Header Ads



மாதம்பை முஸ்லிம்களின் காணிகளை, அபகரிக்க திட்டம் : பின்னணி என்ன..?

-விடிவெள்ளி+ எம்.எம். முஹிடீன் இஸ்­லாஹி-

 மாதம்பை பழைய நகர் என்­பது பன்­னெ­டுங்­கா­ல­மாக முஸ்­லிம்கள் வாழ்ந்து வரும்  ஒரு கிராமம் ஆகும். இது கொழும்பு- சிலாபம் ஏ-3 வீதியில் அமையப் பெற்­றுள்­ளது. இப்­பி­ர­தே­சத்­தி­லுள்ள முஸ்­லிம்கள் முற்­காலம் தொட்டு வாழ்ந்து வந்­தி­ருப்­பினும், இவர்­க­ளிடம் 1886 ஆம் ஆண்டு தொடக்கம் இருந்­த­தற்­கான அத்­தாட்­சி­யாக காணி உறு­திகள் காணப்­ப­டு­கின்­றன.

 இப்­ப­டி­யான இப்­பி­ர­தேசம் கடந்த வியா­ழக்­கி­ழமை (29) முதல் ஊட­கங்­களின் கவ­னத்­துக்கு வந்­துள்­ள­துடன், ஒரு பேசு பொரு­ளா­கவும் மாறி­வ­ரு­கின்­றது. இந்தப் பிர­தே­சத்தில் தற்­பொ­ழுது எழுந்­துள்ள பிரச்­சி­னை­யா­னது உடன் தீர்க்­கப்­ப­டாது போனால், இரு இனங்­க­ளுக்­கி­டை­யி­லான ஒரு முறு­க­லாக மாறலாம் என்ற அச்சம் தோன்­றி­யுள்­ளது.

 இந்த பிரச்­சி­னையை சிலர் தவ­றாக சித்­தரிக்க முயற்­சிக்­கின்­றனர். இரு சமூ­கங்­க­ளுக்­கி­டை­யி­லான இனப் பிரச்­சி­னை­யாக இதனைக் காட்­டவும், மாற்­றவும் சில தீய சக்­திகள் எத்­த­னித்து வரு­வ­தாக அப்­பி­ர­தே­ச­வா­சிகள் குறிப்­பி­டு­கின்­றனர். பல நூற்­றாண்­டுகள் அங்­குள்ள இரு இனங்­களும் ஒன்­று­மை­யாக வாழ்ந்து வந்­துள்ள நிலையில், தனிப்­பட்ட ஒரு­வரின் சுய நல­னுக்­காக ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்ள இப்­பி­ரச்­சினை இரு இனங்­களின் சுமுக வாழ்­வுக்கு பாதிப்­பாக அமையும் என அப்­பி­ர­தேச மக்கள் அச்சம் கொண்­டுள்­ளனர்.
 இங்கு தலை தூக்­கி­யுள்ள பிரச்­சி­னையின் தன்மை குறித்து முஸ்­லிம்கள் சார்­பாக முன்­வைக்கும் ஆதா­ரங்­க­ளுடன் கூடிய தக­வல்­களை பரி­மாறிக் கொள்­வதே இந்தக் கட்­ரையின் நோக்­க­மாகும்.
 16 ஆம் நூற்­றாண்டில் கோட்­டையை ஆட்சி செய்த வீர பராக்­கி­ர­ம­பா­குவின் இரு புதல்­வர்­களில் ஒருவர் சக­ல­கலா வல்­லப மற்­றவர் தானே வல்­லப. முத­லா­வது மகன் உடு­கம்­பல பகு­தியை ஆட்சி செய்தார். தானே வல்­லப என்­பவன் தான் இந்த மாதம்பைப் பிர­தே­சத்தை ஆட்சி செய்­துள்ளான்.
 தானே வல்­லப எனும் ஆட்­சி­யாளன் தனது மனைவி இறந்த துக்­கத்தில், தனது மகனை கொலை செய்து விட்டு, தானும் தற்­கொலை செய்து கொண்­ட­தாக வர­லாறு கூறு­கின்­றது. மஹ­வெ­வ­வுக்கு, பக்­கத்­தி­லுள்ள “கல்­ல­முன” எனும் இடத்தில் இவ­னது மகனைக் கூட்டிச் சென்று இவ்­வாறு கொலை செய்­துள்ளான் எனவும் குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது. தாண்­ட­வ­ராயன் எனும் இவ­ரது பேரப் பிள்­ளை­யினால் இந்த தானே வல்­லபன் கொலை செய்­யப்­பட்­ட­தா­கவும் மற்­று­மொரு வர­லாற்றுத் தகவல் உள்­ளது.
 இவ­ருக்­காக அனு­தாபம் தெரி­வித்து பல இடங்­க­ளிலும் தேவா­ல­யங்கள் அமைத்­துள்­ளனர். தனி­வெல்ல தேவா­லயம் எனும் பெயரில் மாதம்­பையில் அமைந்­துள்ள தேவா­ல­யமும் இந்த மன்­னரின் நினை­வாக கட்­டப்­பட்ட ஒன்­றாகும். தனி­யொ­ரு­வரின் காணியில் இந்த தேவா­லயம் அமையப் பெற்­றுள்­ளது. இந்த தேவா­லயம் எத்­த­னையாம் ஆண்டு கட்­டப்­பட்­டது என்­ப­தற்­கான உறு­தி­யான சான்­றுகள் இல்லை.
 தற்­பொ­ழுது கீர்த்தி சேனா­நா­யக்க என்ற ஒரு செல்­வந்­த­­ரினால் இந்த தேவா­லயம் நடாத்­தப்­ப­டு­கின்­றது. இதற்கு முன்னர் இவ­ரது அப்­பாவின் அண்­ணனும், பின்னர் அப்­பாவும் இதனை பரி­பா­லனம் செய்­துள்­ளனர்.
 தேவா­ல­யத்­துக்கு மேற்குப் பக்­கத்தில் 18 முஸ்லிம் குடும்­பங்கள் வசிக்கும் வீடுகள், வியா­பார நிலை­யங்கள் உள்ள பிர­தே­சமும், வலப் பக்­க­மாக 7 முஸ்லிம் குடும்­பங்கள் வசிக்கும் வீடுகள் உள்ள பிர­தே­சமும் தேவா­ல­யத்தின் புனித பிர­தேச திட்­டத்தில் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளது.
 இந்தப் பிர­தே­சத்தை புனிதப் பிர­தே­ச­மாக்கும் திட்­டத்தை கீர்த்தி சேனா­நா­யக்க என்­பவர் 1991 ஆம் ஆண்­டி­லி­ருந்து முன்­னெ­டுத்து வந்தார். இருப்­பினும், அப்­போ­தி­ருந்த முஸ்லிம் அர­சியல் தலை­மைகள், பிர­தேச சிங்­கள அர­சி­யல்­வா­திகள் ஆகி­யோரின் எதிர்ப்­பினால் அது முடி­யாமல் போனது.
 பின்னர் கீர்த்தி சேனா­நா­யக்­கவின் முயற்­சியில் நில அளவை உத்­தி­யோ­கத்­தர்கள் வருகை தந்து அளப்­ப­தற்கு முயற்­சித்­தனர். இதன்­போதும் மக்கள் எதிர்ப்புத் தெரி­வித்­தனர்.
 வடிகான் வச­தி­களை மேற்­கொள்­வ­தற்கே காணி­களை அளப்­ப­தாக அங்கு வருகை தந்த அதி­கா­ரிகள் மக்­க­ளிடம் தெரி­வித்த போது அதற்கு அனு­மதி வழங்­கி­யுள்­ளனர்.
 இவ்­வாறு அளந்த பின்­னரே 1999.மார்ச் மாதம் 19 ஆம் திகதி வர்த்­த­மா­னியில் புனிதப் பிர­தேசம் என பதிவு செய்­துள்­ளனர். இவ்­வாறு அளந்த வரை­ப­டத்தை வைத்தே வர்த்­த­மா­னியில் பதிவு செய்­துள்­ளனர். வரை­ப­டத்­தி­லுள்ள திக­தியும், வர்த்­த­மா­னியின் திக­தியும் ஒன்­றா­கவே காணப்­ப­டு­கின்­றமை இதற்­கான சான்­றாகும்.
 இந்த வர்த்­த­மானி அறி­விப்­புக்கு எதி­ராக அர­சி­யல்­வா­திகள், சட்­டத்­த­ர­ணிகள் ஆகி­யோரை சந்­தித்து முறை­யிட்டோம். இந்தப் புனிதப் பிர­தேச பிர­க­ட­னத்­தினால் இருப்­பி­டங்­க­ளுக்கு எந்­த­விதப் பிரச்­சி­னையும் இல்லை. மது­பா­ன­சாலை, இறைச்­சிக்­கடை, விபச்­சார விடுதி போன்ற சட்­ட­வி­ரோத நிலை­யங்கள் இந்தப் புனிதப் பிர­தே­சத்­துக்குள் அமையக் கூடாது என்­பதே இதன் மூலம் கரு­தப்­ப­டு­வது என எமக்கு கூறப்­பட்­டது. இத­னை­ய­டுத்து மக்கள் போராட்­டத்தைக் கைவிட்­டனர்.
 இதன்­பின்னர் கடந்த அர­சாங்க காலங்­களில் எந்­த­வித முன்­னெ­டுப்­புக்­களும் இடம்­பெ­ற­வில்லை. நல்­லாட்சி அர­சாங்கம் வந்­த­வுடன், கீர்த்தி சேனா­நா­யக்க தனக்குள்ள அர­சியல் செல்­வாக்கைப் பயன்­ப­டுத்தி இதனைச் செய்யப் பார்க்­கின்றார். இந்த நட­வ­டிக்­கைக்கு அர­சாங்­கத்தின் மேல் மட்ட அர­சி­யல்­வா­தி­களும் பின்­ன­ணியில் இருப்­ப­தாக சந்­தே­கங்கள் இல்­லாமல் இல்லை.
 ஏற்­க­னவே வர்த்­த­மா­னியில் பதி­யப்­பட்ட புனிதப் பிர­தே­சத்தை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு அனு­ம­தியைப் பெறும் நட­வ­டிக்­கையே அண்­மையில் ஆரம்­பிக்­கப்­பட்­டது. இதற்கு எதிர்ப்புத் தெரி­வித்தே கடந்த 29 ஆம் திகதி ஆர்ப்­பாட்­டமும் இடம்­பெற்­றது.
 தற்­பொ­ழுது அளப்­ப­தற்கு வருகை தந்­ததன் நோக்கம், புனிதப் பிர­தே­சத்­துக்குள் இடம்­பெற்­றுள்ள முஸ்­லிம்­களின் 24 வீடு­க­ளையும் அப­க­ரித்து, அந்த இடங்­களில், தேவா­ல­யத்தின் வாகனத் தரிப்­பிடம், கோபு­ரங்கள் உட்­பட தேவா­ல­யத்தின் பல அபி­வி­ருத்தி முன்­னெ­டுப்­புக்­களை மேற்­கொள்­வ­தற்­காகும்.
 தற்­பொ­ழுது இப்­பி­ர­தே­சத்தில் அள­வீட்டு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க இட­ம­ளிக்­கப்­ப­டு­மாயின் அதனை வைத்து அடுத்த கட்­ட­மாக 24 வீடு­களை அப­க­ரித்து தேவா­ல­யத்தின் விஸ்­த­ரிப்பு இடம்­பெறும் என பிர­தேச மக்கள் அச்சம் கொண்­டுள்­ளனர்.
 இதில் விசேட அம்சம் என்­ன­வெனில், தேவா­ல­யத்தைச் சூழ­வுள்ள வீடு­களில், முஸ்­லிம்­களின் வீடு­களைப் போலவே, சிங்­கள சமூ­கத்­த­வர்­களின் வீடு­களும் அமையப் பெற்­றுள்­ளன. இருப்­பினும், ஏற்­க­னவே, வர்த்­த­மா­னியில் புனிதப் பிர­தே­ச­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள வரை­ப­டத்தில், எந்­த­வொரு சிங்­கள சமூ­கத்­த­வர்­களின் வீடு­களும் உட்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. முஸ்­லிம்­களின் வீடுகள் மாத்­தி­ரமே அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.
 ( இது தொடர்­பான உத்­தி­யோ­க­புர்வ அரச வரை­படம் இங்கே இணைக்­கப்­பட்­டுள்­ளது. இந்த வரை­ப­டத்தில் பச்சை நிறத்தில் காணப்­பட்­டுள்ள பகு­திகள் புனிதப் பிர­தே­சத்­துக்குள் அடங்கும் முஸ்­லிம்­களின் குடி­யி­ருப்பு பிர­தேசம். கறுப்பு நிறத்தில் அடை­யா­ள­மி­டப்­பட்­டுள்ள பகுதி தேவா­ல­யத்தைச் சூழ­வுள்ள சிங்­க­ள­வர்­க­ளுக்­கு­ரி­யது.)
 இருப்­பினும், கவ­லைக்­கு­ரிய விடயம் என்­ன­வெனில், விகா­ரையைச் சூழ­வுள்ள சிங்­கள குடி­யி­ருப்புப் பகுதி எதுவும், புனிதப் பிர­தே­சத்­துக்குள் அடங்­க­வில்லை என்­ப­தாகும். முஸ்லிம் குடி­யி­ருப்புப் பிர­தே­சங்­களை சுவீ­க­ரிப்­ப­தற்­கான முயற்­சியே இந்த புனிதப் பிர­தேச நாடகம் என்­ப­தற்கு இந்த வரை­பட தக­வல்கள் சிறந்த சான்­றாகும் எனச் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது.
 இப்­பி­ர­தேச மக்கள் தமது பிரச்­சி­னையை அர­சாங்­கத்தின் கவ­னத்­துக்கு கொண்டு வரு­வ­தற்­கான முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். இறு­தி­யாக சென்­ற­வாரம் அளப்­ப­தற்கு மேற்­கொள்­ளப்­பட்ட முயற்­சியின் போது, நில அளவை அதி­கா­ரிகள், சிலாபம் பொலிஸ் அத்­தி­யட்­சகர் உட்­பட பலர் வருகை தந்­துள்­ளனர்.
 மக்­களின் எதிர்ப்புக் கார­ண­மாக இவர்­களின் அளக்கும் முயற்சி கைவி­டப்­பட்­டுள்­ளது. பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ரிடம் நியா­யங்­களை தெளி­வாக பிர­தேச முஸ்லிம் தலை­வர்கள் எடுத்துக் கூறிய பின்னர், தங்­க­ளது நியா­யங்­களை உரிய அதி­கா­ரி­க­ளிடம் சென்று தீர்வைப் பெற்றுக் கொள்­ளு­மாறு ஒரு வார கால அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ளது.
 இந்த அவ­காசம் எதிர்­வரும் வெள்ளிக் கிழ­மை­யுடன் (07.10.2016) நிறை­வ­டை­கின்­றது. இந்தக் காலப் பகு­திக்குள் தீர்வு எதுவும் பெறப்­ப­டா­தி­ருந்தால், நீதி­மன்ற உத்­த­ர­வுடன் வந்து அளப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என பொலிஸ் அத்­தி­யட்­சகர் பிர­தே­ச­வா­சி­க­ளிடம் குறிப்­பிட்­டுள்ளார்.
 நாட்டின் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்கிர­ம­சிங்க உட்­பட முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் மற்றும் சிவில் அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் ஆகி­யோ­ரிடம், இக்­கு­று­கிய காலத்­துக்குள் இப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு பெற்றுத் தரும்­படி மாதம்பை முஸ்­லிம்கள் வேண்­டுகோள் விடுக்­கின்­றனர்.
 இப்பிரதேச முஸ்லிம் தலைவர்கள் மூன்றுவிதமான தீர்வுகளை முன்வைத்துள்ளனர்.
 01. ஏற்கனவேயுள்ள புனிதப் பிரதேச வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்தல்.
 02. புனிதப் பிரதேச திட்டத்திலுள்ள முஸ்லிம்களின் காணிகளை விடுவித்தல்.
 03. புனிதப் பிரதேச திட்டத்தில் தேவாலயத்தைச் சுற்றியுள்ள ஏனைய சமூகத்தவர்களையும் உள்வாங்குதல்
 மக்களின் இந்த எதிர்ப்பு நடவடிக்கை இரு இனங்களுக்கிடையிலுள்ள முறுகல் நிலைக்கானதல்ல. இப்பிரதேசத்தில் தலைமுறை தலைமுறையாக இவ்வளவு காலமும் மற்ற இனங்களுடன் சுமுகமாக வாழ்ந்தவர்கள் இதன்பிறகும் ஒற்றுமையாக இருக்கவே விரும்புகின்றனர். நாட்டில் முன்னெடுக்கப்படும் இன நல்லிணக்க செயற்பாடுகளுக்கு எமது பிரதேச மக்களின் ஒத்துழைப்பு நிலையாக உண்டு.
 தனிப்பட்ட ஒருவரின் நலன்களுக்காக இந்த பல்லாண்டுகால இனச் சுமுக வாழ்வை உடைப்பதற்கு இடமளிக்கக் கூடாது என்பதே பிரதேச மக்களின் எதிர்பார்ப்பாகும்.
(இக்கட்டுரை மாதம்பை பிரதேசவாசியும், அகில இலங்கை சமாதான நீதவானும், குறித்த பிரச்சினைக்கு நேரடியாக முகம்கொடுத்துவருபவருமாகிய எஸ்.எம்.கௌஸுல் அமீர் என்வரினால் வழங்கப்பட்ட ஆதாரபுர்வமான தகவல்களை தழுவி எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது) 

No comments

Powered by Blogger.