October 06, 2016

உயிர் புனிதாமானது என, அல்குர்ஆன் கூறுகின்றது - அமெரிக்காவில் பாரிய விளம்பரம்


இஸ்லாமிய தேச பயங்கரவாத அமைப்புக்கு எதிராக அமெரிக்காவில் மாபெரும் விளம்பரப் பலகை அமைக்கப்பட்டுள்ளது.

மிஸுரி மாகாணம், செஸ்டர்ஃபீல்ட் பகுதியில் "ஐ.எஸ். அமைப்பு மோசமானது- இப்படிக்கு, உண்மையான முஸ்லிம்கள்' என்ற பொருள்படும்படியான ஆங்கில வாசகத்துடன் பெரிய விளம்பரப் பலகை அமைக்கப்பட்டுள்ளது. பலகையின் ஒரு பகுதியில் "உயிர் புனிதமானது' என்று குர்ரான் வாசகம் கூறுவதாக குறிப்பிட்டுள்ளது. இதற்கான செலவை சவுண்ட்விஷன் ஏற்றுள்ளதாக அதன் கீழ் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த விளம்பரப் பலகையை வைக்க உதவிய தாரிக் மாலிக் கூறியதாவது: ஐ.எஸ்.ஸுக்கு எதிராக முஸ்லிம்கள் போதிய அளவு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை என்ற எண்ணத்தைப் போக்கும் விதமாக இதை அமைத்துள்ளோம்.

ஐ.எஸ்.ஸால் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று உணர்த்தும் விதமாக இந்த விளம்பரப் பலகை அமைக்கப்பட்டுள்ளது. நாங்களும் ஐ.எஸ்.ஸுக்கு எதிரானவர்கள் என்று உணர்த்த வேண்டிய அவசியமாகியுள்ளது என்றார்.

சிகாகோ நகரைச் சேர்ந்த சவுண்ட்விஷன் என்னும் தொண்டு அமைப்பு இது போன்ற முதல் விளம்பரப் பலகையை அமைத்தது. அதன் பிறகு அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் இதுபோன்ற மாபெரும் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

2 கருத்துரைகள்:

என் எனது கருத்து பிரசுரமாகவில்லை? போலித்தனத்தை சுட்டிக் காட்டினால், கருத்தையே மறுத்து விடுவீர்களா?

சூரத்துன் மாயிதாவின் குறித்த வசனத்தை முழுமையாகவும், அடுத்த வசனத்தையும் பார்த்தாலே புரியும், இதன் உண்மையான அர்த்தம் :

5:31
5:31 فَبَـعَثَ اللّٰهُ غُرَابًا يَّبْحَثُ فِىْ الْاَرْضِ لِيُرِيَهٗ كَيْفَ يُوَارِىْ سَوْءَةَ اَخِيْهِ‌ؕ قَالَ يَاوَيْلَتٰٓى اَعَجَزْتُ اَنْ اَكُوْنَ مِثْلَ هٰذَا الْغُرَابِ فَاُوَارِىَ سَوْءَةَ اَخِىْ‌ۚ فَاَصْبَحَ مِنَ النّٰدِمِيْنَۛ ‌ۚ ۙ‏‏‏ 
5:31. பின்னர் தம் சதோதரரின் பிரேதத்தை (அடக்குவதற்காக) எவ்வாறு மறைக்க வேண்டுமென்பதை அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான்; அது பூமியை தோண்டிற்று (இதைப் பார்த்த) அவர் “அந்தோ! நான் இந்த காகத்தைப் போல் கூட இல்லாதாகி விட்டேனே! அப்படியிருந்திருந்தால் என் சகோதரனுடைய பிரேதத்தை நான் மறைத்திருப்பேனே!” என்று கூறி, கை சேதப்படக் கூடியவராகி விட்டார்.
5:32
5:32 مِنْ اَجْلِ ذٰ لِكَ ‌ۛ ؔ ۚ كَتَبْنَا عَلٰى بَنِىْۤ اِسْرَآءِيْلَ اَنَّهٗ مَنْ قَتَلَ نَفْسًۢا بِغَيْرِ نَفْسٍ اَوْ فَسَادٍ فِى الْاَرْضِ فَكَاَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيْعًا ؕ وَمَنْ اَحْيَاهَا فَكَاَنَّمَاۤ اَحْيَا النَّاسَ جَمِيْعًا ‌ؕ وَلَـقَدْ جَآءَتْهُمْ رُسُلُنَا بِالْبَيِّنٰتِ ثُمَّ اِنَّ كَثِيْرًا مِّنْهُمْ بَعْدَ ذٰ لِكَ فِى الْاَرْضِ لَمُسْرِفُوْنَ‏ 
5:32. இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.

5.32 ஆயத்தில் எந்த தவரும் இல்லையே!!

தமிழ் தீவிரவாதிகளால் யாழ்பாணத்திலிருந்து குடும்பத்தோடு அடித்து விரட்டப்பட்டவர், இப்போது ISIS இஸலாமிய தீவிரவாதிகள் என்கிறார்..
நண்பர் ரிஸ்வின் யாரை ஏமாற்றப்பார்கிறீர்கள்? இரவோடு இரவாக அடித்து விரட்டப்பட்ட உங்களுக்கு அடைக்கலம் வழங்கியவர்கள் யார்.? அவர்களும் உங்களுக்கு இப்பொழுது தீவிரவாதிகளாகத்தான் தென்படுகிறார்கள் போலும்..
தயவு செய்து ஒரு மணநல மருத்துவரிடம் சென்று உங்கள் மனநிலையை சீர்செய்யவும்.
உங்களுக்கு சொந்த வாழ்ககையில் ஏதாவது பிரச்சினையா? அப்படியானால் அதற்கு அல்லாஹ்வையும் அவனது மாரக்கத்தையும் பிழைகாணவேண்டாம். உங்களின் மனகோலாருகளை டாக்டர் ஒருவரிடம் சென்று சீர்திருத்திக்கொள்ள முயற்சியுங்கள்.
உங்களை விட அல்லாஹ்வையும் அவனது மாரக்கத்தையும் சிரிய மக்களே குறை கூறவேண்டும். ஏனென்றால் ISIS ஆல் அதிகம் பாதிக்கபடுபவர்கள் அவர்களே...

Post a Comment