Header Ads



ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட, எனக்கு தேவைக்கும் அதிகமான தகுதி உள்ளது - கோத்தபாய

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆசிர்வாதம் கிடைத்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தனக்கு தேவைக்கும் அதிகமான தகுதி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் ஜனாதிபதி தேர்தலில் ஒன்றில் போட்டியிடுவதற்கு தான் இன்னமும் இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளவில்லை என அவர் கூறியுள்ளார்.

எனினும் எதிர்வரும் காலங்களில் எந்தவொரு முறையிலும் நாட்டில் சேவை செய்வதற்கு தான் ஆயத்தம் என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு இன்னுமொரு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசியலமைப்பில் இடமில்லை. இதனால் புதிய முகம் ஒன்று தொடர்பில் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஒன்று இருக்கும் என கோத்தபாய சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏதாவது ஒரு வகையில் தான் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் முழுமையான ஆசிர்வாதம் தனக்கு கிடைக்கும். அவ்வாறு ஆசிர்வாதம் கிடைக்கவில்லை என்றால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்பார்ப்பில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. Minissu maranna sudu van dala minissu ussanna horakam karanna onewatath wada sudusukam tibenawa. Chande denna tama minissu neththe.den chande horata ganinnath behene.

    ReplyDelete
  2. கோத்தாவின் தேர்தல் சின்னம் - வெள்ளை வேன்.

    ReplyDelete
  3. தம்பி ஜனாதிபதி அண்ணன் பிரதமர் இதுதான் இவர்களின் திட்டம் அதன் பிறகு நாடு முழுவதும் வெள்ளை வேன் ஓடும்

    ReplyDelete
  4. You could have said it, if you hadn't been a racist. I must appreciate your work in cleaning up Colombo city but you failed to implement the equal rights! Your Racist ideology makes you an unsuitable conditate.
    We Sri Lankan's need someone strong like you as a leader but without a racist mind.

    ReplyDelete

Powered by Blogger.