Header Ads



மாளி­கா­வத்தை மைய­வாடி காணி, சிங்களவரால் ஆக்­கி­ர­மிப்பு - தொடருகிறது அநீதி

-விடிவெள்ளி ARA.Fareel-

மாளி­கா­வத்தை மைய­வாடி காணி ஆக்­கி­ர­மிப்பு மற்றும் அக்­கா­ணியில் பெரும்­பான்மை இனத்­தவர் ஒருவர் நிர்­மா­ணித்து வரும் கட்­டடம் தொடர்­பான விவ­காரம் சூடு பிடித்­துள்­ளது. 

இந்த சட்­ட­வி­ரோத கட்­ட­டத்­துக்கு எதி­ராக முன்னாள் மேயர் முஸம்­மிலின் பத­விக்­கா­லத்தில் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்த வழக்கு அவ­ரது பத­விக்­கா­லத்தின் பின்பு நிய­மிக்­கப்­பட்ட மாந­கர ஆணை­யா­ள­ரினால் வாபஸ் பெறப்­பட்­டமை தொடர்­பாக இலங்கை முஸ்லிம் மத உரி­மைகள் சங்கம் மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­த­பா­விடம் முறை­யிட்­ட­தை­ய­டுத்து அவர் மாந­கர சபை ஆணை­யாளர் வீ.கே அநு­ர­வையும் இலங்கை முஸ்லிம் மத உரி­மைகள் சங்க பிர­தி­நி­தி­க­ளையும் கலந்­து­ரை­யா­ட­லுக்கு அழைத்­துள்ளார்.  

இது தொடர்­பி­லான கலந்­து­ரை­யாடல் மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­த­பா­வுக்கும் இலங்கை முஸ்லிம் மத உரி­மைகள் சங்க பிர­தி­நி­தி­க­ளுக்கும் இடையில் கடந்த புதன்­கி­ழமை அமைச்சில் இடம்­பெற்­றது. 

குறிப்­பிட்ட வழக்கு மேல் மாகாண முத­ல­மைச்­சரின் வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்­கவே வாபஸ் பெறப்­பட்­ட­தாக கொழும்பு மாந­கர ஆணை­யாளர் தெரி­வித்­த­தாக இலங்கை முஸ்லிம் மத உரி­மைகள் சங்­கத்தின் தலைவர் எம்.அஸ்லம் ஒத்மான் தெரி­வித்தார். 

இலங்கை முஸ்லிம் மத உரி­மைகள் சங்­கத்தின் பிர­தி­நி­திகள், முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீ­மையும் கடந்த புதன்­கி­ழமை அமைச்சில் சந்­தித்து மாளி­கா­வத்தை மைய­வாடிக் காணியில் சட்ட விரோ­த­மாக பெரும்­பாமை சமூ­கத்­த­வ­ரான உபாலி ஜய­சிங்­க­வினால் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும் கட்­டடம் தொடர்பில் முறைப்­பாடு செய்­தனர். 

அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமை ‘விடி­வெள்ளி’ தொடர்பு கொண்டு இது தொடர்பில் வின­வி­ய­போது ‘அமைச்சர் பைசர் முஸ்­த­பா­வுடன் மேற்­கொள்ள வேண்­டிய சட்ட நட­வ­டிக்­கைகள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­யுள்­ள­தா­கவும் இதற்கு எதி­ராக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் மூலம் வழக்­கொன்­றினைத் தாக்கல் செய்­ய­வுள்­ள­தா­கவும் தெரி­வித்தார். 

பிர­தமர் ரணி­லுக்கு கடிதம் 
மாளி­கா­வத்தை மைய­வா­டிக்­காணி கடந்த காலத்தில் தனியார் ஒரு­வ­ரினால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்டு கட்­டடம் ஒன்று நிர்­மா­ணிக்­கப்­ப­டு­வ­தா­கவும் கட்­ட­டத்­துக்குச் சொந்­தக்­காரர் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோதா­பய ராஜபக் ஷவின் நண்பர் என்­பதால் நீதி நிலை­நாட்­டப்­ப­ட­வில்­லை­யெ­னவும் தற்­போ­தைய நல்­லாட்சி அரசில் நீதியை நிலை­நாட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்­ளும்­ப­டியும் இலங்கை முஸ்லிம் மத உரி­மைகள் சங்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி பிர­த­ம­ருக்கு கடிதம் ஒன்­றினை அனுப்பி வைத்­தி­ருந்­தது. 

சங்­கத்தின் தலைவர் எம்.அஸ்லம் ஒத்மான் அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் மேலும் தெரி­விக்கப் பட்­டுள்­ள­தா­வது, மைய­வாடி காணியை அப­க­ரித்து சட்ட விரோ­த­மாக கட்­ட­ட­மொன்­றினை நிர்­மா­ணித்து வரும் உபாலி ஜய­சிங்­க­வுக்கு எதி­ராக நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து தடுக்க முயற்­சித்த போதும் முடி­யாமற் போனது. அவர் அப்­போ­தைய பாது­காப்புச் செய­லா­ளரின் நண்­ப­ராக இருந்­ததே இதற்குக் கார­ண­மாகும்.

வழங்­கப்­பட்­டி­ருந்த கட்­டட நிர்­மாண அனு­ம­திப்­பத்­திரம் 2013 ஆம் ஆண்டு காலா­வ­தி­யாகி விட்­டது. அனு­ம­திப்­பத்­திரம் புதுப்­பிக்­கப்­ப­டாது தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு வரை கட்­டட நிர்­மாணப் பணிகள் தொடர்ந்­தன.

இதற்கு எதி­ராக நாம் பல எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தாலும் மாந­கர சபை அதி­கா­ரிகள், மாளி­கா­வத்தை பொலிஸ் சுற்­றாடல் பிரிவு இத­னைக்­கண்டு கொள்­ள­வில்லை. இதற்குக் காரணம் நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­ச­பையே எனக்­க­ரு­து­கிறோம். 

2016 ஆம் ஆண்டு ஆரம்­பத்தில் மாளி­கா­வத்தை மைய­வாடிக் காணி சட்­ட­வி­ரோத கட்­டடம் தொடர்­பாக கொழும்பு மேய­ரிடம் பல­கட்ட பேச்சு வார்த்­தை­களை நடத்­தினோம். 

இத­னை­ய­டுத்து கொழும்பு மாந­கர சபை சட்­ட­வி­ரோத கட்­டட நிர்­மா­ணப்­ப­ணி­களை நிறுத்­தும்­ப­டியும் கட்­ட­டத்தை உடைக்க உத்­த­ர­விடும் படியும் கோரி நகர அபி­வி­ருத்தி அதி­கார சபையின் 28 ஏ (3) ஆம் பிரிவின் கீழ் வழக்­கொன்­றினை தாக்கல் செய்­தது. 

கடந்த மே மாதம் 20 ஆம் திகதி வழக்­கினை விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொண்ட கொழும்பு நீதிவான் நீதி­மன்றம் கட்­டட நிர்­மா­ணப்­ப­ணி­க­ளுக்கு தடை விதித்து விசா­ர­ணையை ஜுன் மாதம் 8 ஆம் திக­திக்கு ஒத்­தி­வைத்­தாலும் வழக்கு விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வில்லை. 
இதை­ய­டுத்து கடந்த ஜுன் 15 ஆம் திகதி இரு தரப்பும் நீதி­மன்­றுக்கு தமது எழுத்து அறிக்­கை­களைச் சமர்ப்­பித்­தன. தீர்ப்பு வழங்­கு­வது ஜூலை 27 ஆம் திக­திக்கு ஒத்­து­வைக்­கப்­பட்­டது.

என்­றாலும் அன்­றைய தினம் நீதிவான் சமு­க­ம­ளிக்­கா­மையால் பதில் நீதிவான் தீர்ப்பு வழங்­கு­வதை ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதிக்கு ஒத்­தி­வைத்தார். அன்­றைய தினம் எமது சட்­டத்­த­ர­ணிகள் நீதி­மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர். அன்றைய தினமே குறிப்பிட்ட வழங்கினை கொழும்பு மாநகர சபை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளதாக நீதிவான் அறிவித்தார். 

இந்நிலையில் இது விவகாரத்தில் நீதி பெற்றுத்தரும்படி வேண்டுகிறோம் என இலங்கை முஸ்லிம் மத உரிமைகள் சங்கம் பிரதமரை வேண்டியுள்ளது. 

மாளிகாவத்தை மையவாடிக் காணி கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நிர்வாகத்தின் கீழ் இருக்கின்றது. இப்பள்ளிவாசலுக்கு புதிய நிர்வாக சபையொன்று நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.  

1 comment:

  1. முஸ்லிம்கள் வழக்குகளுடன் ஜனநாயகமுறையான ஆர்ப்பாட்டமொன்றையும் முன்னெடுக்க வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.