Header Ads



"எந்தப் பருப்பும், இனி வேகாது"

பௌத்த சமயத்தை உருவாக்கிய புத்தபெருமானே இந்தியாவிலிருந்து தான் இலங்கைக்கு வந்தவர். அவர் இலங்கைக்குவர முன்பு இங்கிருந்த மதம் என்னவென்று ஞானதேரருக்குத் தெரியுமா? என தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் பகிரங்கமாக கேள்வியெழுப்பியுள்ளார்.

திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டுக்கழகம் நடாத்திய கவிந்திரன் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

இலங்கையில் பூர்வீகமாக இருந்துவந்த தமிழ்மக்களை இந்தியாவிற்குப் போ என்று சொல்வதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது. முன்னைய காட்டுமிராண்டித்தனமான அரசின் ஜனாதிபதி மகிந்தவினால் உருவாக்கப்பட்ட பொது பலசேனா இன்றைய அரசாங்கத்தை தமது அரசாங்கம் என நினைத்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம் நடாத்துகிறார்.

எந்தப் பருப்பும் இனி வேகாது. எழுக தமிழ் நிகழ்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் அதுவும் தமிழ்மண்ணில் நடாத்துவதற்கு இன்றைய அரசாங்கம் கொண்டு வந்த சமாதான சூழலே காரணம் என்பதை மறந்துவிடலாகாது.

தமிழ்மக்கள் நீண்டகாலமாக மாறி மாறி பலதரப்பினராலும் ஏமாற்றப்பட்டு வந்திருக்கின்றனர். இனியும் ஏமாறக்கூடாது என்று கூறி ஒரு புரட்சி வெடித்திருக்கின்றது. அதற்கு சாட்சியம் கூறுவதைப்போல எழுகதமிழ் நிகழ்வு நடந்தேறியிருக்கிறது.

ஒரு இனத்தின் சுதந்திர வேட்கை நியாயமான ஆதங்கம் என்பவற்றை கொச்சைப்படுத்த ஞானசார தேரர் யார்? முதலில் அவர் இலங்கை வரலாற்றை அறிந்துவிட்டு சவால் விடட்டும். என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் பகிரங்கமாக சவால் விட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. I hope LAW and JUSTICE should be implemented to all citizen equally and every body should respect the rights of each and work for the PEACE in the land.

    If each one try to raise their race over other ... this will end up with destruction to this land.

    Let us consider every citizen has equal rights in this country and all will work for peace and controlled by the LAW and not by Emotions.

    ReplyDelete
  2. No more religion in Sri Lanka, impose the law as just Sri Lankan .
    Any Sri Lankan live anywhere in the country.

    ReplyDelete
  3. Kodiswarar Ayya. mikka nanri ungal karuthukkum peshshukkum. We hav to respect others right, that is correct. but herting and annoying others mind , self respect and religion for nothing is unacceptable my dear.Rasheed.

    ReplyDelete

Powered by Blogger.