October 08, 2016

ஜனாதிபதி மைத்திரிபால கவலைப்படுவார் - அடுத்த ஆட்சி, தன்னுடையதுதான் என்கிறார் மஹிந்த

உங்களுக்கு எது தேவையோ அதனைத்தர நான் தயாராக இருக்கின்றேன் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

இரத்தினபுரியில் இன்று -08- நடைபெற்ற கூட்டு எதிர்க் கட்சியின் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் மக்கள் யாரும் பயப்படவேண்டாம் எம்மிடம் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் எம்மிடம் வந்து இணைந்து கொள்வார்கள். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை கூடிய விரைவில் அவர்கள் எம்மிடம் வந்து சேரவேண்டிய நிலை ஏற்பட்டு விடும.

இதேவேளை தற்போது நல்லாட்சி என்ற பெயரில் மோசமான ஆட்சியே நடைபெற்று வருகின்றது. அடுத்த ஆட்சி ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சி தலைமையிலேயே என்பதனை நான் உறுதியாக கூறிக்கொள்கின்றேன்.

மூழ்கப்போகும் கப்பலில் எவரும் பயணிக்க விரும்ப மாட்டார்கள் அதனால் அடுத்த ஆட்சி கூட்டு எதிர்க்கட்சியின் ஆட்சியே எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மைத்திரியும் ரணிலும் இணைந்து நாட்டை துண்டுகளாக உடைக்க முயற்சித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதியான நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களை புலனாய்வுப் பிரிவினர் பின் தொடர்கின்றனர். தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. எமது வீடுகளுக்கு எதிரிலும் பொலிஸ் பிரிவை போட்டு, அங்கு வந்து செல்பவர்களின் பட்டியலை தயாரிக்கின்றனர்.

நாற்காலி ஒன்றை கொண்டு வந்து அதில் வைத்து எழுதிக் கொள்ளுமாறு நான் கூறினேன். நாங்கள் இரகசிய சதித்திட்டங்களை தீட்ட மாட்டோம். வெளியில் இருந்தே விளையாட்டு ஆடுவோம்.

ஜனநாயகத்தை மதித்து வெளியில் இருந்து கொண்டே தாக்குவோம். இந்த சான்றுதலை எம்மால் தர முடியும். இரவில் அப்பம் சாப்பிட்டு விட்டு அவற்றை செய்ய மாட்டோம்.

படையினர் காப்பாற்றிய நாட்டை பிரித்து அழிக்க விடாமல பாதுகாக்க வேண்டும். பண்டாரநாயக்க ஆரம்பித்த கட்சியை யானையின் பின்னால் தொங்க விட்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த கூட்டத்தை பார்த்தால், பவித்ராவை ஏன் விலகினோம் என்று கவலைப்படுவார். உங்களுக்கு தேவையானதை வழங்க நான் தயார்.

நாடாளுமன்றத்தில் தலைகளை மாற்றுவது மிகப் பெரிய காரியமல்ல. நீண்டகாலம் செல்வதற்கு முன் அது நடக்கும்.

4 கருத்துரைகள்:

போடா நரி வாயா நீ தான் கவலைபட போகிறாய் இன்ஷா அல்லாஹ்

ஆசாமிக்கு மனநோய் பிடித்திருப்பது உறுதியாகிவிட்டது.இன்னமும் ஆசாமியை விட்டுவைத்தால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் வீண் ஆபத்து ஏற்படும் என்பதை இப்போதாவது விளங்கி அதற்கு ஏற்ப தற்போதுள்ள அரசு தெரிந்து கொண்டால் மென்மேலும் அழிவும் அராஜகமும் நடைபெறுவதை த்தடுக்க முடியும்.

இராஜபக்‌ஷா இதற்கு முன்னால் நீயும் உனது கூட்டமும் தோக்கடிக்கப்பட்ட இரண்டு தேர்தலிலும் இந்த பைதங்கா பவித்ரா,காய்ந்த பூசணிக்காய் வாசு நானயக்கார,ஒட்டுன்னி வீரவன்ச,மேலும் தற்போது உன்னுடன் இருக்கும் கசுமாலி அலிபாபா திருடர்கள் அனைவரும் உன்னுடன்தான் அப்போதும் இருந்து எதை புடுங்கினார்கள் நீ இப்போதும் எட்டாக்கணிக்கு ஆசைப்பட்டு ஆகயக்கோட்டை ஆட்சியில் கட்டுவதால் என்ன பயன்,இந்த திருடர்களால் உனக்கு என்ன உதவி செய்யமுடியும் 3ம் தடவையும் உனக்கும் உனது ஒட்டுன்னிகளுக்கும் விழிப்புனர்வுள்ள மக்கள் பாடம் சொல்லி தருவார்கள்!

உனது ஆட்சி காலத்தில் எங்கள் கடனை மூன்று மடங்கால் பெரிதாக்கி விட்டுளாய் தற்போது எனது நாட்டின் கடன் சுமார் 65 பில்லியன் அமெரிக்க டொலர் ஆகிவிட்டது இதையெல்லாம் எங்கடா கொண்டு ஒளித்துவைத்துள்ளாய் 10 வருடமாய் மக்களுக்கு எதையும் கொடுக்காமல் நாட்டின் வளங்களையெல்லாம் நீயும் உனது சகோதரர்களும்,அல்லகைளும் ஆட்டையை போட்டுள்ளதால் இனி மக்களுக்கு கொடுக்க எந்தவளமும் நாட்டில் இல்லை மீண்டும் மக்களுக்கு பம்மாத்து காட்டாதே!

Post a Comment