Header Ads



மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு - உண்மையை மறைத்தது பாரிய குற்றமே - பூஜித்த ஒப்புதல்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் சென்ற போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் பொலிஸார் உண்மையை மறைத்தமை பாரிய குற்றம் என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக பரந்த விசாரணைகளை மேற்கொண்டு சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

இரு பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு 11.55 மணிக்கும் 12.05 மணிக்கும் இடையில் காங்கேசன்துறை வீதியூடாக யாழ்ப்பாணத்திலிருந்து சுன்னாகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது கொக்குவில், குளப்பிட்டிப் பகுதியில் அவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் இரு மாணவர்களும் கொல்லப்பட்டமை அறிந்ததே

2 comments:

  1. இந்த நாட்டில் போலீஸ் தரப்பு எப்போ நீதியாகவும் நேர்மையாகவும் செயட்படுகுதோ அப்போ இந்த நாட்டின் 70 வீதமான பிரச்சினை தீர்ந்து விடும்.

    ReplyDelete
  2. I hope MY3 and Ranil will establish the RULE of LAW in this issue and not NEGLECT it.

    Police is to establish peace but this action seems to escalate violence again.

    ReplyDelete

Powered by Blogger.