Header Ads



ஹக்கீம், றிசாத், பௌஸி றீட்டாவை சந்திக்கிறார்கள்

-ARA.Fareel-

இலங்கை வருகை தந்­துள்ள சிறு­பான்மை இனங்­களின் பிரச்­சி­னைகள் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் அமைப்பின் விசேட அறிக்­கை­யாளர் ரீட்டா ஐசாக் நதே­யாவை முஸ்லிம் அமைச்­சர்கள் சந்­தித்து முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் தொடர்­பாக கலந்­து­ரை­யாடி தமது கருத்­துக்­க­ளையும் முன்­வைப்­ப­துடன் ரீட்டா ஐசாக் நதேயா இது தொடர்பில் அர­சாங்­கத்­துக்கு அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்க வேண்­டு­மென கோரிக்கை விடுக்­க­வுள்­ளனர்.

நாளை செவ்­வாய்க்­கி­ழமை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்பு மற்றும் நகர திட்­ட­மிடல் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் ஐ.நா. வின் நிபுணர் ரீட்டா ஐசாக் நதே­யாவை சந்­தித்து கலந்­து­ரை­யா­ட­வுள்ளார். 

மேலும் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்­ச­ரு­மான ரிசாத் பதி­யு­தீனும் ரீட்டா ஐசாக் நதே­யாவை சந்­தித்து கலந்­து­ரை­யா­ட­வுள்­ள­தாக அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் சட்­டத்­த­ரணி ருஸ்தி ஹபீப் தெரி­வித்தார்.

மற்றும் தேசிய ஒரு­மைப்­பாடு மற்றும் நல்­லி­ணக்­கத்­திற்­கான இரா­ஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸியும் தான் ரீட்டா ஐசாக் நதே­யாவைச் சந்­தித்து கலந்­து­ரை­யா­ட­வுள்­ள­தாகத் தெரி­வித்தார்.

தனது கலந்­து­ரை­யா­டலின் போது தேசிய ஒரு­மைப்­பாடு மற்றும் நல்­லி­ணக்க அமைச்சு இந்­நாட்டில் தேசிய ஒரு­மைப்­பாட்­டி­னையும் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தையும் உருவாக்குவதற்கு வகுத்துள்ள திட்டங்களைத் தெளிவுபடுத்தவுள்ளதாகவும் கூறினார்.

3 comments:

  1. Hakeem, Please don't cheat Muslims. They have been victimised by you and racists. Bear in mind that none of the Muslims supports to the merger of the north and east.Please understand their feelings and strongly oppose to the amalgamation. Muslims are helpless.They believe that a solution for Mudlims can be effected only by the SLMC.So fear Allah.

    ReplyDelete
  2. இவர்கள் எந்த பிரச்சினையை எடுத்துரைக்க போகிறார்கள் என்பதை கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். மூவரும் இந்த அரசாங்கத்தில் அமைச்சர்கள். ஒரு அரசாங்கத்தின், அமைச்சரவையின் கூட்டு பொறுப்பு என்ற விடயத்தில் இவர்களின் நம்பகத்தன்மை எப்படி இருக்கும்? மாற்று இனத்தவர்களின் பார்வையில் நம் இனத்தின் மீதான நாட்டு பற்று எப்படி பார்க்கப்படும்? போன்ற விடயங்களை கருத்தில் கொள்ளும் தூர நோக்கும், அரசியல் வழிகாட்டல்களையும் இவர்களிடம் எதிர்பார்க்கலாமா?? இந்த செய்தியை வாசிக்கும் வாசகர்களுக்கு என்ன பிரயோசனம் உண்டு??? மக்கள் சிந்திப்பார்களா???

    ReplyDelete
  3. We hope they will fear allah and last day. But current political situation and FCID chargers may play the most part in this talk. Because every one need to clear the name for there future politics.

    ReplyDelete

Powered by Blogger.