October 26, 2016

பள்­ளி­வாசல் நிர்­வா­கி­க­ளுக்கு, ஷரீஆ சட்­டத்தை அமுல்­ப­டுத்­த அதி­காரம் இல்லை - வக்பு சபை

இலங்­கையின் வக்பு சட்­டத்தில் பள்­ளி­வாசல் நிர்­வா­கி­க­ளுக்கு ஷரீஆ எனும் இஸ்­லா­மிய சட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு அதி­காரம் வழங்­கப்­ப­ட­வில்லை.

அவ்­வாறு இஸ்­லா­மிய சட்­டத்தை அமுல்­ப­டுத்­தினால் அது நாட்டின் சட்­டத்­துக்கு முர­ணா­ன­தாகும். இதில் தெளி­வில்­லாமல் சில பிர­தே­சங்­களின் பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் செயற்­ப­டு­கி­றார்கள்.

இது தொடர்பில் சுற்று நிரு­ப­மொன்று அனைத்து பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் அனுப்பி வைக்­கப்­ப­ட­வுள்­ளது என வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம்.யாசின் தெரி­வித்தார்.

புத்­தளம் பிர­தே­சத்தைச் சேர்ந்த நல்­லந்­த­ழுவ பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உட்­பட்­ட­தாகக் கூறப்­படும் பெண்­ணொ­ரு­வ­ருக்கு தென்னை மட்­டையால் 100 அடிகள் வழங்கி தண்­டனை நிறை­வேற்­றி­யமை தொடர்பில் கருத்துத் தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.

குறிப்­பிட்ட பெண்­ணுக்கு 100 அடிகள் வழங்கி ஷரீஆ தண்­ட­னையை நிறை­வேற்­றிய குற்­றச்­சாட்டின் கீழ் புத்­தளம் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்ட நல்­லந்­த­ழுவ பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் நால்வர் புத்­தளம் நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­ட­போது அவர்கள் நால்­வ­ரையும் விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நீதிவான் உத்­த­ரவு பிறப்­பித்தார்.

நேற்று முன்­தினம் அவர்­க­ளுக்கு சட்­டத்­த­ர­ணி­யினால் பிணை கோரப்­பட்­ட­போதும் பிணை மறுக்­கப்­பட்­ட­துடன் எதிர்­வரும் ஜன­வரி மாதம் 2 ஆம் திகதி வரை அவர்­க­ளுக்கு விளக்­க­ம­றியல் உத்­த­ர­வி­டப்­பட்­டது.

வக்பு சபைத் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம்.யாசின் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;

நாட்டில் அமு­லி­லுள்ள சட்­டத்­துக்கு முர­ணாக எந்­தவோர் குடி­ம­க­னுக்கும் செயற்­பட முடி­யாது. நாட்டில் அமுலில் இல்­லாத ஷரீஆ இஸ்­லா­மிய சட்­டத்தை இங்கு அமுல்­ப­டுத்த முடி­யாது. வக்பு சட்­டத்தின் கீழ் பள்­ளி­வாசல் நிர்­வா­கி­க­ளுக்கு பள்­ளி­வா­சல்கள் மற்றும் வக்பு சொத்­து­களை நிர்­வ­கிக்கும் அதி­காரம் மாத்­தி­ரமே வழங்­கப்­பட்­டுள்­ளது.

நாட்டின் சட்­டத்­துக்கு முர­ணாக பாத­க­மாக எவரும் நடந்தால், அவர்­க­ளது நடத்தை அமைந்­தி­ருந்தால் சம்­பந்­தப்­பட்ட பிர­தேச பொலிஸ் நிலை­யத்­துக்கு அறி­வித்து நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும். இதை­வி­டுத்து தாம் நினைத்­த­படி ஷரீஆ சட்­டத்தை அமுல்­ப­டுத்தும் எவ­ருக்கும் குற்­ற­வியல் சட்­டத்தின் கீழ் தண்­டனை வழங்­கப்­பட முடியும்.

சில பிர­தே­சங்­களில் பள்­ளி­வாசல் நிர்­வா­கங்கள் சில குற்­றங்­க­ளுக்கு சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை ஊரி­லி­ருந்தும் ஒதுக்கி வைத்­து­வ­ரு­கின்­றன. இவ்­வா­றான தண்­ட­னை­க­ளையும் பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­களால் வழங்க முடி­யாது. இது மனித உரிமை மீறல்­க­ளாகும்.

கசை­ய­டிகள், ஊரி­லி­ருந்து விலக்கி வைத்தல் போன்ற தண்­ட­னைகள் புத்­தளம், அநு­ரா­த­புரம், பொல­ந­றுவை மற்றும் வடக்கு, கிழக்­கி­லேயே இடம்­பெ­று­கின்­றன.

இப்­ப­கு­தி­க­ளி­லுள்ள பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­களை இது தொடர்பில் தெளி­வு­ப­டுத்தி இது இலங்­கையின் சட்­டத்­துக்கு முர­ணா­னது என்­பதை எடுத்­து­ரைப்­ப­தற்கு செய­ல­மர்­வுகள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன. இச்­செ­ய­ல­மர்­வு­களை முஸ்லிம் சமய, கலா­சார, அலு­வல்கள் திணைக்­களம் நடத்தி வரு­கி­றது.

ஒரு­வ­ரது ஒழுக்­க­யீனம் தொடர்­பாக விசா­ரித்து தண்­டனை வழங்­கு­வ­தற்கு பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­துக்கு எந்த அதி­கா­ர­மு­மில்லை என்றார்.

கடந்த சில வாரங்­க­ளுக்கு முன்பு ஒரு பெண் வீட்­டி­லி­ருந்த வேளை இனந்­தெ­ரி­யாத நபர் ஒரு­வ­ரினால் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார்.

இவ்­வாறு துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உள்­ளான பெண் இது தொடர்பில் புத்­தளம் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பா­டொன்­றினை முன்­வைத்­துள்ளார். சந்­தேக நபர் தப்பிச் சென்­று­விட்­ட­தா­கவும் தெரிவித்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கைது செய்ய புத்தளம் பொலிஸார் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையிலே குறிப்பிட்ட பெண் பள்ளிவாசலுக்கு அழைக்கப்பட்டு 100 தென்னம்மட்டை அடிகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்விடயம் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்தே நீதிமன்றம் சந்தேக நபர்கள் நால்வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

 -விடிவெள்ளி -ARA.Fareel-

11 கருத்துரைகள்:

How does shariya law is implemented for adultery against a victim who was raped.. These people are making the the shariya law a mockery. Mr Yaseen you must give an explanation to this issue. Otherwise the non- Muslims will laugh at Our shariya Law.

There is no punishment for being a victim of a rape in Sharia. what they have done is beyond what Sharia has prescribed. In other words, they are transgressors and be sacked from the trusty board.

விசாரித்து தண்டனை வழங்க அதிகாரம் இல்லை என்றால் பள்ளி நிருவாகம் பள்ளி இமாமுக்கு சம்பளம் மட்டும் குடுப்படக்கா ? நிர்வாகம் என்பது பகுதியில் இடம்பெறுகின்ற மார்கத்துக்கு மோசமான செயல் இடம்பெற்றால் யார் கவனிப்பது ?

Mr Mohamed Uwais . You have to understand that we are not living in Muslim Country. The does not permit to impose any punishment on any body. Only the courts and the judicial system will deal with it as per the law of this country. shariya law is not accepted in Sri lanka.

Uvais nana
Viphacharam sencheendalum 3pear satchi illama thandanai walanga mudiyathu.ithu than sharia sattam

பள்ளி நிர்வாகம் இத செய்யாட்டி யாரப்பா இத செய்றது ஊர்ல யாரும் தப்பு பண்ணிணா வக்பு சபைக்கு அறிவிங்க அவங்களே பார்த்து முடிக்கட்டும்
இதல்லாம் கியாமத் நாளைக்குறிய அடையாளம்தான்

முஸ்லிம் சமூகத்தில் வன்முறைகள்,விபச்சாரம்,மது பாவனை,திருட்டு போன்ற குற்றச் செயல்கள் குறைவாகக் காணப்படுவதற்கு பள்ளிவாசல் நிவாகங்களின் சரீஆச் சட்டப் பிரயோகமே காரணதபகும்.அதற்கு தடை வரும் போது குற்றச் செயல்கள் அதிகமாகும்.இதைக்கட்டுப் படுத்த ஊருக்கொரு பொலிஸ் நிலையம் அமைத்தாலும் குற்றச் செயலைக் குறைக்க முடியாது.இதற்கான மாற்றுத்திட்மொன்றை முஸ்லிம் கலாச்சார திணைக்களம் முன் வைக்க வேண்டும்.தவறும் பட்சத்தில பள்ளிகளைக்கூட நிர்வாகிக்க யாரும் முன்வரமாட்டார்கள்.சில பள்ளி நிருவாகங்கள் தனித்தனி படிவங்கள் மூலம் குடும்பத்லைவரிடம் அவரது பொறுப்பிலுள்ள நபர்கள் செய்யும் மார்க ரீதியான தவறுகளுக்கு பள்ளிநிருவாகம்,அல்லது பள்ளிவாசல் பொதுச்சபை பரிந்துரைக்கும் சரீஆ சட்டம் அல்லது குறித்த கிராம சமூகச் சட்டத்தை ஏற்றுக் கொள்வதாக உறுதிப்படுத்தியுள்ளனர். இன்றைய நிலையில் இதனைக்கூட சட்ட ரீதியாக பரிசீலிக்க வேண்டிய சூழல் காணப்படுகிறது.ஆக ஏனைய சமூகங்களைப் போல் நமது சமூகமும் சீரழிய புத்தளம் நல்லாந்தளுவ சம்பவம் முன்னுதாரணமாக அமையப் போகிறது.இது நாட்டிற்கு உகந்ததல்ல அரசு இதை கவனத்தில் கொண்டு குற்றவியல் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வர முஸ்லிம் அரசியல் வாதிகள் முன்வர வேண்டும்.இதில் அகில இலங்கை இஜம்மிய்யதுல் உலமா சபையும் அவசரமாக தமது கவனத்தில் கொண்டு பள்ளி நிருவாகங்னகளை தொடர்ந்து செயற்பட ஆவண செய்ய வேண்டும்.இதனை சில அரசசார்பற்ற மகளிர் அமைப்புக்கள் முன் நின்று செயற்படுகிறதா என்ற சந்தேகமும் வலுவாக உள்ளது. அப்படியான பெண்கள் அமைப்புக்களிலும்,அதில் பணியாற்றுபவர்களிலும் சமூகம் கவனமாக இருத்தல் அவசியமாகும்.இவர்கள் பெண்கள் உரிமை என்ற பெயரில் பெண்களை தவறச் செயபவர்களாகக் காணப் படுகின்றனர். மேலும் பொறுப்புடைய மகளிர் அமைப்புகள் பெண்களுக்கு ழைக்கப்படும் அநீதிகளை தடுத்து நீதி பெற முயலும் போது தமது (இஸ்லாம்) மார்கத்தினையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.இவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும்.

வக்ப் சபை தலைவரின் அறிக்கை முஸ்லிம் கிராமங்களை சீர்கேட்டின் பக்கம் அழைத்துச்செல்லும் பகீரங்க அழைப்பாகவே அமைந்துள்ளது,

வக்பு சபையிலும் தப்லீக்ஸீயமா அய்யோ படு பயங்கர காலத்தில் வாழ்கிரோம்

அந்தசப இந்தசப என்று இந்த தப்லீக்ஸீயம் இலங்கைபூராக கைப்பற்ரி உள்ளது அதுதான் உண்மை

Sharia law must be implemented to Muslims in this country. The so-called Wakf board must take initiative consulting with politicians to bring a resolution in parliament soon.
Only the Islamic law has the prowess to curb crimes and illegal acts.

Post a Comment