Header Ads



தமிழ் - முஸ்லிம் மக்கள் மொழியினால் ஐக்கியப்பட்டுள்ளனர் - விக்னேஸ்வரன்

-எம். எல். லாபிர்-
 
தமிழ், முஸ்லிம் மக்கள் சமய கலாச்சார விழுமியங்களில் வேறுபட்டிருந்தாலும் மொழியினால் ஐக்கியப்பட்டுள்ளனர். நீண்டகால வரலாற்றை கொண்ட இவ்விரு தினங்களும் தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டு சமூகமாக வாழ்கின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் முஸ்லிம்கள் அழகான தமிழில் பேசக்கூடியவர்களாகவும் காணப்படுகின்றனர் என வடமாகாண சபையின் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கூறினார்.

யாழ் மாவட்ட பிரஜைகள் குழுவினர் கைதடி, முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் கடந்த வாரம் சந்தித்து உரையாடும் போது கூறினார். தொடர்ந்து உரையாடும் போது,

கடந்த கால அரசாங்கத்தில் மக்கள் வாய் திறந்து பேசமுடியாத நிலை காணப்பட்டது. தற்போதைய நல்லாட்சி அரசில் இந்நிலை மாறி மக்கள் சுதந்திரமாக பேசும் வாய்ப்பு கிடைத்துள்ளன. இதை மக்கள் விழிப்பணர்வுடன் தமது பிரச்சினைகளை வாய்விட்டு பேச அரசும், தமிழ் தலைவர்களும் இடம் கொடுக்க வேண்டும்.

கடந்த கால யுத்தத்தினால் வடபகுதி மக்கள் பல்வெறுப்பட்ட இழப்புகளை அனுபவித்துள்ளனர். வெளிநாடுகள் பிரச்சினைகளை உண்ணிப்பாக கவனித்து வருகின்றன. காணாமல் போனவர்கள், விதவைகள், ஊனமுற்றவர்கள், சொத்து இழப்புகள் இவற்றுக்கெல்லாம் தீர்வை பெற்றுக் கொடுக்க வெண்டும்.
சமூக நிறுவனங்கள் ஒன்றினைந்து மக்களுக்கு விழிப்பூட்டி அவர்களின் பிரச்சினைகளை ஆராய்தல் வேண்டும்.  அத்துடன் சகல மக்களும் மும்மொழித் தேர்ச்சி பெற்றவர்களாக விளங்க வேண்டும் என்றார்.

பிரஜைகள் குழுவின் சார்பாக தலைவர் கிஷோர் அன்ரன், செயலாளர் கலாநிதி நா. தனேந்திரன், பொருளாலர் மீ. லாபிர் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்
 

9 comments:

  1. Good points by vigneshvaran

    ReplyDelete
    Replies
    1. இதையெல்லாம் நம்புமளவு சோனிகள் ஒன்றும் முட்டாள்களில்லை

      Delete
  2. Muslim Thamul is quite different from Tamil language

    ReplyDelete
  3. இனவாத விஷக் கிருமி விக்கி, முஸ்லிம்களின் மேல் பாசம் பொங்கி பால் ஊத்துகிறார்.

    பாம்பிற்கு பாலை வார்த்தாலும், அது விஷத்தைத் தரும் என்பது சிறுபிள்ளைக்கும் தெரியும்.

    ReplyDelete
  4. I agree with Tajudeen and indeed Vicky is a Tamil communistic ruler who has many a times disregarded the humble requests of Muslim Community in Jaffna, he has promised many a times and simply forget to attend to any important issues of Muslims and now to get their votes tunes to the tones of political rhymes.

    ReplyDelete
  5. ان الشيطان لكم عدو مبين

    ReplyDelete
  6. வெல்செற் விக்கி!
    தீவிரம்,பலிக்காதுவிடத்து ,தந்திரம் பலிக்குமல்லவா!
    அதாவதுமாட்டோடு மல்லுக்கு நிக்காமல் புல்லுக்கட்டைக்காட்டி இழுத்துச்செல்லப்பார்க்கிறார்,
    ஞானசார கொஞ்சம் முறைத்தன் விளைவு, விலாங்குமீனைப்போன்ற தந்திரம் அவசியம்தான்,

    ReplyDelete
  7. Haha@நீதியன் பார்வை.

    ReplyDelete

Powered by Blogger.