Header Ads



கம்பஹா மாவட்டத்தில், அல்ஹிலால் கல்லூரி மாணவி முதலிடம் 

2016ம் ஆண்டிற்கான புலமை பரிசில் பரீட்சையில் நீர்கொழும்பு அல்ஹிலால் மத்திய கல்லூரி மாணவி கம்பஹா மாவட்டத்தில் முதலிடம் 

2016ம் ஆண்டிற்கான புலமை பரிசில் பரீட்சையில், பாத்திமா ஆத்திபா நஸ்மீர்   என்ற மாணவியே அதி கூடிய புள்ளிகளை பெற்று கம்பஹா மாவட்டத்தில் முதலாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

நீர்கொழும்பு அல்ஹிலால் மத்திய கல்லூரியில் பயிலும் குறித்த மாணவி 185 புள்ளிகளை பெற்று  பாடசாலை மட்டத்திலும்  கம்பஹா மாவட்டத்திலும் அதி கூடிய புள்ளிகளை பெற்ற மாணவி என்ற சாதனையை படைத்து பாடசாலைக்கு பெருமையை தேடித்தந்துள்ளார்.

இவர் நீர்கொழும்பு லாஸரஸ் வீதியில் வசிக்கும் டாக்டர் நஸ்மீர்-சிஹ்ரானா தம்பதிகளின் அன்பு புதல்வியாவார்.

நீர்கொழும்பு அல் ஹிலால் மத்திய கல்லூரி, நீர்கொழும்பு வலயத்தில் கல்வி ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் சிறப்பான இடத்தை பெற்ற ஒரு பாடசாலையாகும். மாவட்ட ரீதியிலும் இப்பாடசாலைக்கு தனியான மதிப்பும் காணப்படுகின்றமை விசேட அம்சமாகும்.

தற்போது சிறப்பான முறையில் இப்பாடசாலையை வழி நடத்தி வரும் அதிபர் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் பழைய மாணவர்களின்   முயற்சிகளுக்கு இப்பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றனர்.

-முஸாதிக் முஜீப்-

2 comments:

Powered by Blogger.