October 10, 2016

திருட்டுக் காதலை பிடிக்க, புர்கா அணிந்த காதலன் கைது - கம்பஹாவில் சம்பவம்

கண்கள் மாத்திரம் தெரியும் வகையில் முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா அணிந்து கம்பஹா ரயில் நிலையத்தில் காணப்பட்ட ஆண் ஒருவரை அங்கிருந்தவர்களும் முச்சக்கர வண்டி சாரதி ஆகியோர் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ரயில் நிலையத்தில் நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்த இந்த நபரின் கண் புருவங்கள் பெரிதாக இருப்பதை அவதானித்த ஒருவர் அந்த நபர் குறித்து ரயில் நிலைய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து ரயில் நிலைய அதிகாரிகள், முச்சக்கர வண்டி சாரதி மற்றும் பொதுமக்கள் இணைந்து சந்தேக நபரை பிடித்து கம்பஹா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தான் கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தற்போது பிட்டகோட்டே பிரதேசத்தில் வசித்து வருவதாகவும் வெயங்கொடையில் வசிக்கும் தனது காதலி வேறு ஒருவருடன் கொண்டிருக்கும் திருட்டு காதலை கண்டுபிடிக்க தான் இவ்வாறு மாறு வேடத்தில் வந்ததாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் புர்காவை கொடுத்து சந்தேக நபரை விடுவித்துள்ளதாக தெரியவருகிறது.

9 கருத்துரைகள்:

இது நன்கு தட்டமிடப்பட்ட சதிதான் ஏன் அவனை புர்காவை கொடுத்து அனுப்ப வேண்டும்.இலங்கையில் புர்கா அணிவதை தடை செய்ய வேண்டும் என்று சொல்லும் கூட்டத்தால் திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது.பல கோணத்திலும் பிரச்சனைகளை உருவாக்கி புர்கா அணிவதற்கு தடை கோருவதற்கான முன்னடுப்புகள் எடுக்கப்படுகின்றது.அண்மையில் ஜனாதிபதியிடம் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் சமர்ப்பித்து இருந்த விடயமும் இதுதான்.முஸ்லிம்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் .

முஸ்லிம்களுக்கு எதிராக, போட்டி போட்டுக்கொண்டு திட்டமிட்டு SET UP பண்ராங்கப்பா

உண்மையை விளங்க ஆசையுள்ள மக்களுக்கு!புகையிரத நிலையத்தில் நாட்காளியில் உக்கார்ந்திருந்த நபரை முச்சக்கரவண்டி (ஆட்டோ டரைவர்) ஏன் பிடிக்கவந்தார் இதன் அழுத்தம் என்ன? பொதுமக்கள் பிடித்தார்கள் என்று கூறப்பட்டபின் பிரத்தியேகமாக ஆட்டோ டரைவர் கூறப்பட்டுள்ளார் ஆகவே இந்த சூழ்சிகளின் சினிமாவை அவர்தான் நன்றாக தெரிந்துள்ளார் என்பது மிக தெளிவு * ஆட்டோ டரைவர் ஆட்டோ ஓட்டாமல் ரையில் நிலையத்திலிருந்த இந்த நடிகரை பிடிக்க சென்றுள்ளார் இதன் உள்நோக்கம் என்ன? அவர் ரையில் நிலையத்தில் இருக்கும்போது இது நடந்திருந்தால் அவரும் பொதுமக்களில் உள்ளவர்தானே ஏன் அவரை மட்டும் இங்கு பிரத்தியேகமாக கூறவேண்டும மேலும் நடிகரை உடனடியாக காவல்நிலையம் விடுதலை செய்துள்ளது ஏன் இந்த செயலுக்காக எந்த சட்டநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை? நகாரணத்தை நன்றாக நீங்கள் அறிவீர்கள்!!!

காதலி மற்றவனுடன் இருக்கின்றால் என்று தெரிந்த பின்பு உனக்கு அவள் காதலி அல்ல மாற்றமாக உனக்கு அவள் தலைவலி அப்படி பட்டவளை நீ இவ்வாறெல்லாம் நடித்து பொலிஸில் மாட்டிக்கொள்ளவேண்டுமா? ஏன் நீ தலையை மொட்டயடித்து மஞ்சள் பிடவை அணிந்து சென்று அல்லது பாதிரி போன்று நீட்ட ஜிப்பா கருத்த தாடி தலைகவர் அணிந்து சென்று அல்லது ஒரு இந்து கோவில் பூசாரி போன்று உனைகள் அணிந்து சென்று இந்த வேலை கொஞ்ச தூரத்திலிந்து செய்திருக்கலாமே? இந்த முறைகளை பேனியிருந்தாலும் உன்தோற்றம் காதலிக்க விளங்காது ஏனெனில் நீ தூறமாயிருந்துதான் அவளை கவணிப்பாய்!

Mr Mustafa Jawfer wright comments 100% true.

நம்மடவனே ஹராம் என்கிறான். கூடிய சீக்கிரம் எதிர் பார்க்க லாம்...

செய்ய பாக்குறானுங்க

ஜஸாக்கல்லாஹ் க்ஹைர் பிரதர்.

நீங்கள் சொன்ன முறைகளில் செலவும் நேர விரயமும் அதிகம்

Post a Comment