Header Ads



'பொறுமை காக்க வேண்டும், உணர்ச்சிகளுக்கு ஊக்கமளித்தால், விளைவுகள் விபரீதமாகும்'

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை தொடர்பில் வருத்தம் வெளியிட்டுள்ள முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் இளைஞர் யுவதிகள் உள்ளடங்கலான அனைவரையும் பொறுமை காக்க வேண்டும் என அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இரு பல்கலைக்கழக மாணவர்களின் அநியாயமான அகாலமரணம் ஆழ்ந்த துயரத்தை எல்லோர் மனதிலும் ஏற்படுத்தியுள்ளது. எந்தச் சூழலில் எதற்காக அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது என்பதை நாங்கள் அறிந்து கொள்ளவேண்டும்.
பொலிஸாரின் சமிக்ஞையை மீறி இரு இளைஞர்களும் பயணித்தார்கள் என்ற காரணத்திற்காக துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டார்களேயானால் இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆகக் குறைந்த பலப்பிரயோகம் நடாத்தப்படவேண்டும் என்ற நிபந்தனையை மீறிவிட்டார்கள் போன்றே தெரிகின்றது.
இது பற்றி நீதவான் ஆராய்ந்தறிந்து அறிக்கை சமர்ப்பிப்பார் என்று நம்புகின்றேன். நான் வெளிநாட்டில் இருப்பதால் அவரின் அறிக்கை வந்துள்ளதோ என்பதை அறியேன். அவரின் அறிக்கையைப் பரிசீலித்த பின்னரே சட்டத்திற்கும் ஒழுங்கிற்கும் பொறுப்பானவன் என்ற வகையில் நான் எனது கருத்தை வழங்க முடியும்.
எனினும் இவ்வாறான செயல்கள் இனிமேலாவது நடைபெறாது பார்த்துக் கொள்ளவது எமது கடமையாகின்றது.
இறந்தவர்களின் உற்றார் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதேநேரத்தில் இந்த துன்பச் சூழலில் எமது இளைஞர் யுவதிகள் உள்ளடங்கலான அனைவரும் பொறுமை காக்க வேண்டுகின்றேன்.
எமது உணர்ச்சிகளுக்கு ஊக்கமளிப்பதால் ஏற்படும் பின் விளைவுகளை நாங்கள் எம் மனதில் நிறுத்தியே நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். என அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

19 comments:

  1. ஜப்னா முஸ்லீம் அடுத்தவர் விடயங்களை நோண்டி நூங்ககெடுக்கும் நீங்கள் அண்மையில் புத்தளம் பள்ளிவாசல் ஒன்று பலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் ஒருவருக்கு தென்னம்மட்டையால் 100 அடிவழங்கி தண்டனை வழங்கிய விவ காரத்தை மறைத்தது ஏன்.?
    அடுத்தவர் மீது அவதூறு பரப்பும் நீங்கள் உங்கள் சமூகத்தின் பிழைகளை மறைப்பது ஏன் இது ஊடக தர்மமா?

    ReplyDelete
    Replies
    1. அந்த செய்தி ஏற்கனவே பிரசுரமாக்கப்பட்டது. உன் கண்களில் படாமலிருப்பது மிக பெரிய ஆச்சர்யம். தொட்ட தொன்னூறிற்கும் முஸ்லிம்களின் குறையை நோண்டும் உம் போன்றவர்கள் கண்ணில் படாமல் போனது எரிச்சலா தான் இருக்கும்

      Delete
    2. விக்கி சொல்வது உம்மைபோன்ற குறை பிரசவங்களுக்குத்தான். அவசரம் எல்லாத்திலும் அவசரம். அதுதான் இந்தவிடயத்தில் எல்லோர் முன்னும் உம்மை முட்டாளாக்கிவிட்டது..

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  2. Aiyya elugha thamil endru neengal thaane elumbe chonneerghal

    ReplyDelete
  3. Mr.Kumar, that news already published you can check it out...

    ReplyDelete
  4. எழுக தமிழ் பொங்குக தமிழ் என்று அனைத்தையும் ஆரம்பித்து வன்னி காட்டுவாசிகளை உசுப்பேற்றிவிட்டு இன்று இந்த நடிப்பை பார்

    ReplyDelete
  5. Mr kumaran ungaluku oona kan pol

    ReplyDelete
  6. சகோதரர் KUMAR KUMARAN அவர்களுக்கு மிகவும் பொறுப்புடன் இந்த பதிலை வழங்குகிறோம்.

    பள்ளிவாசல் நிர்வாக வழங்கிய தண்டனை பற்றிய செய்தியை ஏற்கனவே ஜப்னா முஸ்லிம் இணையம் பதிவேற்றம் செய்துவிட்டது. நீங்கள் பார்க்கவில்லை போலும்..!

    மேலும் அடுத்தவர் மீது அவதூறு பரப்புவதாக எம்மீது பழி சுமத்துகிறீர்கள். நிச்சயமாக ஒருபோதும் நாங்கள் எவர் மீது அவதூறு சுமத்தவில்லை. இனி சுமத்தவும்மாட்டோம். அதற்கான எந்தவொரு தேவையும் எமக்கு இல்லை.

    முழு அளவிலான ஊடக தர்மத்தையும், ஒழுக்கநெறியையும் கடைபிடித்தே ஜப்னா இணையம் பயணிக்கிறது. எதிர்காலத்திலும் எமது நேர்மையான பயணம் தொடரும்.

    ReplyDelete
    Replies
    1. முஸ்லிம்கள் சம்பந்தமான எந்தவொரு பிரச்சினையும், தமிழ் அடிப்படைவாதம் முஸ்லிம்களை எப்படி நசுக்க பார்க்கின்றது என்பதையும் எந்தவிதமான சக்திகளுக்கும் அஞ்சாமல் உங்கள் ஊடகம் மூலம் தெளிவுபடுத்த வேண்டும். இன்ஷா அல்லாஹ் எமக்கான போராட்டத்தை ஊடகம் மூலம் நாம் கொண்டு நடந்த நீங்கள் இறுதிவரை எம்மோடு பயணிக்க வேண்டும்

      Delete
    2. பூனை கண்ணை மூடி கொண்டால் உலகம் இருண்டுவிடும் என்பதை போல ஜப்னா முஸ்லீம் செயற்படுவது வேடிக்கை.

      Delete
    3. பூனைக்குட்டிகள் புலிக்குட்டிகள் போல் வேஷமிடும்போது இதெல்லாம் சகஜம்ப்பா!
      JM சிலவேளைகளில் எமது கருத்துக்களையும் பதவிட்டதில்லை.
      ஆனால் உங்களைப்போன்ற இனத்துவேசிகளின் விஷத்தை இன்னமும் இங்கு கக்க அனுமதித்துள்ளார்களே? எந்தவொரு "இந்து" ( You said JM is a Muslim Media) ஊடகும் ஒரு முஸ்லிமுக்கு இவ்வாறு பின்னூட்டமிட அனுமதிக்குமா?

      Delete
  7. நான் அத்தகைய செய்தியை அவதானிக்கவில்லை. நான் கவனயீனமாக இருந்துவிட்டு உங்கள் மீது குற்றம் சுமத்தியிருந்தால் அது தவறுதான்.
    ஆனால் ஜப்னா முஸ்லீம்என்பது ஒரு சமூகத்தை சார்ந்த ஊடகமாக இருக்கலாம் ஆனால் ஏனையசமுகங்களுடன் தொடர்புடைய செய்திகளை திரிவுபடுத்தி வெளியிடுகிறீர்கள்.அவ்வாறான சாந்தர்ப்பத்தில் நாம்கருத்து தெரிவிக்க தூண்டப்படுகிறோம்.
    நாம் கன்னியமாகவும் நேர்மையாகவும் பதிவிட்டால் அதனைமறைத்து விடும் நீங்கள் தமிழர்களை கேவலப்படுத்தும் இழிவான வார்தை பிரயோகங்களுடன் கூடிய பதிவுகளை சாதாரணமாக வெளியிடுகிறீர்கள்.
    இது தானா உங்கள் ஊடகதர்மம்.?

    ReplyDelete
    Replies
    1. இங்கு பிரசுரிக்கப்படும் பெருமை பீத்தும் விளம்பர செய்திகள் கீழ் பதிவிடும் குதிரைகொம்பு கொள்கையை பற்றி எதுவும் கேட்டால் பதில் என்ன கேள்வியையே பிரசுரிப்பதில்லை

      Delete
  8. Jaffna Muslim ஊடக தர்மத்தை கடை பிடிப்பதாக எல்லாம் கதை விட வேண்டாம். சமீபத்தில் சிங்கள ஆங்கில பத்திரிகைகளே புலி சந்தேக நபர் என்று வெளியிட்ட ஒரு செய்தியை Jaffna Muslim "புலி உறுப்பினர் " என்று செய்தி வெளியிட்டிருந்தது. இலங்கையில் எவ்வளவோ பிரச்சனை இருக்கும் பொழுது இந்தியாவில் எங்கோ மூலை முடுக்கில் நடக்கும் விடயங்களை தாறுமாறாக திரிபுபடுத்தி அவதூறு பரப்புவது ஊடக தர்மமா ?

    ReplyDelete
  9. VoiceSriLanka நீங்கள் குறிப்பிடும் பின்னூட்டமிட அனுமதிக்கும் இந்து ஊடகம் எதாவது இலங்கையில் உள்ளதா ? இருந்தால் குறிப்பிடுங்கள் உங்கள் குற்றச்சாட்டை உண்மையா என பரிசீலிக்கலாம். Jaffna Muslim ஊடகம் முஸ்லீம் மீடியா . நல்லது அப்படியானால் முஸ்லீம் சமய சமூக மேம்பாடு சம்பந்தமான செய்திகளை வெளியிட்டால் பிரச்சனையில்லை. நானும் ஆரம்பத்தில் அப்படிதான் நினைத்தேன் . ஆனால் வெளியிடும் செய்திகளெல்லாம் மாற்று மதத்தவர்கள், இனத்தவர்களை தாக்குவது இழிவுபடுத்துவது . மிகக்கேவலமாக செய்திகளை திரிபு படுத்தி வெளியிடுவது என்பனவற்றையே செய்து வந்துள்ளது.அதுவும் குறிப்பாக இந்து சமயத்தை குறி வைத்து இழிவு படுத்துவதையே முக்கிய நோக்காக கொண்டுள்ளது.

    ReplyDelete
  10. Kumar நீங்களும் குமார் குமரன் மாதிரி அவசரப்பட்டு வார்ததையைவிடவேண்டாம். நான் குமார் குமரன் கூறிப்ப்பிட்ட சமூகம்சாரந்த ஊடகம் என்ற கருத்துக்கான பின்னூட்டம்.

    ReplyDelete

Powered by Blogger.