Header Ads



மட்டக்குளி படுகொலை, சந்தேகநபர்கள் அடையானம் காணப்பட்டனர்


மட்டக்குளி சமித்புர பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பாதாள உலக குழுவை சேர்ந்த இரண்டு தரப்பு உறுப்பிர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் முடிவென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த மேலும் மூவர் தற்போது வரையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொலிஸாரின் ஆலோசனைக்கமைய கொழும்பு குற்ற தடுப்பு பிரிவு, இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

நேற்று இரவு 7.30 அளவில் மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமித் புர பிரதேசத்தில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதில் 7 பேர் பாரிய காயமடைந்துள்ள நிலையில் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களுக்குள் ஒருவரான ஆர்.பீ.நுவன் சன்ஜீவ அல்லது “சுட்டி உக்குன்” எனப்படும் 29 வயதுடைய நபர் “ஆமி சம்பத்” என்ற பாதாள உலக குழு உறுப்பினருக்கு நெருக்கமானவர் என தெரிவிகக்ப்படுகின்றது. அத்துடன் “சன்க” என்ற பாதாள உலக குழு உறுப்பினருடனும் தொடர்பு வைத்திருந்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த துப்பாக்கி சூட்டில் 24 வயதுடைய ரங்க பேரரா என்ற 26 வயதுடையவரும், 26 வயதுடைய தெனுவன் என்பவரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த மற்றவர் 29 வயதுடைய மொஹமட் மவுன் என்பவராகும்.

சம்பவத்தில் கடுமையாக காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்குள் சாமர சந்தருவன் என்ற நபர் உள்ளார். அவர் உயிரிழந்த ஆர்.பீ.நுவனின் சகோதரர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் காயமடைந்த ஸ்ரீகாந்த என்பவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அத்துடன் இசாம் மொஹமட் என்பவரும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் மனித கொலைகளுக்கு தொடர்புடையவர் என பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு பாதாள உலக குழு உறுப்பினர் என கூறப்படும் ரொஷான் என்பவரின் தந்தை சிலரினால் வெட்டி கொலை செய்யப்பட்டிருந்தார். அந்த கொலை நேற்றைய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ஆர்.பீ.நுவன் சன்ஜீவ என்பவரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

அவர் சில காலம் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னரே விடுதலையாகி வந்துள்ளார்.

ரோஷான் என்பவரின் தந்தை கொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினை பெரிதாகியமையினால் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.