Header Ads



மரண தண்டனை குற்றவாளியான, இவரை கண்டால் அறிவிக்கவும்

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளியை கைதுசெய்ய பொதுமக்களின் ஒத்துழைப்பை பொலிஸார் கோரியுள்ளனர்.
நோட்டன் பிரிட்ஜ்  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  அலுஓய பிரதேசத்தில் 2009ஆம் ஆண்டு ஓகஸ்ட மாதம் 3ஆம் திகதி நபரொருவரை கொலை செய்தமை மற்றும் பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தியமை ஆகிய சம்பவங்களில் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று நபர்கள , நோட்டன் பிரிட்ஜ் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதுடன் 6 மாத காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு, நுவரெலிய மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 9ஆம் திகதி வழக்கின் தீர்ப்பு வழங்ப்படும் என்று நீதிமன்றம் அறிவித்திருந்தது.
எனினும், அன்றைய தினம் பிரதான சந்தேகநபரான இலங்ககோன் திசேரா கமலதாஸ், நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அதனையடுத்து, கடந்த மார்ச் மாதம் 10ஆம் திகதி குறித்த நபருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
அத்துடன், குறித்த வழக்கு மார்ச் மாதம் 16ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மூவருக்கு மரண தண்டணை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்நிலையில், பிரதான சந்தேகநபரை இதுவரை கைதுசெய்ய முடியவில்லை என்றும் அவரை கைதுசெய்ய பொதுமக்கள் உதவி செய்யுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மரண தண்டனைப் பெற்ற குற்றவாளியான இலங்ககோன் திசேரா கமலதாஸ், 35 வயதுடையவர் என்றும் 5 அடி உயரம் கொண்டவர் என்றும் தலைமுடியை குட்டையாக வெட்டி, பின்புறமாக சீவியிருப்பார் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேகநபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0512232206 அல்லது 0715891121 ஆகிய இலக்கங்களுக்கு அழைத்து தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்

No comments

Powered by Blogger.