October 25, 2016

இலங்கையின் பிக்குகளுக்கு, இந்தியா செல்ல கட்டணம் குறைப்பு


இந்தியாவுக்கு தள யாத்திரைகளை மேற்கொள்ளும் இலங்கையின் பௌத்த பிக்குகளுக்கு வீசா கட்டணத் தளர்வுகள் வழங்கப்படவுள்ளன.

இக்கோனோமிக் டைம்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது

இந்தியாவின் புதுடில்லி, தர்மசாலா, வாரனாசி குஷி நகர், புத்தகாயா போன்ற இடங்களுக்கு வருடத்தில் இலங்கையின் 55 ஆயிரம் பௌத்த பிக்குகள் செல்கின்றனர்.

இதன்படி வருடம் ஒன்றுக்கு 150 டொலர்களை மாத்திரமே பௌத்த பிக்குகள் வீசாவுக்காக செலுத்தவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒரு வருட வீசாவை ஐந்து வருடங்களுக்கு நீடித்துக்கொள்ளமுடியும்.

இலங்கையின் கோரிக்கைக்கு இணங்கவே இந்த வீசா கட்டணத்தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

0 கருத்துரைகள்:

Post a Comment