Header Ads



"வடகிழக்கு இணைக்கப்படவேண்டுமாக இருந்தால்..." எம்.ஐ.எம்.மன்சூர்

வடகிழக்கு இணைக்கப்படவேண்டுமாக இருந்தால் அரசியல் ரீதியாக நாங்கள் உறுதி செய்த விடயங்களில் எந்தவித இழப்பீடும் இல்லாமல் வடகிழக்கு மக்கள் அனைவரும் அனுபவிக்கக்கூடிய அரசியல் அதிகாரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என முஸ்லிங்காங்கிரசின் சம்மாந்துறை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்துள்ளார்.

சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனை வருடந்தோறும் நடாத்திவரும் சர்வதேச சிறுவர்தின நிகழ்வு நேற்று 01ஆம் திகதி சனிக்கிழமை மாலை பங்களாவடி ஜனாதிபதி விளையாட்டு சதுக்கத்தில் சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ். நஜீம் தலைமையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றுகையில்,

வடகிழக்கினை பொறுத்தவரையில் தமிழ் மக்களின் ஏகோபித்த அரசியல் தலைமை தமிழ் தேசிய கூட்டமைப்பே என்பது தமிழ் மக்கள் மத்தியிலே நிருபிக்கப்பட்டிருக்கின்றது. இருந்தும் அங்கும் பல்வேறு அரசியல் தலைமைகள் நாங்கள் தான் சரியான அரசியல் தலைமைகள் என அந்த சமுதாயத்தினை குழப்பி ஒற்றுமையை சின்னாப்பின்னமாக்கும் வேலையை இன்றும் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

இன்று தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் இருக்கும் குளறுபடியான நிலைமை எங்களுக்குள்ளும் இல்லாமல் இல்லை எமக்குள்ளும் குளறுபடிகளை உண்டுபண்ணி எமது சமூதாயத்தினை குழப்பி ஒற்றுமையை சின்னாப்பின்மாக்கும் இவ்வாரான செயற்பாடுகள் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

அதன் மறு வடிவந்தான் இன்று எமது சமூகத்திடையே வடகிழக்கு இணைப்பு பற்றி பல கருத்துக்கள் கூறப்படுகின்றது. அதாவது முஸ்லிங்காங்கிரஸ் வடகிழக்கு இணைப்பிற்கு சாதகமான சைகைகளை காட்டியிருக்கின்றது என்று சமூக வளைத்தலங்களை பயன்படுத்தி முஸ்லிம் சமூகத்தை கூறு போடும் சதி வேலைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

வடகிழக்கு இணைப்புப்பற்றி நாங்கள் கூறுவது என்னவென்றால் வடகிழக்கு இணைக்கப்படவேண்டுமாக இருந்தால் அரசியல் ரீதியாக நாங்கள் உறுதி செய்த விடயங்களில் எந்தவித இழப்பீடும் இல்லாமல் அதற்கும் மேலாக வடகிழக்கு மக்கள் அனைவரும் அனுபவிக்கக்கூடிய ஒரு நிலவரம், இஸ்த்திரத்தன்மை, அரசியல் அந்தஸ்த்து, அதிகாரம் என்பன உறுதிப்படுத்தப்படவேண்டும் அவ்வாறு உறுதிப்படுத்தப்படும் பட்சத்திலே தான் வடகிழக்கு இணைப்பைப்பற்றி சிந்திப்போமே தவிர இவை உள்ளடக்கப்படாத எந்தத்தீர்வாக இருந்தாலும் அதற்கு ஒருக்காலத்திலும் அனுமதிக்கமாட்டோம்.

இந்த நாட்டிலே நல்லாட்சியினை கொண்டு வந்ததன் முக்கிய நோக்கம் இந்த நாட்டிலே வாழும் அனைவருக்கும் சரியான நியாயம், அவர்களது உரிமை கிடைக்கவேண்டும் என்பனை நோக்காகக்கொண்டே நல்லாட்சி அரசைக்கொண்டு வந்தோம்.

இவ்வாறான நல்லாட்சிக்குரிய தேசிய அரசை கொண்டு வந்த பெருமை இந்த நாட்டில் உள்ள தமிழ், முஸ்லிம் மக்களையே சாரும் பெரும்பான்மை சிங்கள மக்களது வாக்கை கணக்கிட்டுப்பார்த்தால் தமிழ், முஸ்லிம் மக்கள் இல்லாமல் கடந்த காலத்தில் இருந்த காட்டுமிராண்டித்தனமான ஆட்சியை முடிவிற்கு கொண்டுவந்திருக்க முடியாது என்பதுஅனைவரும் அறிந்த நிறுபனமான உண்மை.

இன்று இந்த நாட்டில் மாத்திரமல்ல சர்வதேசத்திலும் போட்டி, பொறாமை என்பன நிறைந்து காணப்படுகின்றது, ஒவ்வொரு நாடுகளுக்கிடையிலும் இது மலிந்து காணப்படுகின்றது. இந்த நிலமைகளுக்கு ஏற்ப எதிர்கால மாணவர் சமூதாயத்தினை சிறந்த ஆழுமையுள்ள நல்லொழுக்கம், மற்றவர்களது உணர்வுகளை மதிக்கும் திறன் உள்ளவர்களாக வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு அனைவர்களிடத்திலும் இருக்கின்றது. எனவும் தெரிவித்திருந்தார்.

6 comments:

  1. கொள்கை என்றால் அதில் உறுதியாக இருக்க வேண்டும் வடகிழக்கு இணைப்பு கிழக்கு முஸ்லிம்களை பாதிக்கும் இதில் விட்டுகொடுப்புக்கு இடமில்லை..

    ReplyDelete
  2. உங்களின் மீது எங்களுக்கு எந்த நம்பிக்கையும் கிடையாது. வட கிழக்கை உரு போதும் இணைக்க அனுமதியோம். மாறாக அனுமதிக்கின்ற பேச்சுக்கே இடமில்லை. முஸ்லிம் காங்கிரஸ் என்று சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்ற முடியாது. உங்களுடைய சுய இலாபங்களை பார்த்துக்கொண்டாள் போதும். அரசியல், பொருளியல் ரீதியான சம உரிமை என்ற நிபந்தனைகளுக்கு அப்பால் எந்த உரிமைகளுக்கு அப்பாலும் எங்களுக்கு வட கிழக்கு இணைப்பு என்ற வார்த்தைக்கு இடமே இல்லை

    ReplyDelete
  3. யார் எது சொன்னாலும் கிழக்கு முஸ்லிம்களின் இறுதி மூச்சு இருக்கும்வரை வட கிழக்கு இணைப்புக்கு ஒரு போதும் இடமில்லை

    ReplyDelete
  4. Before do any thing,the immediate task of SL Muslim community is to make sure nonexistence of SLMC and it's Mafia group.

    ReplyDelete
  5. வட கிழக்கு இணைப்புக்கான நிபந்தனைகள் பற்றி பெரிய வீரம் பேசுவது போன்று பேசுவது முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றுவதற்கே.

    ReplyDelete
  6. Already dealing was done. If the SLMC is concerned about Muslims'rights ,then why is it inactive about preparation? Has it documented required facts. Does Hakeem meet any foreign dignatory to talk on Muslims'issues. At least did he submit any memorandum to UN secretary about Muslims?

    Look at Jaffna Muslims, they went to Geneva to expose their problems. What did Hakeem do? TNA leaders very frequently go there and look after their peoples' sufferings.

    ReplyDelete

Powered by Blogger.