன் நகருக்கும் யாழ்ப்பாண நகருக்கும் இடையில் இரட்டை நகர உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்காக லண்டன் சென்றுள்ள வட மாகாண முதலமைச்சர், அங்குள்ள புலம் பெயர் அமைப்புகளால் ஒழுங்குபடுத்தப்பட்ட கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.

ஹரோவில் நேற்று முன்தினம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் பங்கேற்ற பெரியளவிலான கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வின் தொடக்கத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டு, மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தவும் ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டிருந்தனர்.

எனினும், நிகழ்வில் தாம் புலிக்கொடியை ஏற்ற மாட்டேன் என்று ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்த வடமாகாண முதலமைச்சர், அத்தகைய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அந்தக் கூட்டத்தில் தாம் உரையாற்ற மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

இதையடுத்து ஏற்பாட்டாளர்கள் புலிக்கொடியை ஏற்றும் முடிவைக் கைவிட்டனர். இதனையடுத்து, நிகழ்வில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சுமார் 30 நிமிடங்கள் உரையாற்றினார்.

அவர் தனது உரையில் அரசியல் வேறுபாடுகளை மறந்து தமிழர் பிரச்சினையைத் தீர்க்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

8 கருத்துரைகள்:

அரசியலுக்காக கொள்கையை மாற்றும் இவன் தான் அரசியலுக்காக மதத்தை முஸ்லிம்கள் பிடிப்பதாக சொன்னான். மூளைச்சலவை செய்யப்பட்ட மாங்காய் மடையர்கள் இருக்கும்வரை அடுத்த தேசிய தலீவர் இவர் தான்

@IR MS அடுத்த தேசியத்தலைவர் நான் தான் நீ தான் என்று ரிசாத் ,கக்ககீம்,அதாவுல்லா சண்டையிடூவது போல்சண்டையிட நாங்கள் முஸ்லீம்அல்லவே.

@IR MS, விக்கி சொல்வது, செய்வது எல்லாம் சரி தான். கொள்கை மாற்றம் ஒன்றும் இல்லை.

உங்கள் அரசியல்வாதிகள் போல், மதம்-யை வைத்து அரசியல் வியாபாரம் செய்வதும் இல்லை, பணம்/பதவிக்காக ஆட்சிக்கு வரும் கட்சிகளுக்கு நக்கி பிழைப்பதும் இல்லை.

ஈழம் என்கிற காலம் கடந்த காலாவதியான சித்தாந்தமில்லாமல் தமிழ் அரசியல்வாதிகளால் அரசியல் செய்யவும் முடியாது டயஸ்போறாக்களின் எலும்பு துண்டுகளை எதிர்பார்க்கவும் முடியாது. ஏன் புலியை ஆதரிக்கும் ஆள் புலி கொடியை மட்டும் ஏற்ற எதுக்கு அஞ்ச வேண்டும்? 60 ஆண்டு காலமாக அப்பாவி தமிழர்களை ஏமாற்றி இன்று வீதியில் நிறுத்தியதை தவிர தமிழ் அரசியல் கிழிச்சது என்ன ? இப்டி மக்களை உசுப்பேற்றி பிச்சையெடுக்க வைத்த தமிழ் அரசியல்வாதிகளை விட ஒவ்வொரு முஸ்லீம் ஊர்களையும் தமிழ் ஊர்களை விடவும் அபிவிருத்தி செய்துள்ள முஸ்லீம் அரசியல்வாதிகள் எவ்வளவோ மேல் நீங்க இன்னும் 50 வருடத்திற்கும் வெட்டி பேச்சு பேசி அடுத்த சமுதாயங்களை பார்த்து பொறாமை கொண்டுகொண்டே இருப்பீங்க மற்ற சமுதாயம் வேகமான முன்னேற்றத்தில் நீங்க எட்டி பிடிக்க முடியாத தூரத்தில் இருக்கும்

இவனுகளுடைய பொழப்பையும் ஒற்றுமையும் லண்டனில் பார்க்கிறோமே.அடுத்தவனை சுரண்டி வாழறவனுகள்

சுய தணிக்கை..?

Post a Comment