Header Ads



''ஜெருசலம்'' இலங்கை முஸ்லீம்கள் மத்தியில், உணர்வாளர்களால் திரிபுபடுத்தப்படுகிறது..!

-யு.எச் ஹைதர் அலி-

மறுபுறம் வங்குரோத்து முஸ்லீம் அரசியல் வாதிகளிளால் அரசியல் கோஷமாக்கப்படுகிறது 

முதலில் எமக்கு UNESCO என்றால் என்ன UNESCO வின் கடமை என்ன , UNESCOவினால் எந்த எந்த விடயங்களை செய்ய முடியும் என்ற தெளிவு தேவை. 

ஐ.நா வின் பாதுகாப்பு கவுன்சில் அல்லது மனித உரிமை ஆணையகம் இவற்றை தவிர ஏனைய ஐ. நா கட்டமைப்பில் உள்ள நிறுவனங்களுக்கு ஒரு நாட்டிற்கு எதிராத பிரேரனை நிரைவேற்றப்பட முடியாது.

உண்மையில் UNESCO வில்   கொண்டுவரப்பட்ட பிரேரனை என்ன

கடந்த சில தினங்களுக்கு முன்பு UNESCO வினால் ஜெருசலம் சம்பந்தமாக கொண்டுவரப்பட்ட பிரேரனை

ஜெருசலம் நகரும் அதனை சூழ உள்ள மஸ்ஜிதுல் அக்ஸா மற்றும் ஏனைய வணக்கஸ்தலங்களுக்கும் வரலாற்று ரீதியாக பல வேதங்கள் உரித்துக்கொண்டாடுகின்றன. யூதம், கிறிதவம் மற்றும் இஸ்லாம். எனவே இதன் புனிதத்தையும் புராதனத்தையும் கருத்தில் கொண்டு ஜெருசலத்தை  இஸ்ரேல் இரானுவ ஆக்கிரமிப்பில் இருந்து தளர்த்தி புராதன பாதுகாப்புக்கு உற்படுத்தபட்ட நகராக பிரகடனப்படுத்துவது , அத்தோடு அந்த புனிதஸ்தலங்களுக்கு  தொடர்ந்தும் புராதன அரபு பெயர்களைக் கொண்டே அழைக்கப்படடுவதால் அதன் புராதன தன்மை பாதுகாக்கப்படமுடியும்.   ஏன் என்றால் யூதர்களும் கிறிஸ்தவர்களும் தற்போது  வேவ்வேறு பெயர்களை சூட்ட முற்பட்டிருக்கிறார்கள் இவ்வாறு வெவ்வேறு பெயர் கொண்டு அழைப்பதால் அதன் புராதன தன்மை புதுப்பிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்பதுவே  இங்கு  கொண்டுவரப்பட்ட பிரேரனை.

இலங்கை இங்கு இப் பிரேரனைக்கு வாக்களிக்காமல் சென்றது உண்மை . 

இலங்கை  முஸ்லீம்களுக்கு சொந்தமான இனையத்தலங்கள் அல்லது தமிழ் பத்திரிகைகள்  சொல்வது போன்ற ஒரு பிரேரனை UNESCO வில் கொண்டுவரப்படவில்லை. 

UNESCO விற்கு இந்த தமிழ் பத்திரிகைகளும் இனையத்தளங்களும் , அஸ்வர் ஹாஜியார் போன்ற கோமாளிகள் கூறுவது போன்ற ஒரு   பிரேரனையை கொண்டுவருவதற்கு எந்த உரிமையும் இல்லை அதிகாரமும் இல்லை. 

இங்கு இந்த பிரேரனை  சம்பந்தமான கருப்பொருள் திரிபு படுத்தப்பட்டு அரசியல் ஆக்கப்படுகிறது.

இலங்கையின் கண்டி தளதா மாளிகை அமையப்பட்டுள்ள நகர் பகுதி UNESCO வினால் புராதன பாதுகாப்பு பிரதேசமாக பிரகடப்படுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என உங்களுக்கே தெறியாது. அதை வாசித்த எங்களுக்கும் புரியவில்லை. சரி சில மாதங்களுக்கு முன்பு வெளிவிவகார அமைச்சு யூத அமைப்புகளுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டதே அதற்கும் ஏதாவது எழுதுங்கள்.

    ReplyDelete
  2. ஜெருசலேம் Jesus பிறந்த பெத்தஹம் யிலிருந்து 10 km க்கு உட்பட்ட பகுதியாகும்.
    அதற்குள் எப்படி பலஸ்தீனர்கள் வந்தார்கள்?

    ReplyDelete
  3. Ajan Antonyraj
    Jesus உம் முஸ்லிம் பலஸ்தீனர்களும் முஸ்லிம். அதனால்தான் முஸ்லிம்கள் உரிமை கோருகிறார்கள்.

    ReplyDelete
  4. 10 km தானே பொடி நடையாகத்தான் வந்திருப்பார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.