Header Ads



ஒவ்வொரு மாகாணத்துக்காகவும், நாங்கள் அடிபடக்கூடாது - யாழ்ப்பாணத்தில் மைத்திரி உபதேசம்


பிரித்தானியரால் இலங்கையில் 9 மாகாணங்கள் உருவாக்கப்பட்டன. அவர்களின் நிர்வாகத்தை செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒவ்வொரு மாகாணத்துக்காக, நாங்கள் ஒவ்வொருவரும் அடிபடக்கூடாது. ஒரே நாடு என்ற ரீதியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற 42ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது, 

'விளையாட்டும் நல்லிணக்கமும் உலகின் பொதுவான மொழி. இந்த விளையாட்டில் அனைவரும் ஒன்றிணைந்து தங்கள் திறமைகளை வெளிக்கொணரவேண்டும். அனைவரும் ஒரே நாட்டு வீரர்கள் என்ற ரீதியில் விளையாடினார்கள். 

ஒவ்வொரு மாகாணமும் தனிப்பட்டதென்று இல்லாமல், ஒரே நாட்டு மக்கள் என்ற வகையில் செயற்படவேண்டும். நாட்டின் அபிவிருத்திக்காகவும் அவ்வாறு சிந்திக்க வேண்டும். அனைத்து சமூகத்தையும் ஒன்றிணைக்க வேண்டும். உலகில் ஒழுக்கம் என்பது இல்லாமையால், பல யுத்தங்கள் ஏற்பட்டுள்ளது. ஒழுக்கம் பேணப்பட்டு, யுத்தம் போன்ற கொடியன இல்லாதொழிக்கப்பட வேண்டும்' என்று அவர் மேலம் கூறினார். 

No comments

Powered by Blogger.