Header Ads



ரீட்டா திங்கள் இலங்கை வருகிறார் - முஸ்லிம்களையும் சந்திப்பார் - ஜெனீவாவில் அறிக்கை வழங்குவார்

ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையினர் தொடர்பான சிறப்பு அறிக்கையிடலாளர் ரீட்டா இஷாக் நாடியா பத்து நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் திங்களன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் காரியாலயம் அறிவித்துள்ளது.

சிறப்பு அறிக்கையிடலாளர் ரீட்டா இஷாக் நாடியா இலங்கையில் தங்கிருக்கும் நாட்களில் அரசாங்கம், எதிர்க்கட்சி, சிறுபான்மையினரின் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் விசேட சந்திப்புக்களை நடத்தி கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார். 

அதேவேளை வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களுக்குச் நேரடியாக விஜயம் செய்யவுள்ள அவர் அங்குள்ள சிறுபான்மை சார்பான பல்வேறு பட்ட தரப்புக்களையும் சந்திக்கவுள்ளார். 

மேலும் இந்த விஜயத்தின்போது அவர் இலங்கையில் நிலவும் சிறுபான்மையினரின் அரசியல், சமுக, மொழி, பொருளாதார நிலைமைகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தவுள்ளதோடு தனது விஜயத்தின் பின்னர் விசேட அறிக்கையொன்றை எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுள் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் சமர்ப்பிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. 

பிற்குறிப்பு

ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கிடைத்த நம்பத்தகுந்த தகவல்களின்படி, ரீட்டா இடம்பெயர்ந்து வாழும் முஸ்லிம்களையும் சந்திக்க உள்ளார். இதன்பொருட்டு பறிமாறப்பட்ட தகவல்களும் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கிடைக்கப்பெற்றன.

No comments

Powered by Blogger.