Header Ads



இஸ்லாமிய நாள்காட்டி முறையைக் கைவிட, சவூதி அரேபிய அரசு முடிவு

சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக இஸ்லாமிய நாள்காட்டி முறையைக் கைவிட சவூதி அரேபிய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான ஒப்புதலை அந்நாட்டு அமைச்சரவை கடந்த வாரம் அளித்தது என்று சவூதி ஊடகங்கள் தெரிவித்தன. அக்டோபர் 1-ஆம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.

ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான "கிரிகோரியன்' கிறிஸ்தவ நாள்காட்டி முறை 16-ஆம் நூற்றாண்டில் அறிமுகமானது. உலகின் பெரும்பாலான நாடுகள் இதனைப் பின்பற்றுகின்றன. சவூதி அரசு இந்த முறையில்தான் நிதி ஆண்டைக் கடைப்பிடித்து வருகிறது. ஆனால் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு இஸ்லாமிய ஹிஜ்ரி நாள்காட்டி முறையைப் பின்பற்றி வருகிறது. ஹிஜ்ரி நாள்காட்டி முறையிலும் 12 மாதங்கள்தான் உள்ளன என்றபோதிலும், மாதத்துக்கு 29 அல்லது 30 நாள்கள் மட்டுமே உள்ளன. இதனால் உலகில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் கிரிகோரியன் நாள்காட்டி அடிப்படையிலான ஆண்டைவிட ஹிஜ்ரி ஆண்டு, கால அளவில் சற்றே குறைவாக உள்ளது.

இதைத் தொடர்ந்து, ஊதியம் வழங்குவதற்கு, கிறிஸ்தவ நாள்காட்டி முறையான கிரிகோரியன் முறையைப் பின்பற்ற சவூதி அரசு முடிவு செய்துள்ளது.

அரசு செலவைக் கட்டுப்படுத்த பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை சவூதி அரசு எடுத்து வருகிறது. சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அந்நாட்டு அமைச்சர்கள், ஆரம்ப நிலை அரசு ஊழியர்களின் ஊதியத்தை 20 சதவீதம் குறைப்பதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது.

தற்போது அந்நாட்டில் தனியார் துறை ஊழியர்களைவிட அரசு ஊழியர் எண்ணிக்கை இரு மடங்காகும். நாட்டின் மொத்த பட்ஜெட்டில் 45 சதவீத அளவு அரசு ஊழியர் ஊதியத்துக்கு செலவிடப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது.

கச்சா எண்ணெய்யை நம்பியுள்ள சவூதி பொருளாதாரம் அதனை சமாளிக்க பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 2030-ஆம் ஆண்டுக்குள் தனியார் துறையின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்ய அந்நாட்டு அரசு திட்டம் வகுத்துள்ளது.

2 comments:

  1. Civil war in Saud's Arabia is in evitable.This could be the start of appearance of mahdi.

    ReplyDelete
  2. சவுதி ஒரு இஸ்லாமிய நாடல்ல இஸ்லாத்தில் எல்லா வெற்றிற்கும் தீர்வு உன்டு சவுதியோ இஸ்லாமிய நாள் காட்டியை விட்டு விட்டு கிரிஸ்தவ நாள் காட்டி இற்கு செல்கிறது கேவலம் சவுதி ஒரு குட்டி அமெரிக்கா

    ReplyDelete

Powered by Blogger.