October 21, 2016

இஸ்லாம் இலங்கையில், தவறாக புரியப்பட்டுள்ளது - றீட்டா

முஸ்லிம்களை தனியான இனமாக கருதி, பிரச்சினைகளை தீர்க்குக - ஐ.நா. விசேட அறிக்கையாளர் ரீட்டா அரசாங்கத்திடம் கோரிக்கை

-​MBM.Fairooz-

இந்த நாட்டு முஸ்­லிம்­­கள் போரி­னாலும் அதன் பின்னர் இடம்­பெற்ற மத வன்­மு­றை­க­ளாலும் கடு­மை­யாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்கள். ஆனால் அவர்­களது பிரச்­சி­னை­கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்­தப்­ப­ட­வில்லை என்­பதை நான் உணர்­கிறேன். எனவே இலங்­கை அர­சாங்கம் முஸ்­லிம்­களை தனியான இனமாக கருதி அவர்களது பிரச்­சி­னைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்­ப­துடன் அதற்­கான பொருத்­த­மா­னதும் விசே­ட­மா­ன­து­மான பொறி­முறை ஒன்றை உரு­வாக்க முன்­வர வேண்டும் என இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட சிறு­பான்மை விவ­கா­ரங்கள் தொடர்பான ஐக்­கிய நாடுகள் சபையின் விசேட அறிக்­கை­­யாளர் ரீட்டா ஐசாக் நதேயா குறிப்­பிட்­டார்.  

இலங்­கைக்கு 10 நாட்கள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்­டி­ருந்த அவர் தனது விஜ­யத்தின் இறு­தியில் கொழும்­பி­லுள்ள ஐக்­கிய நாடுகள் அலு­வ­ல­கத்தில் ஊட­க­வி­ய­லாளர் மாநாடு ஒன்றை நடாத்­தினார். 

இதன்­போது ''இலங்கை முஸ்­லிம்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் தொடர்­பான உங்­க­ளது பிர­தான கண்­ட­றி­தல்கள் என்ன?'' என விடிவெள்ளி எழுப்­பிய கேள்­விக்கு பதில­ளிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டார்.

ரீட்டா ஐசாக் நதே­யா இலங்கை முஸ்­லிம்­களின் விவ­கா­ரங்கள் தொடர்பில் தான் நடாத்­திய சந்­திப்­புகள் குறித்து மேலும் கருத்து வெளியி­டு­கை­யில், 

முஸ்லிம் சிறு­பான்மை சமூகம் எதிர்­நோக்­­கு­கின்ற பல்­வேறு பிரச்­சி­­னைகள் தொடர்பில் எமது சந்­திப்­பு­களில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டன. இவற்­றில் காணிப் பிரச்­சி­னை­கள், இடம்­பெ­யர்­வு மற்றும் மீள்­கு­டி­யேற்­றம் என்­பன பிர­தா­னமான­வை­யா­கும். அத்­துடன் வடக்­கி­லி­ருந்து இடம்­பெ­­யர்ந்த முஸ்­லிம்கள் மற்றும் அவர்­க­ளுக்கு புக­லிடம் அளித்த மக்­களின் பிரச்­சினைகள் குறித்­தும் எனது கவ­னத்­திற்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டன.

எனினும் அர­சாங்­கத்தின் முக்­கி­ய­மான முன்­னெ­டுப்­பு­களில் முஸ்­லிம்­களின் விவ­காரம் உள்­ள­டங்­கப்ப­ட­வில்லை எனும் கவ­லையை பலரும் என்­னிடம் வெளிப்­ப­டுத்­தி­னார்கள்.  குறிப்­பாக போரினால் தமது சமூ­க­மும் கடு­மை­யாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ளதாக முஸ்­லிம்கள் கவ­லைப்­ப­டு­கின்­ற­னர்.

 1990 இல் சுமார் 30000 இற்கும் மேற்­­பட்ட குடும்­பங்கள் வடக்­கு கிழக்­கி­லி­ருந்து வெளியே­­றி­ய­தா­கவும் அவர்­களில் 20 வீத­மானோர் மாத்­தி­ரமே இது­வரை தமது சொந்த இடங்­களில் மீளக்­கு­டி­யே­றி­யுள்­ள­தாகவும் எனது கவ­னத்­திற்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டது. இது மிகப் பெரிய எண்ணிக்­கை­யாகும்.  

முக்­கி­ய­மான பல்­வேறு விட­யங்­களில் முஸ்­லிம்­களின் நலன்கள் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்­லை என்­பதை இது எடு­த்துக் காட்­டு­கி­றது.  எனவே  முஸ்­லிம்கள் தனியான இனமாக  கரு­தப்­பட்டு  அரசாங்­­கத்தின் சகல முன்­னெ­டுப்­பு­க­ளிலும்  கண்­டிப்­பாக உள்­வாங்­கப்­பட வேண்­டியது அவ­சி­ய­மா­கும். முஸ்­லிம்களின் பிரச்­சி­னைகள் தனித்­து­வ­மான கவ­னத்தை வேண்டி நிற்­கின்­ற­ன.

முஸ்­லிம்­க­ளுக்கும் தமிழ் மற்­றும் சிங்க­ள­வர்­க­ளு­க்கு­மி­டை­யி­லா­ன உறவு தொடர்பில் கவனம் செலுத்­தப்­பட வேண்­டி­யுள்­ள­து. அத்­துடன் மத சுதந்­திரமும் மிக முக்­கி­ய­மான விட­யமாகும். பள்­ளி­­வா­சல்கள் மீதான பல தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றுள்­ளன. 

மேலும் இஸ்லாம் பற்­றி பிற மதத்­த­வரின் புரி­தல்க­ளில்  குறை­பா­டு­க­ள் உள்­ள­தாக முஸ்­லிம்கள் கவ­லைப்­ப­டு­கின்­றனர்.   ஏனெனில் பாட­சா­லைக் கல்­வியில் இஸ்லாம் தொடர்பில் பிற மதத்­த­வர்­க­ளுக்குப் போது­மா­ன­ளவு போதிக்­கப்­ப­டு­வ­தில்லை.   இஸ்லாம் என்ற பதம் தவ­றாக விளங்­கப்­பட்­டுள்­ளது. இது ஏதோ ஒரு புள்­ளியில் தமக்கு பாத­­க­மாக அமை­ய­லாம் என முஸ்­லிம்கள் கவ­லைப்­­ப­டு­கின்­றனர்.

குறிப்பாக  திருமணம், மற்றும் விவாகரத்தில்  1951 ஆம் ஆண்டு முஸ்லிம்  திருமண, மற்றும் விவாகரத்தின் சட்டமூலம் கடைப்பிடிக்கப்படுகிறது.   இந்த சட்டமூலமானது  16வயதுக்குக் குறைந்த  பிள்ளைகள்  திருமணம் முடிப்பதற்கு அனுமதிக்கிறது. இது தொடர்பில்  ஆராய்வதற்கு ஏழுவருடங்களுக்கு  முன்னர் அமைக்கப்பட்ட குழு  இன்னும்  தனது அறிக்கையை கொடுக்கவில்லை. 

குறிப்பாக சிறுபான்மை மக்களின் தனிப்பட்ட சட்டங்களான கண்டியன், தேசவழமை, மற்றும் முஸ்லிம் சட்டம் என்பன சர்வதேச  மனித உரிமை  தரங்களுக்கு   உட்பட்டதாக இருக்கவேண்டும்.  

அரசியலமைப்பின் 16ஆவது சரத்தானது  முஸ்லிம்  பெண்களுக்கு பிரச்சினைக்குரியதாக உள்ளதாகவும், புதிய அரசியலமைப்பில் அது உட்படுத்தப்படக்கூடாது என்றும்   வலியுறுத்தப்பட்டது.

அந்த வகையில் அரசாங்கத்திற்கு முக்கியமானதொரு பரிந்துரையை முன்வைக்கிறேன். அதாவது    அரசியலமைப்பின் கீழ் தெளிவான ஆணை, மற்றும் அதிகாரம்,  வளங்களுடன் சிறுபான்மை மக்கள் தொடர்பாக   சுயாதீன ஆணைக்குழுவொன்றை நிறுவுமாறு அரசாங்கத்திற்கு  பரிந்துரை செய்கின்றேன்.

அனைத்து தனிப்பட்ட  சட்டங்களும் குறிப்பாக   1951 ஆம் ஆண்டு  முஸ்லிம்   திருமணம் மற்றும் விகாரத்து சட்டமூலம்  சர்வதேச மனித உரிமை தரங்களுக்கமைய  முஸ்லிம்  சமூகம், மற்றும்  முஸ்லிம் பெண்களின்  ஆலோசனையுடன் மீளாய்வு செய்யப்படவேண்டும்.

6 கருத்துரைகள்:

ஆம் உண்மை இலங்கையில் இஸ்லாம் தவறான புரிதலில் இன்றும் உள்ளது

இதை அல் குர்ஆன் தெளிவாக சுட்டிக் காட்டி கொண்டு சாட்சியாக உள்ளது


சகோதரி சரியாக சொல்லி உள்ளீர்கள்

மற்று மத சகோதரிக்கு தெரிந்த உண்மை இலங்கையில் உள்ள முஸ்லிம் என்று சொல்லி கொண்டு இருப்பவர்களுக்கு இன்னும் புரியவில்லை என்பது வெட்க கேடு

பாடசாலையில் இஸ்லாத்தை ஏனையமதத்தவர் ஏன்கற்க வேண்டும்.இந்து பௌத்தம் கீறீஸ்தவ மதங்களை கற்க முஸ்லீம்கள் தயாரா?

மாஷா அல்வாலாஹ்ன தெளிவான கருத்து அஊல்லாஹ் ஹிதாயத் கொடுக்கட்டும்

ஏற்கனவே முஸ்லீம்கள் ஏனைய மதங்களை கற்றுக்கொண்டு வருவது குமாா் குமாரனுக்கு தொியாது போல.

ஒவ்வொரு முஸ்லிமும் வேதங்களை நம்ப வேண்டும் என்பது நம்பிக்கையில் அல்லாஹ், வானவருக்கு அடுத்து வருவது. இஸ்லாம் உலக மக்களுக்காக இறைவனால் இறக்கி அருளப்பட்டது. அதில் புதிதாக எதனையும் அல்லாஹ் கொடுத்துவிடவில்லை எனவும், முந்திய வேதங்களில் கூறப்பட்டதைத் தவிர என்றும் கூறியுள்ளான்.

மேலும், இஸ்லாம் முன்னைய வேதங்களை உண்மைப்படுத்தி, சாட்சியம் கூறுவதற்காக அருளப்பட்டது என்பதால், அனைத்து வேதங்களையும் அறிவதும், அவற்றைக் கொணர்ந்தவர்கள் பற்றி அறிவது அத்தியாவசியமே!

Post a Comment