October 02, 2016

"பிறர் மானம் காப்போம்"


முஹம்மது கைஸான் (தத்பீகி)

மனிதனின் மானம் வானம் போல் பெரியது. மானத்திற்கு முன்னால் மனிதனின் உயிர் மற்றும் உடமைகள் அத்திப்பழத்தின் விதையை விடவும் சிறியவை. மானம் காப்பதும் மரியாதை கேட்பதும் மனிதனின் குருதியில் ஊரிய குணாதிசியங்கள். மானம் இழந்தவன் தன் உயிரை இழந்தான்' என்பார்கள் நம் முன்னோர்கள். மானம் மலையேரும் போது மனிதன் தற்கொலை செய்து கொள்கிறான் அல்லது சமூகத்தை விட்டும் ஓடி ஒழிந்து கொள்கிறான். தன்மானம்; காப்பதற்காக தன் சொத்து சுகங்களைக்கூட தியாகம் செய்யும் அளவுக்கு மனிதன் தன்மானத்தை பெரும் செல்வமாக மதிக்கின்றான். ஆதி மனிதர்களான ஆதம் அலைஹிஸ்ஸலாம், ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் ஆகிய இருவரும் சுவர்க்கத்தில் தங்க வைக்கப்பட்ட போது இறை கட்டலையை மீறினார்கள் அதன் விலைவால் அவர்களின் வெட்கத்தலங்கள் தெரிந்தன. உடனே இருவறும் பொங்கி எழுந்து நாணத்துடன் தங்கள் மானத்தை சுவனத்தின் இலை தழைகளைக் கொண்டு மறைக்க விலைந்ததாக குர்அன் கூறுகின்றது.

''அவர்களிருவரும் அம்மரத்தினை சுவைத்தபோது அவர்களின் வெட்கத்தலங்கள் அவர்களுக்கு தெரிந்தன. அவ்விருவரும் சுவர்க்கத்தின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்.'' (அல்குர்ஆன்: 7:22)

எனவேதான் இஸ்லாம் மனிதனின் உணர்வுகளுக்கு அதிகம் மதிப்பளித்து மனிதனின் மானத்தை உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்கின்றது. மனிதனின் கற்புக்கும் உயிருக்கும் உடமைக்கும் மான மரியாதைக்கும் இஸ்லாம் பல் வேறு வழிகளில் பாதுகாப்பு அரணை வழங்குகியுள்ளது. இஸ்லாம் மனிதனின் கண்னியத்தை காத்ததைப் போன்று உலகச்சமயங்களில் வேறு எந்தச்சமயங்களும் அவனது கண்னியத்தை காத்து அவனது சாந்தமான வாழ்வுக்கு உத்தரவாதம் வழங்கவில்லை.

    புனித மிக்க மானமும் புனித மிக்க கஃபாவும் :   
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னுடைய இறுதி ஹஜ்ஜின் போது, தனது நன்நெறித் தோழர்களுக்கு ஆற்றிய உரையில் பின் வருமாறு குறிப்பிட்டார்கள்:

'இந்த மாதமும் இந்த புனிதமிக்க மக்கமா நகரமும் இந்த நாளும் எப்படி புனிதமானதோ அவ்வாறே ஒரு முஸ்லிமின் கண்ணியம் உயிர் உடமைகள் புனிதமானவை. ஒரு முஸ்லிமுடைய கண்ணியம் அவனுடய இரத்தம் அவனுடைய சொத்து-செல்வங்கள் மற்ற முஸ்லிம்களுக்கு ஹராமாகும. (அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : புகாரி 1652)

மனிதனின் கண்னியத்தை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்கா நகரத்தின் புனிதத்தன்மைக்கு இனையாக உவமித்திருப்பது மனிதனின் மானம் எவ்வளவு பெருமானம் மிக்கது என்பதையே காட்டுகின்றது. இறை ஆலையமான கஃபாவையும் அதைச்சூலவுள்ள புனிதப்பகுதியையும் மதிப்பது எவ்வாறு கடமையோ அவ்வாறே தன் சகோதர முஸ்லிமின் கண்ணியத்தை பேணுவதும் கடமையாகும் என்பதை நபிகளாரின் உவமை உணர்த்துகின்றது. மக்காவுக்குச் செல்லும் முஸ்லிம்கள் ஒரே விதமான வெள்ளை ஆடை தரித்து, தங்களுக்கிடையே எந்த வித நிற, இன மொழி பேதத்தையும் ஏற்படுத்தாமல் கஃபாவை வலம் வருகின்றனர். சண்டை சச்சறவு இல்லாமல் பயிர் பச்சைகளைக் கிள்ளாமல் உயிர்ப் பிராணிகளை வேட்டையாடாமல் அதன் புனிதத்துவத்தை மதிக்கின்றனர்.

இவ்வாறு மக்கா நகரத்தின் புனிதத் தன்மையை மதிக்கும் கணிசமான முஸ்லிம்கள், தன் சகோதர முஸ்லிமின் மானம், மரியாதை விடயத்தில் அக்கரை செலுத்துவதில்லை. இன்னும் சொல்லப்போனால் தூங்கும் போது கிப்லாவை நோக்கி கால்களைக் கூட நீட்டக் கூடாது(?) என எள்ளை கடந்து அதன் புனிதத்தை மதிக்கும் முஸ்லிம்கள் தன் சகோதர முஸ்லிமின் மானம் மரியாதைவிடயத்தில் கால் தூசு அளவு கூட அக்கறை செலுத்துவதில்லை. காரணம் மக்கா நகரத்தின் புனிதத்தை உணர்ந்த இவர்கள், மனிதனின் கண்ணியம் எவ்வளவு புனிதமானது என்பதை உணரவில்லை. அல்லது அவர்களுக்கு உணர்த்தப்படவில்லை. ஒரு முஸ்லிமின் கண்ணியத்திலும் மானம் மரியாதையிலும் அத்து மீறுவது மக்கா நகரத்தின் புனிதத்தைக் கெடுப்பதற்கு ஈடாகும் என்பது இந்த நபி மொழியின் சாறமாகும். எனவே, இதயத்தில் ஈமான் உள்ள எந்த முஸ்லிமும் தனது சகோதர முஸ்லிமின் மான மரியாதையில் விளையாடத் துணிய மாட்டான்.

    மானம் உயிரை விட புனிதமானது :    
யார் தன் பொருளை பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவர் ஷஹீதாவார்.யார் தன் குடும்பத்தைப் பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவர் ஷஹீதாவார்.யார் தன்னைப் பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவர் ஷஹீதாவார்.யார் தன் மார்க்கத்திற்காக கொல்லப்படுகிறாரோ அவரும் ஷஹீதாவார். 'என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பர: ஸஈத் இப்னு சைத் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : திர்மிதி 4772, நஸாஈ 4095)

இஸ்லாம் எந்தளவு மனிதனின் மானத்திற்க்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்பதற்கு இந்த நபி மொழி சிறந்த எடுத்துக்காட்டாகும். ஒரு முஸ்லிம் தன்னுடைய மானம்மரியாதையை தன் இந்நுயிரை விட மேலாக மதிக்க வேண்டும். ஒரு முஃமின் எந்நிலையிலும் தன் மானத்தை இழந்து விடக்கூடாது. தன் மானம் பறிபோக நேறிட்டால் அதற்காக சண்டையிட்டாவது தன் கண்ணியத்தைக் காத்துக் கொள்ள வேண்டும். அந்தச்சண்டையில் அவர் கொள்ளப்பட்டாலும் சரிதான்.அவருக்கு ஷஹீதின் நன்மை கிடைக்கும் என இஸ்லாம் கூருகின்றது. ஒரு மனிதனின் மானத்தில் கை வைப்பது அவனை கொலை செய்ததற்கு நிகரான குற்றம் என்பதை இந்த நபி மொழி உணர்த்துகின்றது. இதிலிருந்து மானமிழந்து மறியாதையற்று நடைப்பினமாக வாழ்வதை விட கண்னியத்தோடு மாழ்வதயே இஸ்லாம் வரவேற்கின்றது என்பதை அறியலாம்.

    மானத்தில் கை வைப்பது கொலைக்கு நிகரான குற்றம்  :  
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

பொறாமை கொள்ளாதீர்கள். (பிறரை அதிக விலை கொடுத்து வாங்க வைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை ஏற்றிக் கேட்காதீர்கள்.கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக்கொள்ளாதீர்கள். ஒருவர் வியாபாரம் செய்துகொண்டி ருக்கும்போது மற்றவர் தலையிட்டு வியாபாரம் செய்ய வேண்டாம். (மாறாக) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார்.அவர் தம் சகோதரருக்கு அநீதியிழைக்கவோ அவருக்குத் துரோகமிழைக்கவோஅவரைக் கேவலப்படுத்தவோ வேண்டாம். இறையச்சம் இங்கே இருக்கிறது. (இதைக் கூறியபோது) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது நெஞ்சை நோக்கி மூன்று முறை சைகை செய்தார்கள். ஒருவர் தம் சகோதர முஸ்மைக் கேவலப்படுத்துவதே அவருடைய தீமைக் குப் போதிய சான்றாகும். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மற்றவரின் உயிர் பொருள் மானம் ஆகியவை தடை செய்யப்பட்டவையாகும்.

இதை அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம் 5010)

ஒரு முஸ்லிமின் உயிரை கொல்வது எவ்வளவு குற்றமோ அதே அளவு குற்றத்தை நபிகளார் மான,மரியாதையை கெடுக்கும் விவகாரத்திற்கும் கொடுத்துள் ளார்கள்

1 கருத்துரைகள்:

இரு வாரங்களுக்குமுன்னர் அபதுர்ராஷிக்கின் ஜும்மா உரை ஈவணப்படுத்தப்பட்டுள்ளதும்

Post a Comment