Header Ads



ரணில் குறித்து நேற்று வாயைத்திறந்து, மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஜனாதிபதி


சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதில் வெளிநாட்டு தூதுவர்கள் பெரிதும் ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மைக்காலமாக ஜனாதிபதியின் கோபம் கலந்த உரை பல்வேறு தரப்பினராலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர் உரையை சர்வதேச ரீதியாகவும் சில தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதாக அறிய முடிகிறது.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கள வார இறுதி பத்திரிகைக்கு செவ்வி ஒன்று வழங்கி இருந்தார்.
அந்த உரையினை அறிந்து கொள்ள வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் ஆர்வம் காட்டியமையால், அவற்றை உடனடியாக மொழி பெயர்ப்பு செய்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தூதரக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அண்மையில் ஜனாதிபதியால் ஆற்றப்பட்ட சர்ச்சைக்குரிய உரையின் விரிவாகத்தை குறித்த பத்திரிகை வெளியிட்டுள்ளது. அது குறித்து ஜனாதிபதியின் மேலதிக தகவல்களும் அதில் அடங்கியுள்ளன.
தற்போது நீதிமன்றில் உள்ள சில வழக்குகள் தொடர்பில் ஜனாதிபதி நேரடியாக தலையிட்டுள்ளமையினால், அது இலங்கையின் சுயாதீன நீதிமன்ற செயற்பாடுகளுக்கு பிரயோகிக்கப்படுகின்ற பாரிய அழுத்தம் என வெளிநாடுகள் கருதுகின்றமையால், அது குறித்து அறிந்து கொள்ள தூதுவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இராஜாங்க அமைச்சரான பௌசிக்கு எதிராக நீதிமன்றில் தற்போது உள்ள வழக்கு, ஓய்வு பெற்றுள்ள கடற்படை தளபதிகளுக்கு எதிராகவுள்ள வழக்கு, வெளிநாடுகள் பெரிய அளவில் ஆர்வம் காட்டும் ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பில் நீதிமன்றில் விசாரிக்கப்படுகின்ற வழக்குகள், ஜனாதிபதியின் உரை மற்றும் செவ்வி ஊடாக நேரடியாக அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக தூதரகம் சமூகம் கவலை வெளியிட்டுள்ளது.
இதேவேளை குறித்த பத்திரிக்கைக்கு ஜனாதிபதி நேற்று வழங்கிய செவ்வியில், 47 ஆசனங்களை வைத்திருந்த ரணிலை நான் பிரதமராக்கினேன். உலகில் எங்கும் அப்படி செய்ததில்லை. நான் செய்தவை எனக்கு மாத்திரமே தெரியும் என மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து ஜனாதிபதியின் உரைகளுக்கு பல்வேறு தரப்பினரும் அதி முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இதன்மூலம் சமகால அரசாங்கத்தில் வீழ்ச்சி ஏற்படலாம் என்பது ஒரு சாராரின் நம்பிக்கையாகவும் உள்ளது.

3 comments:

  1. You made ranil PM with 47 members. Ranil made you president with 4.7 million votes. Dont be ungrateful.

    ReplyDelete
  2. Do not counter attack the above statement as we should understand the wordings referred to the actual facts. I hope any reader should read the full text of the president and understand the context fully in order to make any further comments. It appears so far the President and the Prime Minister are getting along well.

    ReplyDelete

Powered by Blogger.