October 06, 2016

மாளிகா­வத்தை மைய­வா­டி காணியை மீட்­பது, அனை­வ­ரதும் பொறுப்­பு

மாளிகாவத்தை மையவாடி காணி பல தரப்பினராலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விவகாரத்திற்கு தீர்வு கோரி இலங்கை முஸ்லிம் மத உரிமைகள் சங்கம் களமிறங்கியுள்ளது.

இந்த சட்டவிரோத கட்டடத்துக்கு எதிராக முன்னாள் மேயர் முஸம்மிலின் பதவிக்காலத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு அவரது பதவிக்காலத்தின் பின்பு நியமிக்கப்பட்ட மாநகர ஆணையாளரினால் வாபஸ் பெறப்பட்டமை தொடர்பாக இலங்கை முஸ்லிம் மத உரிமைகள் சங்கம் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

இந் நிலையில் இந்த விவகாரம் தொடர்பான சட்ட நடவடிக்கைகளை மீள்பரிசீலனை செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அறிக்கைகளைப் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது விடயத்தில் பூரண ஒத்துழைப்பை வழங்க தான் தயார் என மேல் மாகாண முதலமைச்சரும் அறிவித்துள்ளார்.

குறிப்பிட்ட வழக்கு மேல் மாகாண முதலமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்கவே வாபஸ் பெறப்பட்டதாக கொழும்பு மாநகர ஆணையாளர் தெரிவித்ததாக இலங்கை முஸ்லிம் மத உரிமைகள் சங்கத்தின் தலைவர் எம்.அஸ்லம் ஒத்மான் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை முஸ்லிம் மத உரிமைகள் சங்கத்தின் பிரதிநிதிகள், முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமையும் கடந்த புதன்கிழமை சந்தித்து மாளிகாவத்தை மையவாடிக் காணியில் சட்ட விரோதமாக பெரும்பாமை சமூகத்தவரான உபாலி ஜயசிங்கவினால் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடம் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அது மாத்திரமன்றி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இது தொடர்பில் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மாளிகாவத்தை மையவாடிக்காணி கடந்த காலத்தில் தனியார் ஒருவரினால் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டடம் ஒன்று நிர்மாணிக்கப்படுவதாகவும் கட்டடத்துக்குச் சொந்தக்காரர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக் ஷவின் நண்பர் என்பதால் நீதி நிலைநாட்டப்படவில்லையெனவும் தற்போதைய நல்லாட்சி அரசில் நீதியை நிலைநாட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்படியும் இலங்கை முஸ்லிம் மத உரிமைகள் அக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

மாளிகாவத்தை மையவாடிக் காணி கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நிர்வாகத்தின் கீழ் இருக்கின்றது. இது விடயத்தில் பள்ளிவாசலின் புதிய நிர்வாகம் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும் என பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

அந்தவகையில் கொழும்பு முஸ்லிம்களினது மாத்திரமன்றி முழு இலங்கை முஸ்லிம்களினதும் சொத்தாக விளங்கும் இந்த மையவாடி மற்றும் அதனுடைய காணியை மீட்பதும் அதற்காக உழைப்பதும் சகல முஸ்லிம்களினதும் கடமையாகும்.

இதுவிடயத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் தமது பொறுப்பை சரிவர நிறைவேற்ற வேண்டும் என சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

(விடிவெள்ளி பத்திரிகை வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம்)

5 கருத்துரைகள்:

If Colombo grand mosque commitee didn't take nasasary action or if they not in s position to do it it better to do disolve the commitee. It will help to appoint a new commitee to look in to the mater.

What is the status of ACJU in this regard

@Jabir

ACJU won't take a stand on these issues, just like BBS issues, only on Niqab they will come out fiercely

முஸ்லிம்கலுக்கு குரல்கொடுக்கும் சபை எங்கே

காத்திரமான முனனெடுப்புக்களையும் செயற்பாடுகளுமே இனறைய தேவை எனவே இதற்கு சாதகமாக செயற்பாடுகளை முன்னெடுகலாம் பொதுவாக இலங்கை முஸ்லீம்கள் பரவலாக பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள் தற்போது இதுதொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க யூ என் ஓ முக்கிய பிரதிநிதி வருகிறார் இவர் சிறுபான்மையனர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் ஆராய்வார்.எனவே ஒவ்வொரு பிரதேச நலன்விரும்பிகள் சமூகநிருவனங்கள் கவனம் செலுத்துங்கள் .

Post a Comment