Header Ads



"குழந்தைகளுக்கான நேரம்"

நாம் எமது குழந்தைகளுக்கு மருந்துகள் எடுப்பதற்காக வைத்தியசாலைக்கு செல்வதாக இருந்தால் கவனிக்க வேண்டியவை.....

வைத்தியசாலைக்கு நாள்தோரும் பல நூறுபேர் வைத்திய தேவைகளுக்காக வருகின்றனர். இவர்களில்  அதிகமானோர் ஏதாவது தொற்று நோய்களுடன் இருப்பதைக்காணலாம்.  அதாவது தொற்று நோய்க் நுண்ணுயிர்களான பக்டிரீயா, பங்கஸ்,வைரஸ்...இன்னும் பல வகையான நுண்ணுயிரிகள் தாக்கத்தின் காரணமாகவே வருகிரார்கள்.

சில தொற்று நோய்கள் சாதாரணமானவை ஆனால் பல தொற்று நோய்கள் ஆபத்தானவையாகும்.

குழந்தையின் நோய் எதிர்கும் சக்தி,நோய்தாங்கும் சக்தி வளர்ந்தவர்ளுடன் ஒப்பிடும்போது குறைவாகும். எனவே இலகுவாக நோய்த்தொற்றுக்கு ஆளாகும் சந்தர்ப்பம் மிக அதிகமாகும். உங்களது குழந்தைகளை வைத்தியசாலைக்கு அவசியம் கொண்டுவரும் சந்தர்பத்தில் பின்வரும் விஷயங்களை தயவுசெய்து  கவணத்தில் கொள்க....

01- நோயாளியான குழந்தையை மாத்திரமே அழைத்தது வர வேண்டும், மேலதிகமாக சிறு குழந்தைகளை கூடவே அழைத்துவர வேண்டாம். அதாவது வைத்தியசாலைக்கு நோயாளர்கள் மாத்திரமே வருகிறார்கள். எனவே குழந்தைகளுக்கு இலகுவாக நோய் தொற்றுவதற்காண சந்தர்ப்பம் மிக அதிகம்.

02- குழந்தைகள் வைத்தியசாலையில் கூடவேவைத்திருக்கவும். உபகரணங்களைக் தொட்டு விளையாடுவதை தவிர்கவும்.
அதாவது நோய்யாக்கிகள் மேற்படி உபகரணங்களில் அதிகம் காணப்படும். எனவே இலகுவாக நோய்கள் தொற்றுவதற்கு அதிக சந்தர்பம் உண்டு.

03- நோயாளிகளைப் பார்வையிடுவதட்காக வருவதாக இருந்தால், தயவு செய்து குழந்தைகளை அழைத்துவரவேண்டாம்.

04- மருந்துகள் எடுப்பதாக இருந்தால், பொதுவாக திரவ மருந்துகளே தருவார்கள். எனவே பாணி போத்தல்கள் எடுக்க மறந்திடவேண்டாம்.
05-குழந்தைகளுக்கு கொடுக்கின்ற மருந்தின் பெயர், கொடுக்கும் அளவு, கொடுக்கும் நேரிடைவெளி கவணமாக குறித்துக்கொள்ளவும். சிலவேளை மேலதிக சிகிச்சைக்கு அவசியமாகும்.

06- இருமுகின்ற நோயாளியின் அருகில் இருப்பதை தவிர்கவும். இரும்கின்றவர் தயவுசெய்து கைக்குட்டையை பயன்படுத்தவும்.

07- வைத்தியசாலையில் செலவிடும் நேரத்தைக் இயன்றவரை குறைத்துக்கொள்ளவும்.

08-பாணி போத்தல்கள் பிளஸ்டிக் அல்லாமல் கண்ணாடி போத்தலாக இருக்க வேண்டும் .....

நன்கு கழுவியதன் பின்னர் நீரில் இட்டு (போத்தல்+மூடி)  அவிக்கவும். பின்னர் சிரிய வெள்ளைப் பேப்பரை ஒட்டி எடுத்து வரவும். மருந்தாளரிடம் அவசியம் மருந்தின் பெயர், பாவிக்கும் முறை எழுதி வாங்கவும்.

09-வைத்தியசாலைக்கு வந்தபோது குழந்தைக்கு அணிந்த ஆடைகளை உடனே துவைக்கவும்.

வைத்தியசாலைக்கு வருகின்ற அதிகமான குழந்தைகள் தொற்று நோய்களினால் வருகின்றனர். எந்த நிலையிலும் கிருமிகள் தொற்றாத பாதுகாப்பான முறைகளை தயவுசெய்து பின்பற்றவும்.

-MNM.Nashath Pharmacist-

No comments

Powered by Blogger.