Header Ads



ஒப்பனையில்லாத முகத்தை பார்த்து கணவன், மனைவியை விவாகரத்து

ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஒப்பனைகள் இன்றி மனைவியின் முகத்தை முதல்முறை பார்த்த கணவர் ஒருவர் திருமணம் முடித்த சில தினங்களிலேயே விவாகரத்து செய்துள்ளார்.

விவாகரத்து பெற்ற மனைவிக்கு சிகிச்சை அளிக்கும் உளவியல் நிபுணர் டொக்டர் அப்துல் அஸிஸ் அஸாப், இந்த தகவலை கல்ப்நியூஸ் பத்திரிகைக்கு குறிப்பிட்டுள்ளார். aஇந்த சம்பவத்தால் குறித்த பெண் மன அழுத்தத்திற்கு முகம்கொடுத்துள்ளார்.

தான் திருமணத்திற்கு முன்னர் பார்த்த அழகு மனைவியிடம் இல்லை என்று குறிப்பிட்டிருக்கும் 34 வயது கணவர், போலியான கண் இமைகள் மற்றும் பல்வேறு ஒப்பனைகளை பயன்படுத்தி தன்னை ஏமாற்றியதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

திருமணத்திற்கு பின்னர் 28 வயதான தனது மனைவியை அல் மம்சார் கடற்கரைக்கு அழைத்து சென்றிருக்கும் கணவர் மனைவியுடன் கடலில் நீராடியபோது அவரது ஒப்பனைகள் கலைந்துள்ளன.

ஒப்பனைகள் கலைந்த பின்னர் தன்னை கணவரால் அடையாளம் காண முடியாமல் போனதாக அந்த மனைவி குறிப்பிட்டுள்ளார். திருமணத்திற்கு முன்னர் அந்த மனைவி ஒப்பனை அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு செயற்கையான கண் இமைகளை பொருத்திக் கொண்டுள்ளார்.

இது பற்றி கணவரிடம் அவர் உண்மையை கூறியபோதும் அந்த கணவர் விரைவிலேயே அவரை விவாகரத்து செய்துள்ளார். 

2 comments:

  1. மாப்புள செய்தது சரி என்று தான் சொல்ல வேண்டும்.ஏமாற்றி யாரும் திருமணம் செய்து வைக்க கூடாது.

    ReplyDelete

Powered by Blogger.