Header Ads



நீதிமன்றத்தில் பசிலுக்கு எதிராக, இன்று குற்றப்பத்திரிகை வாசிப்பு - அவரோ எதிர்ப்பு

திவிநெகும நிதியத்தின் பணத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ உட்பட 4 பேருக்கு எதிராக இன்று -19- கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை வாசிக்கப்பட்டது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி என்.யூ. கருணாதிலக்க முன்னிலையில் குற்றப் பத்திரிகை வாசிக்கப்பட்டுள்ளது.

குற்றப் பத்திரிகை வாசிக்கப்பட்ட பின்னர், தம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, தமக்கும் இதற்கும் தொடர்பில்லை எனவும் தாம் நிரபராதிகள் எனவும் பசில் ராஜபக்ஸ உட்பட குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து வழக்கு விசாரணைகள் அடுத்த வருடம் மார்ச் மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.

சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திவிநெகும திணைக்களத்தின் பணிப்பாளர் கித்சிறி ரணவக்க இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

கடந்த ஆட்சிக்காலத்தின் போது திவிநெகும நிதியத்தின் பணத்தின் மூலம் திவிநெகும பயனாளிகளுக்கு கூரை தகடுகளை வழங்கியதில் 33 மில்லியன் ரூபா தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி, சட்டமா அதிபர் இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

No comments

Powered by Blogger.