October 19, 2016

மஹிந்த ராஜபக்சவை, சிந்­திக்கச் சொல்கிறார் மைத்­தி­ரி­

முன்ளாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்து இர ண்டு வரு­டங்­க­ளா­கியும் எந்த­வொரு சேவை­யையும் முன்­னெ­டுக்­க­வில்­லை­யென அர­ சாங்­கத்தை விமர்­சித்­துள்ளார். ஆனால் அவ­ரது அர­சாங்கம் முதல் மூன்று வரு­டங்கள் என்ன செய்­தது என்­ப­தையும் அவர் சிந்­தித்துப் பார்க்க வேண்டும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார்.

மஹிந்­தவின் ஆட்­சிக்­கா­லத்தில் அர­சாங்­கத்தின் மீது விமர்­ச­னங்கள் எழுந்த போது அவர் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் தேசிய அர­சாங்கம் அமைக்க வேண்­டிய சூழ்­நிலை தோன்­றி­யது என்­பதை மறந்­து­விடக் கூடாது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

இலங்கை மின்­சார சபையின் மேன்­பவர் ஊழி­யர்­க­ளுக்கு நிரந்­தர சேவை­யா­ளர்­க­ளாக நிய­மனம் வழங்கும் நிகழ்வின் இரண்டாம் கட்டம் பாரா­ளுமன்ற மை­தா­னத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்­றது. இந்­நி­க ழ்வில் பிர­தம அதி­தி­யாகக் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில்,

கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது நான் பொது வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கி­யி­ருந்தேன். அந்த சம­யத்தில் தற்­போது பதவி நிய­மனம் பெற்­றுக்­கொண்ட இலங்கை மின்­சார சபைக்கு மேன் பவர் முறையின் கீழ் சேவையில் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டி­ருந்­த­வர்கள் நீங்கள். அப்­போது உங்­க­ளி­டத்தில் வாக்­க­ளித்ததன் பிர­காரம் இன்று உங்­க­ளுக்கு நிரந்­தர பதவி நிய­ம­னங்­களை வழங்­கி­யுள் ளோம். 

என்­னி­டத்தில் மக்கள் உண்ண உணவை பெற்­றுத்­தா­ருங்கள் என்றும் வாக­னங்­களை பெற்­றுத்­தா­ருங்கள் என்றும் கோர­வில்லை. மாறாக கருத்துச் சுதந்­திரம், ஜன­நா­யகம் உள்ள ஒரு நாடு, அடிப்­படை மனித உரி­மை­களை பாது­காத்தல் உள்­ளிட்ட விட­யங்­க­ளையே கோரி­யி­ருந்­தனர். 

அதேபோன்று மீண்டும் ஒரு யுத்தம் ஏற்­ப­டா­த­வாறு நல்­லி­ணக்­கத்­துடன் சகல சமூ­கங்­களும் வாழும் ஒரு நிலைப்­பாட்­டினை ஏற்­ப­டுத்தி தாருங்கள் என்றும் நாட்டு மக்கள் கோரினர். அதேபோல் வறுமை ஒழிக்­கப்­பட வேண்டும் என்று கோரி­யி­ருந்­த­தையும் மறந்­து­விடக் கூடாது. அதற்­கா­கவே அடுத்த வரு­டத்­தினை வறுமை ஒழிப்பு வரு­ட­மாக நாம் பிர­க­ட­னப்­ப­டுத்­த­வுள்ளோம்.

அத்­துடன் இன்று மக்கள் கோரி­யவை பெற்­றுக் ­கொ­டுக்­கப்­பட்­டுள்­ளன. அதற்­க­ மைய கருத்துச் சுதந்­தி­ரமும் வழங்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் அதனை சக­லரும் பொறுப்­பான விதத்தில் பயன்­ப­டுத்திக் கொள்­கின்­ற­னரா என்­பது கேள்­விக்­கு­றி­யா­கவே உள்­ளது.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ அண்­மையில் இந்த அராங்கம் ஆட்­சிக்கு வந்த இரு வரு­டங்­களில் எந்த ஒரு செயற்­பாட்­டி­னையும் முழு­மை­யாக முன்­னெ­டுக்­க­வில்லை என்று குறிப்­பிட்­டுள்­ள­தாக பத்­தி­ரி­கைகள் வாயி­லாக அறிய முடிந்­தது. ஆனால் அது உண்­மைக்கு புறம்­பான விட­ய­மாகும்.

அவர்­க­ளுக்கு நாம் பதி­ல­ளிக்க வேண்­டு­மாயின் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவின் அர­சாங்கம் முதல் ஆட்­சிக்கு வந்த முதல் மூன்று வரு­டங்­களில் செய்­த­வற்றை பார்க்­கிலும் அதி­க­மாக நாங்கள் செய்­துள்ளோம். அவற்றை மக்கள் நேர­டி­யாக உணர்ந்­து­கொள்ள முடி­யா­தி­ருக்­கலாம் இருப்­பினும் அரச பொறி­மு­றை­க­ளுக்கு அமை­வான சிறந்த செயற்­பா­டுகள் பல­வற்றை முன்­னெ­டுத்­துள்ளோம்.

நீங்கள் இவற்­றினை செய்ய தவ­றி­யதன் கார­ணத்­தினால் தான் உங்­க­ளது பத­விக்­காலம் 2 வரு­டங்கள் மீத­மி­ருக்­கின்ற போதும் இந்­நாட்டு மக்கள் உங்­களை நிரா­க­ரித்­தனர். உங்­க­ளது ஆட்­சி­யி­லி­ருந்த அமைச்சர் மற்றும் உங்கள் கட்­சியின் செய­லாளர் என்ற வகை­யிலும் கடந்த அர­சாங்கம் எவ்­வா­றான நெருக்­க­டி­க­ளுக்கு எவ்­வாறு முகம்­கொ­டுக்க நேரிட்­டது என்­பதை நான் அறி­யாமல் இல்லை. 

அந்த நெருக்­க­டி­க­ளுக்கு முகம்­கொ­டுக்க முடி­யாத கார­ணத்­தி­னா­லேயே இலங்கை வர­லாற்றில் முதல் முறை­யாக ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் தேசிய அர­சாங்கம் அமைக்கும் ஒப்­பந்­தத்­திற்கு சென்­றீர்கள் என்­பதை நீங்கள் மறந்­தி­ருந்­தாலும் நான் மறக்­க­வில்லை. அதன் பின்னர் ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­லி­ருந்து  20 பேரை உங்கள் பக்கம் எடுத்­துக்­கொண்டு ஆட்சி அமைத்­தீர்கள். அந்த ஆட்­சியும் முதல் மூன்று வரு­டத்தில் பல நெருக்­க­டி­க­ளுக்கு முகம்­கொ­டுத்­தி­ருந்­ததை மறந்­து­விட முடி­யாது.

அந்த காலப்­ப­கு­தியில் உங்கள் அர­சாங்­கத்தின் மீது எழுந்­தது போன்ற விமர்­ச­னங்­களே தற்­போதும் எழு­கின்­றன. ஆனால் முதல் வரு­டத்தில் நாங்கள் அபி­வி­ருத்தி திட்­ டங்கள்  பல­வற்றை வரைந்ததால் சேவை களை முன்னெடுக்கவில்லை.

0 கருத்துரைகள்:

Post a Comment