October 22, 2016

'இஸ்லாத்திற்கு எதிராக நான் கதைத்திருந்தால், பள்ளிவாசலில் ஏதாவது எடுத்திருக்கலாம்' - கோடீஸ்வரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பு நிச்சயம் உங்கள் உரிமைகளை பெற்றுத்தரும். நான் மதவாதியுமல்ல, இனவாதியுமல்ல என தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

காரைதீவு விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் காரைதீவு உள்ளக விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். குறித்த விழா கழகத்தலைவர் வெற்றி அருள்குமரன் தலைமையில் கழகத் தலைமையக வளாகத்தில் நடைபெற்றுள்ளது. அங்கு மேலும் உரையாற்றுகையில்,

இணைந்த வடக்கு கிழக்கில் அம்பாறை மாவட்டம் புறக்கணிக்கப்படக்கூடாது. அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்தது உரிமைகளுக்காகவே தவிர அபிவிருத்திக்காக அல்ல. எனவே கூட்டமைப்பு நிச்சயம் தமிழ் மக்களது உரிமைகளைப் பெற்றுத்தரும்.

அம்பாறை மாவட்டத்தில் இதுவரை 4037 இந்துக்கள் மதம் மாற்றப்பட்டிருக்கின்றனர். மதமாற்றத்திற்கு எதிராக ஆலயங்கள், மற்றும் இந்து அமைப்புகள் குரல்கொடுக்க வேண்டும். இந்த மாவட்டத்தில் தமிழ்மக்கள் விழிப்பாக இருக்க வேண்டிய காலகட்டமிது. இல்லாவிட்டால் இன்னும் 5-10 வருடங்களில் அவர்களது இருப்பு கேள்விக்குறியாகும்.

வடக்கு கிழக்கில் அம்பாறை மாவட்டம் ஒதுக்கப்படுவது கவலைக்குரியது. குறிப்பாக தமிழ்மக்கள் பலவழிகளிலும் ஒதுக்கப்படுவதோடு அபகரிப்புகளும் தொடர்கின்றன. இந்த நிலையில் தென்கிழக்கு அலகால் எமது மக்களின் இருப்பு கேள்விக்குறியாக கூடிய துர்ப்பாக்கிய நிலை தோன்றும்.

எனவே அரசியல் ரீதியாக அழுத்தம் தேவைப்படுகின்றது.எமது மக்கள் எழுச்சிக்குள்ளாகி வீதியில் இறங்கி போராட வேண்டிய கட்டாயம் எழுகின்றது. கல்முனை தமிழ்மக்களின் பூர்வீக நிலம். அங்கு அவர்கள் 95 வீதம் வாழ்ந்து வருகின்றார்கள். இதில் எந்த மாற்றமும் இல்லை. யார் வந்தாலும் அதுதான் உண்மை. அந்த உண்மை சிலருக்குக் கசக்கின்றது என்பதற்காக அது பொய்யாகிவிடாது.

எமது மக்களின் உரிமைகளுக்காக நான் குரல்கொடுக்கின்ற போது அதனை திரிவுபடுத்தி இஸ்லாமிய சகோதரர்களை எனக்கு எதிராக திசைதிருப்பும் கைங்காரியத்தில் சிலர் ஈடுபட்டுள்ளனர். என்னை இனவாதியாக சித்தரிக்க முற்படுகின்றனர்.

இஸ்லாமியர்கள் எனது நல்ல நண்பர்கள். அவர்கள் எந்த காலத்திலும், எந்த விதத்திலும் நான் எதிரியாக பார்த்ததில்லை. அப்படியொரு தேவையுமில்லை. ஆனால் எனக்கெதிராக எதிர்ப்பு தீர்மானம் ஒன்றை பள்ளிவாசலில் பிரகடனப் படுத்தியுள்ளனர்.

உண்மையில் இஸ்லாத்திற்கு எதிராக நான் கதைத்திருந்தால் அப்படி பள்ளிவாசலில் ஏதாவது எடுத்திருக்கலாம். ஆனால் நான் எனது மக்களுக்காக குரல் கொடுக்கின்றபோது அதனை இன,மத உணர்வுடன் பார்த்து பள்ளிவாசலில் கூடி கதைப்பதென்பது வேடிக்கையாக இருக்கின்றது.

ஒரே நாளில் 3 இடங்களில் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்கள் நடைபெற்றால் நான் எப்படி மூன்றுக்கும் செல்வது? முன்னுரிமை அடிப்படையில் எனது தேவை எங்கு அதிகமாக இருக்கின்றதோ அங்கு சென்றேன்.

அதாவது நான் பொத்துவிலுக்குச் சென்றேன். அன்று அங்கு சென்றிருக்காவிடின் பொத்துவில் தமிழர் காணிகள் அபகரிக்கப் பட்டிருக்கும். நண்பர் கலையரசன் நாவிதன்வெளியில் நிற்கவேண்டும். இன்றேல் அங்கேயும் பிரச்சினை வந்திருக்கும் எனவே நாம் கலந்துரையாடியதன் பின்னரே இந்த முடிவுக்கு வந்தோம். ஆனால் காரைதீவில் அப்படி செய்ய முடியாது. படித்தவர்கள் புத்திஜீவிகள் அதிகம் என்பதால் எளிதில் யாரையும் ஏமாற்றமுடியாது.

எமது பூர்வீக மண்ணை பாதுகாப்பதற்கும், உரிமைகளைப் பெறுவதற்கும், இழந்த மண்ணை மீட்பதற்குமாகவே இத்துணை பெரும் போர் இடம்பெற்றது. பல போராளிகளையும் இன்னுயிர்களையும் இழந்தோம். நாம் புறப்பட்டது அந்த மண்ணையும், உயிர்களையும், கலை கலாசாரங்களையும் பாதுகாப்பதற்காகவே. மாறாக அபிவிருத்திக்காக அல்ல என்பதை மறந்துவிட கூடாது.

அம்பாறை மாவட்டத்தில் தமிழர் தம் கலை, கலாசார, விழுமியங்களை பேணிப்பாதுகாத்து வருவதில் காரைதீவுக்கு நிகர் காரைதீவே. இங்குள்ள பழம்பெரும் இந்த விளையாட்டு கழகம் பல திறமைசாலிகளையும் புத்தி ஜீவிகளையும், கல்விமான்களையும் உயர் தொழிலுள்ளோரையும் கொண்டுள்ளது. இந்த பிரதேச வளர்ச்சியில் குறித்த கழகத்தின் பங்குள்ளது பெருமளவு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

3 கருத்துரைகள்:

இனவாதிகள் கூச்சலுக்கு அஞ்ச தேவையில்லை ஐயா.அவர்களுக்கு அவர்களின் இனம்மட்டும்தான் இனம் மற்றவர்கள் எல்லாம் பிணம்

இங்கு பாராளுமன்றமும்,மாகாணசபைகளுமே சட்டங்களையும் தீர்மானங்களையும் இயற்ற முடியும்,நீதிமன்றமும்,போலீஸ்நிலையமுமே அதை நடைமுறை படுத்தமுடியும் பள்ளிவாசல்கள் ஏனையமதங்களையோ இனங்களையோ பாதிக்கும் நடடிக்கைகளை மேற்கொள்ளமுடியாது.
ஜனநாயகத்தை கேலீகூத்தாக்க கூடாது.
அடுத்தவர் விடயங்களில் மூக்கை நூளைப்பதை குறித்த பள்ளிவாசல் நிர்வாகம் நிறுத்த வேண்டும்.

Islam is the sole religion which is acknowledged by the God. Paying justice to other human-beings is of paramount importance in Islam and it's the matter close to piety.

Meantime no one can curb the people who flock to Islam by realizing it.
I publicly request Kumar and all others to scrutinize Islam and become Muslims. If you all can, just read the book named "Islam in Focus"

Post a Comment